300 பாயாச வீரர்கள்.. அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுந்த பரபரப்புக் காட்சிகள்..!

படைக்கு பிந்தினாலும், பந்திக்கு முந்து என்பார்கள்.. அப்படி முந்திய பெண் வீட்டாரின் இலையில் பாயசம் ஊற்றப்படாததால் சீர்காழியில் பெரும் மோதலே உருவானது..! பாயசத்துக்காக சண்டையிட்டவர்களின் உரிமைப்போர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு… யார்… யாரை அடிக்கிறார்கள் ? என்பதே தெரியாமல்… பாயசத்துக்காக ஆவேசமாக மோதிக்கொள்ளும் இவர்கள் தான் 300 பாயாச வீரர்கள்..! சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பெண் வீட்டார் சாப்பிட பந்தியில் அமர்ந்துள்ளனர். அவர்களில் சிலருக்கு … Read more

வளர்ந்த நாடுகள் சிலவற்றின் தவறான கொள்கைகளுக்கான விலையை வளரும் நாடுகள் கொடுத்து வருகிறது – பிரதமர் மோடி!

வளர்ந்த நாடுகள் சிலவற்றின் தவறான கொள்கைகளுக்கான விலையை வளரும் நாடுகள் கொடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் அவர் வெளியிட்ட காணொளிச் செய்தியில், பெரிய மற்றும் முன்னேற்றம் அடைந்த சில நாடுகள் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தராமல், தங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே நீண்ட காலமாக முன்னுரிமை கொடுத்து வந்ததாக தெரிவித்தார். அத்தகைய நாடுகளின் தவறுகளை பல தசாப்தங்களாக யாருமே தட்டிக் கேட்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போது அத்தகைய நாடுகளிடம் … Read more

இடம் மாற்றப்படும் அரிசிக் கொம்பன்.. வாழ்விடம் பறிப்பால் பரிதவிக்கும் யானை..!

கம்பம் வனப்பகுதியில் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட அரிசிக் கொம்பன் யானைக்கு மணிமுத்தாறு அருகே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது… கேரளாவில் 10 பேரை கொன்ற அரிசி கொம்பன் யானை கடந்த மாதம் 26 ஆம் தேதி தேனி மாவட்டத்திற்குள் நுழைந்தது. இதனால் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது. சண்முகா நதி அணையை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த யானையின் கழுத்தில் ஏற்கனவே மாட்டியிருந்த ரேடார் கருவி மூலமாக தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர், சின்னஓவுலாபுரம் … Read more

“கடன் செயலிகள் மூலம் அதிகம் ஏமாறுபவர்கள் ஐடி ஊழியர்களே”-கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்

லோன் ஆப் மூலம் ஐடி கம்பெனி ஊழியர்கள் அதிகமாக ஏமாந்தது ஆய்வில் தெரியவந்துள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன மற்றும் திருட்டுபோன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் பத்ரி நாராயணன் பங்கேற்றார். சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புடைய 162 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சைபர் கிரைமில் ஆறரை கோடி ரூபாய் அளவிலான பணமோசடி புகார்கள் வந்துள்ளன … Read more

தினசரி 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க போவதாக சவுதி அரேபியா அறிவிப்பு..!

கச்சா எண்ணெய் உற்பத்தியை, நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல்கள் என்ற அளவில் குறைக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அரேபியாவின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் இதனை அறிவித்துள்ளார். ஏற்கனவே தினசரி 2 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு மே மாதம் முதல் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகனின் ஓபெக் கூட்டமைப்பு ஏழு மணி நேரம் சவூதி அரேபியா அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து எண்ணெய் … Read more

போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை – சாக்சி மாலிக்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் மீண்டும் ரயில்வே பணியில் இணைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல், தேசிய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு எதிராக போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளில் சிலர் கடந்த 3-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். இதைத் தொடர்ந்து மூவரும் வாரத்தின் முதல் நாளில் வடக்கு ரயில்வேயில் … Read more

தரமான கல்வி கிடைத்திடும் வகையில், காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக – இ.பி.எஸ். வலியுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைத்திடும் வகையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புமாறு தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அரசு பள்ளிகளில் போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையும் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். பல்வேறு காரணங்களைக் கூறி பல முறை தள்ளிவைக்கப்பட்ட … Read more

பூமிக்குத் திரும்பிய ‘ஷென்ஜோ-15’.. 20 கிலோ மாதிரிகளை பூமிக்கு எடுத்துவந்த விண்வெளி வீரர்கள்..!

6 மாத விண்வெளி பயணத்தை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள், 20 கிலோ எடையுள்ள ஆராய்ச்சி மாதிரிகளை கொண்டுவந்துள்ளனர். பெண்ணின் கரு முட்டை செல்கள், நுண்ணுயிர்கள், புல், நெற்பயிர்கள் போன்றவை விண்கலம் மூலம் டியாங்காங் ஆராய்ச்சி மையத்திற்கு 6 மாதங்களுக்கு முன் ஷென்ஜோ – 15 என்ற விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் அனுப்பி வைத்தனர். விண்வெளியில், புவியீர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாறுபட்ட சூழலில் இருக்கும் போது அவற்றின் பண்புகளில் நேரும் மாற்றங்கள் … Read more

வெனிசுலாவில் வெள்ளம் காரணமாக தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து..12 பேர் பலி..!

வெனிசுலாவின் பொலிவார் மாகாணத்தில் வெள்ளம் காரணமாக தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். எல் கால்லோ பகுதியில் கனமழையால் அந்த சுரங்கம் இடிந்து விழுந்தது. கடந்த சில நாட்களாக அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 112 பேர் சுரங்க இடிபாடுகளில் இருந்து தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக சுரங்கத்தை திறந்து தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். Source … Read more

அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!

கேரளாவில், அலுமினிய பாத்திரத்திற்குள் சிக்கி வலியில் துடித்து கதறி அழுத இரண்டரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அலுமினிய பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட இரண்டரை வயது குழந்தை இஷாமயி இது தான். இந்தக் குழந்தை கேரளாவின் நெய்யாற்றங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் – அமிர்தா தம்பதியரின் மகள். வீட்டில் இருந்த அலுமினிய பாத்திரற்குள் இரண்டு கால்களையும் உள்ளே விட்டு குதிகால் போட்டு அமர்ந்து கொண்டாள் … Read more