லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல்.. ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு <!– லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும… –>

லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை அவைத் தலைவர் வெங்கைய நாயுடு வாசித்தார். அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தியதை அடுத்து, ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு … Read more

காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை ஏன்..? முதல்வர் விளக்கம் <!– காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை ஏன்..? முதல்வர் விளக்கம் –>

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நேரடித் தேர்தல் பரப்புரையைத் தவிர்த்து, காணொலி வாயிலாக மக்களை சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், திமுக-வினர் புதிய வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி, அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்குமாறு கேட்டுக்கொண்டார். மாவட்டம் வாரியாக நடைபெற உள்ள காணொலி கூட்டங்களில் முன்வைக்கப்படும் கருத்துகளை, வீடு வீடாகச் சென்று விளக்கமளித்து, வாக்குகளைச் சேகரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.  Source link

கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதாக மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு ரூ.126 கோடி அபராதம் <!– கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதாக மெர்சிடெ… –>

மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவன கார்களின் கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதற்காக அந்நிறுவனத்துக்கு தென் கொரிய அரசு 126 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஜெர்மன் நாட்டு சொகுசு கார் நிறுவனமான மெர்சிடெஸ் பென்ஸ், தென் கொரியாவில் உள்ள அதன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள 15 டீசல் கார் மாடல்களின் கரிம உமிழ்வை குறைத்து கணக்கிடும் வகையில் அந்த வாகனங்களில் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதாக அந்நாட்டு வர்த்தக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஐரோப்பியத் தரநிலைகளுக்கு ஏற்ப கரிம உமிழ்வுகள் … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் மட்டுமே கட்டாயமில்லை – மத்திய அரசு <!– கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் மட்டுமே கட்டாயமில்லை – மத… –>

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் அட்டை மட்டுமே கட்டாயமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை விவரங்களை கட்டாயம் கோருவதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டையை மட்டுமே அடையாள சான்றாக காண்பிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தக்கூடாது என நீதிபதிகள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, தடுப்பூசி செலுத்துவதற்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, ரேசன் அட்டை உள்ளிட்ட 9 அடையாள … Read more

ஈரோட்டில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது கவனக்குறைவு காரணமாக மோதிய இருசக்கர வாகனம்.! <!– ஈரோட்டில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது… –>

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி  விபத்துக்குள்ளான  சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது… தாயுடன் சாலையை கடக்க முயன்ற போது 8 வயது சிறுவன் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் பலத்த காயங்களுடன் சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதி வாகன ஓட்டியின் கவனக்குறைவு காரணமாக சிறுவன் மீது பைக் … Read more

சீருடை அரசாணையை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – கர்நாடக முதலமைச்சர் <!– சீருடை அரசாணையை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – கர… –>

சீருடை குறித்த அரசின் உத்தரவைப் பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.  கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவியரை அனுமதிக்கப் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் கருத்தைச் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, தனி மனித உரிமைகள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலேயே சீருடை குறித்த அரசின் உத்தரவு … Read more

பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிசென்ற சென்ற இரு இளைஞர்கள் <!– பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிசென்ற சென்ற… –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் இரண்டு இளைஞர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு நேற்றிரவு duke பைக்கில் பெட்ரோல் போட வந்த இரண்டு இளைஞர்கள் 800 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் பரிவர்த்தனைக்காக ஒரு கார்டு வழங்கியுள்ளனர். அதில் பணம் இல்லாததால் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வழங்கிய இளைஞர்கள், அதன் பின் சில்லறை தருவதாக கூறி ஆயிரம் … Read more

முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய சர்வதேச பயணிகளுக்கு பிப்.,21 முதல் அனுமதி – ஆஸ்திரேலியா <!– முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய சர்வதேச பயணிகளுக்கு … –>

பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய சர்வதேச சுற்றுலாப் பயணிகள் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் பிப்ரவரி 21 முதல் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா சர்வதேச பயணிகள் வருகைக்கு கட்டுபாடுகள் விதித்திருந்தது. … Read more

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் வாங்கியதில் 30 லட்ச ரூபாய் வரை முறைகேடு புகார் <!– புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் வாங்கி… –>

புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின் போது கொள்முதல் செய்யப்பட்ட கொரோனா பாதுகாப்பு சாதனங்களில் 30 லட்ச ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக துணை நிலை ஆளுநரிடம் மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். சட்டப்பேரைவை தேர்தலுக்காக வாங்கிய கொரோனா பாதுகாப்பு சாதனங்களில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் தெர்மா மீட்டர், பாதுகாப்பு கவசம், நான்கு சக்கர நாற்காலிகள் குறித்து கணக்குகள் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்ததாகவும், … Read more

மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் ஆளும் கட்சியினருடன் வந்து வேட்பு மனு வாபஸ் <!– மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் … –>

அதிமுக பெண் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் வேட்பாளர் மனு வாபஸ் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 9ஆவது வார்டு அதிமுக பெண் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார் அதிமுக பெண் வேட்பாளர் இந்திராணி பாலமுருகன் கடத்தப்பட்டதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தர்ணா வாடிப்பட்டி அண்ணாசிலை அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணா கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் இந்திராணி, தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் ஆளும் … Read more