ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்ஐஎஸ் கே என்ற அமைப்பைச் சேர்ந்த 50 பயங்கரவாதிகள் சரண் <!– ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்ஐஎஸ் கே என்ற அமைப்பைச் சேர்ந்த 50 பய… –>
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்ஐஎஸ் கே என்ற அமைப்பைச் சேர்ந்த 50 பயங்கரவாதிகள் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்களுக்கு கூடுதல் தலைவலியாக உள்ளூர் கிளர்ச்சியாளர்களும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரும் இருந்தனர். இந்நிலையில் நங்கர்கர் மாகாண அரசிடம் 50 ஐ.எஸ். தீவிரவாதிகள் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் பழங்குடியின மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து 50 பேர் சரணடைந்ததாகவும், பொது மன்னிப்பு அடிப்படையில் தாலிபான்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என மாகாண அரசு தெரிவித்துள்ளது. Source link