அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழா.. திருத்தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறும் விசாகத் தேர் திருவிழாவின் பத்தாம் நாளில் தமிழகத்தின் நான்காவது பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். Source link

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை… சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்

திருவாரூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனைவியிடம் 8 சவரன் நகையை பறித்துச் சென்ற இரு கொள்ளையர்களை, சினிமா பாணியில் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் ஈ.சி.ஆர் சாலையில் வசிப்பவர் கண்ணன். சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான கண்ணன், பணிக்கு சென்றதால் வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக மாடிவீட்டின் போர்டிகோவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது, … Read more

விபத்தில் சிக்கிய கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை

ஒடிசாவில் விபத்திற்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுனர் மற்றும் உதவி ஓட்டுநருக்கு ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசாவில் நேற்று முன் தினம் நிகழ்ந்த ரயில் விபத்தில் கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர் மோஹன்டிக்கு மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உதவி ஓட்டுநர் ஹஜாரி பெஹராவிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. விபத்து நடந்தபோது, சரக்கு … Read more

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா.? சந்தேகத்தின் பேரில் 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை..!

திருச்சி வாளாடியில் தண்டவாளங்களுக்கு இடையே லாரி டயர்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக, 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி வழியே சென்றுக் கொண்டிருந்த போது,  3 டயர்கள் தண்டவாளத்தில் கிடப்பதைக் கண்ட ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலின் வேகத்தை குறைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் ஒரு டயர் ரயில் இன்ஜினில் மாட்டியதால், மின் ஒயர் கேபிள்கள் துண்டாகி, 4 பெட்டிகளில் மின்விசிறி, மின் விளக்குகள் இயங்கவில்லை. … Read more

‘கவச்’ வந்தாலும் காப்பாற்ற இயலாதாம் இந்த தவறு நிகழ்ந்தால்…. அதிகாரிகள் சொல்லும் ரகசியம்..!

ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து, பரவலாக அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் கவச்… இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சிப் பிரிவான RDSO தயாரித்துள்ள, ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பம் தான், “கவச்”…. ஒரே தண்டவாளத்தில் வரும் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதை தவிர்க்கவும், பனிக்காலத்தில் எதிரில் வரும் ரயில்கள் குறித்து எச்சரிக்கவும், ஆபத்துகாலத்தில், அபய குரல் எழுப்பி உதவி கோரும் வகையிலான SoS அமைப்பையும் உள்ளடக்கியது, இந்த கவச் தொழில் நுட்பம் ..! சிக்னல்கள், தண்டவாளங்கள், கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த … Read more

அப்படியே வாழ்த்திட்டாலும்… முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்… பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!

வித்தியாசமாக சிந்திப்பதாக நினைத்து , தப்பும் தவறுமான வாசகத்துடன் வைக்கப்பட்ட திருமண பேணர் இது தான்..! கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மாணம்பாடி கிராமத்தை சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் ஆலம்பாடி சிக்கல் பகுதியை சேர்ந்த ஜானு என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக பெண்ணின் உறவுக்கார இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி தினசரி நாளிதழ் வடிவில் திருமண பேனரை அச்சிட்டு சாலையோரம் வைத்தனர். இந்த பேனர் மிகுந்த பிழைகளுடன் அச்சடிக்கப்பட்டிருந்ததால் மக்களை கவர்வதற்கு பதிலாக கேலிக்குள்ளாகி … Read more

அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது உலகின் மிகப்பெரிய மாமிச உண்ணியான டைனோசரின் எலும்புக்கூடு..!

உலகின் மிகப்பெரிய மாமிச உண்ணியான டைனோசரின் எலும்புக்கூடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த ஸ்பினோஸரஸ் இன டைனோசர், நீர், நிலம் என இரண்டிலும் வாழக்கூடியவை. சஹாரா பாலைவனத்தில் புதைபடிவ வடிவில் கண்டெடுக்கப்பட்ட ஸ்பினோஸரஸின் எலும்புக்கூடு இத்தாலியில் கட்டமைக்கப்பட்டு தற்போது அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிகாகோ நகர அருங்காட்சியகத்தில், 46 அடி நீள டைனோஸரின் எலும்புக்கூடு நீச்சலடிப்பது போல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அதனை ஆர்வமுடன் கண்டு வருகின்றனர். … Read more

ரயில் விபத்துக்கான மூல காரணம் இதுதான் – ரயில்வே அமைச்சர்

ஒடிசா ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் எனப்படும் மின்னணு இணைப்பு கோளாறே காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். 280க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட ரயில் விபத்து நடைபெற்ற பாஹநஹாவில் இரண்டாம் நாளாக இன்று அவர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சடலங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக கூறினார். வரும் புதன்கிழமை காலைக்குள் தண்டவாள சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் போக்குவரத்தை பாலசோர் வழியே … Read more

இந்த கோர விபத்துக்கு இவர் தான் காரணம்… வெளியானது அதிர்ச்சி தகவல்…. ரெயில்வே சர்க்கியூட் ஆதாரம்..!

3 ரெயில்கள் உடைந்து நொருங்கி உருகுலைந்து கிடக்கும் இந்த கழுகுப்பார்வை காட்சி படமாக்கப்பட்ட இடம் ஒடிஷா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹநகா பஜார் ரயில் நிலையம்..! இந்த ரெயில் நிலையத்தின் இரு புறங்களில் லெவல் கிராசிங் உள்ள நிலையில், இரு லூப் லைன்களும், இரு மெயின் லைன்களும் கொண்ட தண்டவாளங்கள் உள்ளது. சம்பவத்தன்று அதில் லூப் லைன்களில் இரு சரக்கு ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஒட்டிய மேல் புறம் உள்ள மெயின் லைனில் ஷாலிமரில் … Read more

நீதிபதி இருக்கை அருகே எதிரியை வாளால் வெட்டிய ரவுடி…. துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

ராமநாதபுரத்தில் நீதிமன்றத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டவரை நீதிபதியின் இருக்கை அருகே வைத்து வாளால் வெட்டி விட்டு காட்டில் பதுங்கியிருந்தவரை போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் காவலர் முன்னிலையில் கையில் வாளோடு அட்டகாசம் செய்த இவன் தான் ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ரவுடி கொக்கி குமார். பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் கொக்கி குமாருக்கும், சிவஞானபுரத்தை சேர்ந்த மற்றொரு ரவுடி அசோக் குமார் என்பவனுக்கும் இடையே தொழில் போட்டி உள்ளதாக … Read more