“அமித்ஷாவின் வருகையின் போது மின்வெட்டு ஏற்பட்டது தற்செயலானது..” – அமைச்சர் செந்தில்பாலாஜி..!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணிகளையும், கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டில் பணிகளையும் அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமித்ஷாவின் சென்னை வருகையின் போது ஏற்பட்ட மின்வெட்டு தற்செயலானது என்றும், துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.  Source link

இந்திய மாணவர்களை நாடு கடத்த கனடா அரசு திட்டம்.. மத்திய அரசின் தலையீட்டால் நாடு கடத்துவதற்குத் தடை

கனடாவில் உயர் கல்வி படிக்கச்சென்ற 700 இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு கனடா தடை விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 பேர் கனடாவில் உயர்கல்வி படிக்கச் செல்ல ஜலந்தரைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர், போலி சேர்க்கை கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றி உள்ளார். இந்த போலி சேர்க்கை கடிதங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதையடுத்து அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு டொராண்டோவில் உள்ள சி.பி.எஸ்.ஏ. என்று அழைக்கப்படுகிற கனடா எல்லை பாதுகாப்பு முகமை நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து … Read more

திருப்பதி அருகே பயணிகள் வேனும், பால் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரு பக்தர்கள் பலி

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பயணிகள் வேனும், பால் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரு பக்தர்கள் உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து அஞ்சேரம்மா கோயில் நோக்கி பக்தர்கள் குழுவினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது புத்தூரில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற பால் வேன், வடமலைப் பேட்டை என்ற இடத்தில் பக்தர்கள் வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்..  Source link

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு..!

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை முதல் நாளே மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு : மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம் Source link

தைவானில் ஒரே நாளில் 24 சீன போர் விமானங்கள் அத்துமீறியதாகக் குற்றச்சாட்டு..!

ஒரே நாளில் 24 சீன போர் விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்ததாக தைவான் குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை சீனாவின் J-10, J-11, J-16, Su-30 ஆகிய போர் விமானங்கள் மற்றும் ஹெச் 6 குண்டு வீச்சு விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்தாகத் தெரிவித்துள்ளது. மேலும் அத்துமீறும் சீன விமானங்களைக் கண்காணிப்பதற்காக போர் கப்பல்கள் மற்றும் நிலத்திலிருந்து ஏவக்கூடிய ஏவுகணை அமைப்புகளையும் தைவான் … Read more

கனிம வளங்கள் ஏற்றிச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களை போலீசார் முன்னிலையில் தாக்க முயன்ற கொள்ளை கும்பல்…!

கன்னியாகுமரி அருகே கனிம வள கொள்ளை கும்பல் ஒன்று, நள்ளிரவில் லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களை போலீசார் முன்னிலையிலேயே தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் சட்டவிரோதமாக லாரிகள் மூலம் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலான லாரிகள் கட்டமைப்புகளை மாற்றி உயரம் அதிகப்படுத்தி அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து அதிக அளவில் கற்கள், ஜெல்லி, பாறை பொடி போன்ற கனிம வளங்கள் ஏற்றி செல்கின்றனர். அந்த … Read more

உக்ரைனின் டாங்கிகளை டிரோன்கள் மூலம் தாக்கி அழித்த ரஷ்ய படைகள்

உக்ரைன் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ரஷ்யாவும் தன் பங்குக்கு அதிரடி தாக்குதல்களை தொடுத்து வருகிறது. உக்ரைன் நிலைகள் மீது தாங்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்நாட்டின் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை தகர்த்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனின் ஆதரவு நாடுகள் வழங்கிய லியோபர்டு ரக டாங்கிகள், பிராட்லி போர் வாகனங்கள் உள்ளிட்டவற்றை தகர்த்துவிட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கு அத்தாட்சியாக உக்ரைன் டாங்கிகள், கவச வாகனங்கள் போன்றவை ட்ரோன்களை மூலம் தகர்க்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களை ரஷ்யா … Read more

தமிழ் மொழியின் தொன்மைக்கு சிறப்பு சேர்த்தவர் பிரதமர் மோடி… 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை – அமித்ஷா

9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்கு 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு பாஜக அரசு என்ன செய்தது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் பா.ஜ.க. ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்ட அவர், மெட்ரோ ரயில் … Read more

அமெரிக்காவில் போலீஸ் மோப்ப நாயை சுட்டுவிட்டு தப்ப முயன்ற தலைமறைவு குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீசார்..!

அமெரிக்காவில் போலீஸ் மோப்ப நாயை சுட்டுவிட்டு தப்ப முயன்ற தலைமறைவு குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். 14 வயது சிறுவனக்கு பாலியல் தொந்தரவு அளித்தது, கொள்ளையில் ஈடுபட்டது போன்ற குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்துவந்த ஜானி ரே ஜாமீன் கிடைத்ததும் தலைமறைவானான். அவனது பதுங்கிடம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மோப்ப நாயுடன் அங்கு விரைந்தனர். புதர்கள் மண்டிய பகுதியில் பதுங்கியிருந்த ஜானி ரே-வை மோப்ப நாய் பிடிக்க முற்பட்டபோது அவன் அதனை துப்பாக்கியால் சுட்டான். … Read more

”மக்களின் நம்பிக்கை தான் மிக பெரிய சொத்து… அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன்” – சச்சின் பைலட்..!

மக்களின் நம்பிக்கை தான் தனது மிகப்பெரிய சொத்து என்றும், அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தௌசாவில் தனது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட் சிலையை திறந்து வைத்து பேசிய சச்சின் பைலட் இவ்வாறு கூறினார். ராஜஸ்தானில் ஊழலுக்கு இடம் இருக்கக்கூடாது என்றும், அரசு பணியாளர் தேர்வாணையம் கலைக்கப்பட்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தனது தந்தை எந்த நிலையிலும் கொள்கை மாறியதில்லை என கூறிய சச்சின் … Read more