மது விற்ற நபர்களை பிடிக்க சென்ற தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் : கும்பலை பிடித்து அடித்து உதைத்த கிராம மக்கள் <!– மது விற்ற நபர்களை பிடிக்க சென்ற தலைமை காவலருக்கு கொலை மிர… –>

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த கும்பலுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அட்டுவம்பட்டி பகுதியில் ஜெய கிருஷ்ணன், சரவணகுமார், ராஜேஷ் கண்ணா ஆகிய மூவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அதனை தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதையடுத்து மது விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்யக்கோரி அப்பகுதி … Read more

அமெரிக்கா : கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, தேவாலயத்தில் 900 முறை மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்த ஏற்பாடு <!– அமெரிக்கா : கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, தேவாலயத்தில்… –>

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாஷிங்டன்-ல் உள்ள நேஷனல் கேத்திட்ரல் தேவாலயத்தில் 900 முறை மணி ஒலி எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் ஒவ்வொரு 1 லட்சம் கொரோனா உயிரிழப்புகளுக்கும், 100 முறை மணி ஒலி எழுப்பி இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்ததை அடுத்து, 900 முறை மணி ஒலி எழுப்பப்பட்டது. இந்த முறை சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்வு நீடித்தது. … Read more

உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி <!– உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க… –>

உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக பிரத்யேக தடுப்பூசியை தயாரிக்க, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக செயலாற்றும் வகையில் பிரத்யேக தடுப்பூசியை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அந்த வகையில், ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க அனுமதிக்குமாறு சீரம் நிறுவனம் கடந்த 6-ந் தேதி விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த முன்மொழிவுக்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு … Read more

சூடு பிடிக்கும் பிரச்சாரம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு.! <!– சூடு பிடிக்கும் பிரச்சாரம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்குசே… –>

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு, காய்கறி, பால் விற்பனை செய்தும் வித விதமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.. கரூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கள் காலில் விழுந்தும், பொன்னாடை போர்த்தியும் வாக்குகளை சேகரித்தனர். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் சிசர் … Read more

கொட்டும் பனிக்கு மத்தியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு மூலம் எல்லை கண்காணிப்பு <!– கொட்டும் பனிக்கு மத்தியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு … –>

உத்தரகாண்டில் கொட்டும் பனிக்கு மத்தியில் பனிச் சறுக்கு மூலம் வீரர்கள் எல்லைக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா, சீன எல்லைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கால் மூட்டு அளவுக்கு கொட்டிக் கிடக்கும் பனியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பனிச்சறுக்கு மூலம் அதிக இடங்களை கண்காணிக்க முடிவதாகவும், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பனிச்சறுக்கில் ஈடுபட வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக … Read more

ஆளுநரின் மதிப்பீடு தவறானது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் <!– ஆளுநரின் மதிப்பீடு தவறானது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் –>

நீட் விலக்கு மசோதா – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு நீட் விலக்கு மசோதா, முன்பு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது – அமைச்சர் நீட் தேர்வு அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது – அமைச்சர் தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்கிறார்கள் – அமைச்சர் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசு தலைவர் நிறுத்தி வைத்தார் – அமைச்சர் … Read more

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் நெதர்லாந்து வீராங்கனை புது மைல்கல் <!– பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் நெதர்லாந்து வீராங்கனை பு… –>

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஆயிரத்து 500 மீட்டர் ஸ்கேடிங் பிரிவில் நெதர்லாந்து வீராங்கனை ஐரீன் வுஸ்ட் தங்கம் வென்றார். 1 நிமிடம் 53 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து ஒலிம்பிக் சாதனை படைத்த ஐரீன், 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் மொத்த குளிர்கால ஒலிம்பிக் தொடர்களில் 5 பதக்கங்களுக்கு மேல் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். அதேபோல் மகளிருக்கான பனிச்சறுக்கு slalom போட்டியில் சுவீடன் வீராங்கனை சாரா ஹெக்டேர் தங்கம் … Read more

கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் <!– கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள… –>

அசாம் மாநிலம் கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள் பிறந்துள்ளன. கஸி பெண் புலி கடந்த வாரம் இரண்டு ஆண் குட்டிகளை ஈன்றதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிதாக பிறந்த 2 புலிக் குட்டிகளையும் சேர்ந்த பூங்காவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு சுல்தான் மற்றும் சுரேஷ் என்ற 2 புலிக் குட்டிகளுக்கு தாயான கஸி தற்போது மேலும் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் … Read more

அமெரிக்காவில் சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்த காரில் சிக்கிய செல்லப்பிராணி பத்திரமாக மீட்பு <!– அமெரிக்காவில் சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்த காரில் ச… –>

அமெரிக்காவின் coloroda மாகாணத்தில் தீப்பற்றி எரிந்த காரில் புகை மூட்டத்தில் சிக்கி தவித்த நாய் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. Douglas County யில் அமைந்துள்ள சாலை ஒன்றில் கார் ஒன்று கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்த வண்ணம் இருந்தது. இதனை அடுத்து காரின் உரிமையாளர் உடனடியாக இறங்கி விட்ட நிலையில் காரில் இருக்கும் தன்னுடைய செல்லப்பிராணியை காப்பாற்றும்படி கதறினார். அப்போது அந்த வழியாக வந்த துணை ஷெரீப் உடனடியாக விரைந்து சென்று காரின் கண்ணாடிகளை தடியால் உடைத்து நாயைப் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி <!– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு புதிதா… –>

நாட்டில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி கடந்த 24 மணி நேரத்தில் 1.80 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 1188 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மரணங்களின் தினசரி எண்ணிக்கை அதிகரிப்பு Source link