ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டது

ஒடிசாவில் தடம்புரண்ட சரக்கு ரயில் ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு அர் ஒடிசாவின் பார்கர் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டது சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் தடம்புரண்ட சரக்கு ரயில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் Source link

மீண்டும் தென்பட்டது 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி..!

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி மீண்டும் பார்வையில் தென்பட்டது. லண்டனில் தென்கிழக்குப் பகுதியில் முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் எனப்படும் இனத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் இரண்டாம் சார்லஸ் மன்னரின் காலத்தில் அரிய வகையாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1925ம் ஆண்டில் இந்தப் பட்டாம்பூச்சி வகைகள் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் தனித்துவமிக்க முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் குறிப்பிட்ட சில இடங்களில் பார்க்கப்பட்டதாக பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்குப் பின் … Read more

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் விபத்து நேரிட்ட இடத்தில், பயணிகள் ரயில் சேவை தொடக்கம்

  ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் விபத்து நேரிட்ட இடத்தில், பயணிகள் ரயில் சேவை தொடக்கம் போர்க்கால அடிப்படையில் தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சரக்கு ரயில் நேற்றிரவு 11 மணிக்கு இயக்கம் வடக்கு நோக்கிய வழித்தட தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவுற்ற நிலையில், பயணிகள் ரயில் இன்று காலை இயக்கம் பாலசோர் அருகே பாஹனகா பகுதியில் குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் சேவை தொடங்கியுள்ளது Source link

ஜப்பானில் 3 நாட்களாக பெய்துவரும் கனமழை.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள்

ஜப்பானில் 3 நாட்களாக பெய்துவரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பமண்டல புயலான மார்வார், நாட்டின் முக்கிய தீவான ஹொன்ஷூவில் கரையை கடந்த நிலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் சுமார் 7 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜப்பானில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனிடையே, நாட்டின் மேற்கு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை … Read more

ஒடிசா ரயில் விபத்து : போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை மேற்கொண்டார். கடந்த 2ம் தேதி ஒடிசாவில் 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் பலியாகினர். இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் வாடிகனில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். Source link

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமை கோரப்படாத 167 சடலங்களின் புகைப்படங்கள் ஒடிசா அரசு வெளியீடு..!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமை கோரப்படாத 167 சடலங்களின் புகைப்படங்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது. பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள இந்த சடலங்களை உறவினர்கள் அடையாளம் காணும் வகையில் அரசின் இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படங்களில் குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு உடல்களை பெற்று செல்லுமாறு மற்ற மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. Source link

மணிப்பூரில் கள்ளச்சந்தையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200-க்கு விற்கப்படுவதாக தகவல்..!

வன்முறை சம்பவங்கள் ஏற்பட்ட மணிப்பூரில் கள்ளச்சந்தையில் பெட்ரோல் லிட்டருக்கு 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், ஏடிஎம்களில் பெரும்பாலும் பணம் இல்லாத நிலையே நீடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டன. இந்நிலையில், அம்மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் தலைநகர் இம்பாலுக்கு பொருட்கள் கொண்டுசெல்லப்படுவது தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அரிசி, காய்கறிகள், முட்டை போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதாகவும், உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. … Read more

ஷெர்வானி அணிந்து இந்திய மாப்பிள்ளை போல தோற்றமளிக்கும் எலான் மஸ்க்

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட எலான் மஸ்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்திய மாப்பிள்ளை போல எலான் மஸ்க் ஷெர்வானி அணிந்துகொண்டு குதிரை மீது அமர்ந்துள்ளது போலவும், நடனமாடுவது போலவும் உள்ள புகைப்படங்களைப் பார்த்த பலர், இது எப்போது என இணையத்தில் விவாதம் நடத்திய நிலையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது தெரியவந்தது. மும்பையை சேர்ந்த ரோலிங் கேன்வாஸ் என்ற திருமணப் புகைப்பட கலைஞர், செயற்கை நுண்ணறிவில் மிட்ஜர்னி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மஸ்கின் புகைப்படங்களை … Read more

பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து… 3 குழந்தைகள் உள்பட 5பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில்  3 குழந்தைகள் உள்பட 5பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செநாச்சிபட்டைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் தனது சித்தப்பா மகன் ராஜேஷ் உடன் சென்னைக்கு வந்து, மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவி ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு சொந்த ஊர் புறப்பட்டார். காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய … Read more

இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி.. 139 கி.மீ தூரத்தை, குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ்

கேரளாவில் இதயநோயால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற 139 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கட்டப்பனா என்ற பகுதியைச் சேர்ந்த ஆன் மரியா என்ற அந்த சிறுமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத நிலையில், உடனடியாக எர்ணாகுளத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை. 139 கிலோ மீட்டர் தூரம் கொண்ட எர்ணாகுளத்துக்கு சாதாரணமாகச் சென்றாலே 4 … Read more