நாமக்கல் – திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு <!– நாமக்கல் – திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு –>

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.பட்டணம் பேரூராட்சியின் 6-வது வார்டில் தி.மு.க. பெண் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதிமுக பெண் வேட்பாளர் மணியரசியும், திமுக வேட்பாளர் பத்மா ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மணியரசி நேற்று திடீரென மனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து திமுக வேட்பாளர் பத்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதேபோல் ஒன்றாவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வசந்தி நடேசன் என்பவரும், வேட்புமனுவை திரும்பப் பெற்றதால், … Read more

கனடா தலைநகர் ஒட்டவாவில் அடுத்த 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்கத் தடை <!– கனடா தலைநகர் ஒட்டவாவில் அடுத்த 10 நாட்களுக்கு வாகனங்களின்… –>

கனடா தலைநகர் ஒட்டவாவில் 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்கத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், கனரக லாரி ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களின் ஹாரன்களை நீண்ட நேரத்திற்கு ஒலிரச் செய்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர். இதையடுத்து தலைநகருக்கு ஒட்டவாவில் மாகாண ஆளுநர் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்நிலையில் வாகன ஓட்டிகளின் கைகளுக்கு விலங்கு பூட்டுவது போல் அடுத்த 10 நாட்களுக்கு ஹாரன்களை ஒலிக்க தடை … Read more

கோவா மாநில சட்டசபைக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு <!– கோவா மாநில சட்டசபைக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளி… –>

கோவா சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று வெளியிடுகிறார். கடந்த ஞாயிறு அன்று இந்த தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவால் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பனாஜியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். Source link

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மின்சாரக் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் <!– சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மின்சாரக் கம்பத்த… –>

தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மின்சார கம்பத்தில் கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்தனர். பெரியகுளம் அடுத்த வடுகப்பட்டியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு ஒருவன் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.இதனையறிந்த அப்பகுதி மக்கள் அவனை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மக்களிடமிருந்து அவனை மீட்டனர். விசாரணையில் அவன் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பது தெரியவந்தது. பொது மக்கள் தாக்கியதில் அவனுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்குப் … Read more

நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு <!– நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் … –>

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.  ஹவாலா பணம் உள்ளிட்டவைகள் மூலம் இந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டது, மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரியும் புலி <!– மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிய… –>

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் குடியிருப்பு வளாகத்திற்குள் புலி ஒன்று சுற்றித் திரிவதாக வீடியோ வெளியாகி உள்ளது. ரத்தன்பானி புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் புலி அங்குமிங்கும் சுற்றுவதாக காவலாளி தெரிவித்தார். இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதில், புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, புலியைப் பிடிக்க தீவிர கண்காணிப்பு எடுத்து வருவதாக தெரிவித்தனர். Source link

தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றம் – முதலமைச்சர் <!– தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிற… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக இரண்டாவது நாளாக காணொலி மூலம் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அதில் உரையாற்றிய அவர், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் நழுவ விட்ட வெற்றியை உள்ளாட்சி தேர்தலில் மீட்க வேண்டும் என்றும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்று … Read more

உத்தரபிரதேசத்தில் இன்று பிரதமர் மோடி நேரடி தேர்தல் பிரச்சாரம் <!– உத்தரபிரதேசத்தில் இன்று பிரதமர் மோடி நேரடி தேர்தல் பிரச்ச… –>

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரில் இன்று காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நேரடியாக பிரச்சாரக் களத்தில் இறங்குகிறார். பிரதமருடன், யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் மேடையில் பங்கேற்க உள்ளனர். பொதுக் கூட்டங்களுக்கு தேர்தல்ஆணையம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து பிரதமர் மோடியின் பிரச்சாரம் நடைபெற உள்ளது. பிரச்சார அரங்கில் 1000 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மற்றவர்கள் … Read more

சென்னையில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி.! <!– சென்னையில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் … –>

சென்னை வேளச்சேரியில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இன்று காலை வேளச்சேரி 100 அடி சாலையில் கஸ்தூரி என்பவர் கடைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். சாலையின் இருபுறத்தை சரிவர கவனிக்காமல் கஸ்தூரி சென்ற நிலையில், அவ்வழியாக வந்த ஸ்கூட்டர் ஒன்று அவர் மீது வேகமாக மோதியது. இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கஸ்தூரிக்கு தலையில் பலத்த காயம் … Read more

குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வந்தும் ஏற்க ஓவைசி மறுப்பு – அமித்ஷா தகவல் <!– குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வந்த… –>

ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசிக்குக் குண்டு துளைக்காத காரும், இசட் பிரிவு பாதுகாப்பும் வழங்க அரசு முன்வந்தும் அவர் ஏற்க மறுத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஓவைசியின் கார் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அமித் ஷா, தனது பயணம் பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஓவைசி முன்கூட்டித் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவரைக் கைது செய்து 2 கைத்துப்பாக்கிகள், ஒரு கார் ஆகியவற்றைப் … Read more