செல்போன் தயாரிப்பில் இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் <!– செல்போன் தயாரிப்பில் இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும் … –>

செல்போன் தயாரிப்பில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகின் முதன்மை நாடாக உருவெடுக்கும் என மத்திய தொலைத்தொடர்பு, மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஏற்கனவே உள்ள 200 செல்போன் தயாரிப்பு மையங்கள் மூலம் உலகின் 2-ஆவது அதிக செல்போன் தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளதாக கூறிய அமைச்சர், தற்போது அதன் சந்தை மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதெனவும், இந்த துறை 22 லட்சம் வேலை … Read more

செங்கல்பட்டில் சாலையின் தடுப்புக்கட்டையில் ஏறி கவிழ்ந்த கண்டெய்னர் லாரி.! <!– செங்கல்பட்டில் சாலையின் தடுப்புக்கட்டையில் ஏறி கவிழ்ந்த க… –>

செங்கல்பட்டு அருகே, சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி மீது மோதிய கார் குட்டிக்கரனம் அடித்து நின்றது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியை, பின்னால் ரெனால்ட் டஸ்டர் காரில் வந்த நபர் முந்த முயற்சித்துள்ளார். காருக்கு வழி விடுவதற்காக லாரியை ஓட்டுநர் ஓரங்கட்டியபோது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டையில் லாரி ஏறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இதற்கிடையே, கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில், காரை ஓட்டுநர் … Read more

ஆந்திராவில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை.! <!– ஆந்திராவில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் 4… –>

ஆந்திர மாநிலத்தில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் ஒன்று 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையிலான கத்தாழை மீன் சிக்கியது. மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீனை ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆவலுடன் திரண்ட நிலையில் அந்த மீன் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கத்தாழை மீனின் அடி வயிற்றில் உள்ள நெட்டி என்றழைக்கப்படும் காற்றுப்பை … Read more

சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.! <!– சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் துணிக்கடை… –>

சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பாண்டி பஜாரில் உள்ள ரெயின்போ ஆர்கெட் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கி வந்த துணிக்கடையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவ்வழியாக சென்ற மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததனர். அதே … Read more

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் புதர் தீ.. ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்.! <!– ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் புதர் தீ.. ஏராளமா… –>

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் புதர்தீயை அணைக்கும் முயற்சியில் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பெர்த் நகர் அருகே 3 வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட புதர்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் அங்கு உச்சகட்ட அவசர எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறினர். வீட்டில் பற்றிய நெருப்பை அணைக்க முயன்ற நபர் கடுமையான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி.! <!– லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து… –>

மும்பையில் நடைபெறும் லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகளில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். மும்பை சிவாஜி பார்க்கில் லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் இறுதி சடங்குகளில் பங்கேற்க மும்பை வந்தார் பிரதமர் மோடி இறுதி சடங்கில் பங்கேற்று லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் அஞ்சலி Source link

குடிபோதையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் சில்மிஷம்.. பேருந்தில் இருந்து இறக்கி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் <!– குடிபோதையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் சில்மிஷம்.. பே… –>

கும்பகோணத்தில் அரசு பேருந்தில் பயணித்த பெண்களிடம் குடிபோதையில் சில்மிஷம் செய்த நபரை, அடித்து உதைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்றிரவு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் பயணித்த 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பெண்கள், கும்பகோணத்தில் உள்ள தங்களது உறவினர்களிடம் செல்போனில் பேருந்தில் நடந்தவற்றை கூறியதை அடுத்து, கும்பகோணம் நால்ரோடு பகுதியில் பேருந்தை வழிமறித்த பெண்ணின் உறவினர்கள் அந்த நபரை கீழே … Read more

அலைசறுக்கு போட்டியில் இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளி 49 வயது அமெரிக்க வீரர் முதலிடம் <!– அலைசறுக்கு போட்டியில் இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளி 49… –>

அமெரிக்காவின் ஹவாய் தீவில் நடைபெற்ற அலைசறுக்கு போட்டியில் ஏராளமான இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளிய கெல்லி ஸ்லேட்டர் 49 வயதில் சாம்பியன் பட்டம் வென்றார். 1992ம் ஆண்டு, 20 வயதில் உலகச் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், மிகவும் இளம் வயதில் உலகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த ஸ்லேட்டர், அலைசறுக்கில் சாம்பியன் பட்டம் வெல்லும் வயதான வீரர் என்ற சாதனையும் தன் வசம் வைத்துள்ளார். 5 நாட்களில் 50வது பிறந்த நாளை கொண்டாட உள்ள … Read more

அஜ்மீர் தர்க்காவுக்கு மலர்ப்போர்வை வழங்கிய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.! <!– அஜ்மீர் தர்க்காவுக்கு மலர்ப்போர்வை வழங்கிய சிறுபான்மையினர… –>

ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள தர்க்காவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி சார்பில்  சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மலர்ப் போர்வையை வழங்கினார். அஜ்மீரில் தர்க்காவில் உள்ள காஜா மொய்னுத்தீன் சிஷ்டி 810ஆவது உருசு விழா பிப்ரவரி ஒன்பதாம் நாள் நடைபெற உள்ளது. இதையொட்டித் தர்க்காவுக்குப் பிரதமர் மோடி சார்பில் மலர்ப்போர்வை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை மத்தியச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தர்க்கா நிர்வாகத்திடம் இன்று முறைப்படி வழங்கினார்.  Source link

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் <!– லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் –>

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். 80 ஆண்டுக்காலம் பரந்து விரிந்த அவரது இசைவாழ்வில் தனது தேன்குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.  Source link