சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பராமரிப்பில் வளர்ந்த சவுமியாவின் திருமணம்.! <!– சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாத… –>

நாகையில் 2004-ம் ஆண்டு சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பராமரிப்பில் வளர்ந்த சவுமியாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. இதில் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர். நாகையில் சுனாமியின் போது தாய், தந்தையை இழந்து பாதிக்கப்பட்ட 99 குழந்தைகள் அரசால் துவங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் சவுமியா மற்றும் மீனா ஆகிய குழந்தைகளின் செலவுகளுக்கு பொறுப்பேற்று … Read more

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் <!– பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங… –>

பாரத ரத்னா விருது பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் இன்று காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1929ஆம் ஆண்டு இந்தூரில் பிறந்த லதா மங்கேஷ்கர், திரையுலகில் மராத்தி, இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 இந்திய மொழிகளில் முப்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடிய அவர் இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படுகிறார். திரைத்துறை சாதனைக்காக அவருக்கு 1989ஆம் ஆண்டு இந்திய அரசால் தாதா … Read more

7 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று <!– 7 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 6 ஆயிரத்து 120 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 972 பேருக்கும், கோவையில் மேலும் 911 பேருக்கும், செங்கல்பட்டில் 531 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 23 ஆயிரத்து 144 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 26 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 828 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source … Read more

உத்திரப்பிரதேச ஷிவாலிக் வனப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த யானை <!– உத்திரப்பிரதேச ஷிவாலிக் வனப்பகுதியில் அறுந்து கிடந்த மின்… –>

உத்திரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில் உள்ள ஷிவாலிக் வனப்பகுதியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அந்த மின்கம்பியில் 11 கிலோ வோல்ட் என்ற அளவில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது., மின்கம்பி தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

திருவாரூரில் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நபரால் சலசலப்பு.! <!– திருவாரூரில் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெ… –>

திருவாரூர் மாவட்டத்தில் கடித்த பாம்புடன், ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மன்னார்குடியில் உள்ள அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்த தர்மன், இன்று வீட்டில் குடிபோதையில் படுத்திருந்தார். அப்போது அவரை சாரைப்பாம்பு ஒன்று கடித்ததால், விழித்த அவர், அந்த பாம்பை உயிருடன் கையில் பிடித்துக் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். கையில் பாம்பு உடன் வந்த தர்மனை கண்டதும் மருத்துவமனை ஊழியர்கள் திகைத்து போயினர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்த அவர்கள், தர்மனை … Read more

1000 வது போட்டியில் இந்திய அணி வெற்றி <!– 1000 வது போட்டியில் இந்திய அணி வெற்றி –>

இந்திய கிரிக்கெட் அணி, தனது ஆயிரமாவது போட்டியில் வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால், மேற்கு இந்திய தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், தமிழக வீரர் … Read more

அதிமுகவிற்கு பெரிய பாரம் குறைந்தது போல் உள்ளது – சி.வி.சண்முகம் <!– அதிமுகவிற்கு பெரிய பாரம் குறைந்தது போல் உள்ளது – சி.வி.சண… –>

அதிமுக எந்த நிலையிலும் தனியாக தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கும் என்றும் ஒரு வாரமாக கட்சியினர் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சி.வி.சண்முகம், கடந்த ஒரு வாரமாக அதிமுகவிற்கு பெரிய பாரம் குறைந்தது போல் உணர்வதாக குறிப்பிட்டார். Source link

லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் <!– லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் –>

மும்பையில் காலமான பாடகி லதா மங்கேஸ்கரின் உடலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சிவாஜி பார்க் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.  பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். தீவிரச் சிகிச்சை அளித்தும் பயனின்றி இன்று காலையில் காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் … Read more

பெண்கள் அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் – கமல்ஹாசன் <!– பெண்கள் அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் – கமல… –>

சென்னை மாநகராட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்த அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், பெண்கள் பகுதி நேர அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் என தெரிவித்தார். ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தலைவர்களை தேடுவதை விட்டுவிட்டு, சமூக சேவகர்களை நாம் தேட வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் தக்கவைத்த ஏழ்மையை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரம் … Read more

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய புயலால் பல கிராமங்களில் நிலச்சரிவு.! <!– ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய புயலால் பல … –>

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய Batsirai புயலால், பலத்த மழை காரணமாக பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மக்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சாலைகள் சேதமடைந்த நிலையில், சேற்றில் சிக்கிய வாகனங்களை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடன் அப்புறப்படுத்தினர். மணிக்கு சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. Source link