ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை கடந்து சென்றது சென்னையின் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
ஒடிசாவின் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் இருப்புப் பாதை சீரமைப்புப்பணிகள் நிறைவு பெற்றன. இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்ட கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 30 கிலோமீட்டர் வேகத்தில் விபத்து நடந்த பகுதியைக் கடந்து சென்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு இருவழித்தடங்களும் சீரமைக்கப்பட்டதையடுத்து வந்தே பாரத் ரயில் உள்பட சுமார் 70 ரயில்கள் மீண்டும் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. Source link