தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகிப்பதாக புகார்.. HP பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகிப்பதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். மதுரையை சேர்ந்த ஒருவர் தனது காருக்கு இங்கு பெட்ரோல் நிரப்பியபோது வாகனம் திடீரென பழுதடைந்ததாக புகார் தெரிவித்தார். இதனை அடுத்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஒன்று திரண்டு பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சூளகிரி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தியது மட்டுமின்றி நிர்வாகத்தினரிடம் விசாரணை … Read more

கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்த வந்தவர்கள் இடையே மோதல், அடிதடி – 9 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் புளியரையில் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். கோட்டைவாசல் கருப்ப சுவாமி கோவிலில் தூத்துக்குடி மாவட்டம் பண்டாரப்பட்டியைச் சேர்ந்தவர்களும், புலியரை தெற்கு மேட்டைச் சார்ந்தவர்களும் வழிபாடு செய்தனர். அப்போது திடீரென இரு தரப்பைச் சார்ந்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இரு தரப்பு இளைஞர்களும் மாறி மாறி விறகுக் கட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டதில் 9பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக … Read more

மே மாதத்தில் பாகிஸ்தானின் பணவீக்கம் இலங்கையை விட 38 சதவீதம் ஆக அதிகரித்தது

பாகிஸ்தானின் பணவீக்கம் இலங்கையை விட அதிகமாக கடந்த மாதம் 38 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அண்டை நாடுகளிடமிருந்து சரக்குகளை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் வர்த்தக அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. Source link

ரயில் விபத்து நடந்தது எப்படி? வெளியானது அதிர்ச்சி தகவல்

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  பெங்களூர் யஷ்வந்த்புரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயிலின் சில பெட்டிகள் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரவு 7 மணியளவில் தடம் புரண்டன. இதில் இரண்டு பெட்டிகள் அருகில் இருந்த இணை தண்டவாளத்தின் மீது சரிந்தன. அப்போது மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னையை நோக்கி நேற்று பிற்பகலில் புறப்பட்ட கொரமண்டல் … Read more

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை உக்ரைனுக்காகப் பெறுவதற்கு ஒப்பந்தம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை உக்ரைனுக்காகப் பெறுவதற்கு பாதுகாப்பு துறை ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. உக்ரைனின் தகவல் தொடர்பு  திறன்களை உறுதி செய்வதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் உக்ரைனின் தகவல் தொடர்பு வலையமைப்பில் சாட்டிலைட் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால் ஸ்டார் லிங்க் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. ஸ்டார் லிங்கை உக்ரைனிய ராணுவத்தினர் போர்களத்தில் தகவல் தொடர்புக்காக … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு : யுவராஜ் உள்பட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை உறுதி.. அதிரடி தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!

சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் சித்ராவும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ரமேஷ் மற்றும் … Read more

விமானப்படை பட்டமளிப்பு விழாவில் கீழே விழுந்த அதிபர் ஜோ பைடனை கைத்தாங்கலாக தூக்கிய விமானப்படை அதிகாரிகள்…!

அமெரிக்க விமானப்படை அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் திடீரென தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 80 வயதான ஜோ பைடன், விமானப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு திரும்பிய போது, கால் இடறி விழ, உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். பின்னர் எழுந்து நடந்துச் சென்ற ஜோ பைடன், தனது இருக்கையில் அமர்ந்தார். விழா மேடையில் இருந்த மணல் மூட்டை தடுக்கி பைடன் கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 – கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவி தொகையாக 2 ஆயிரம் ரூபாய், 25 வயது வரை உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய், டிப்ளமோ படித்தவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை ஆயிரத்து 500 ரூபாய் ஆகியவற்றை வழங்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பேருந்தில் இலவச … Read more

தண்டவாளத்தில் வைக்கப்பட்ட லாரி டயர்கள்.. ரயிலின் வேகத்தை குறைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

திருச்சி அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட லாரி டயர்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினின் அடியில் சிக்கியதால் நடுவழியில் ரயில் நின்றது. கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் நள்ளிரவு ஒரு மணி அளவில் பிச்சாண்டார் கோவில் – வாளாடி ரயில் நிலையங்களுக்கிடையே வந்து போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு ஓட்டுநர் , ரெயிலின் வேகத்தை குறைத்த நிலையில் ஒரு டயர் தண்டவாளத்திற்கு வெளியே வீசப்பட்ட நிலையில், மற்றொரு டயர் ரயில் எஞ்சினில் … Read more

“தடம் புரண்டது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்..” ஒடிசாவில் கோர விபத்து..!

சென்னை வந்து கொண்டிருந்த ரயில் ஒடிசாவில் தடம் புரண்டது ஒடிசா மாநிலத்தில் விபத்துக்குள்ளானது கோரமண்டல் விரைவு ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயில் விபத்தில் சிக்கியது சரக்கு ரயில் ஒன்றில் மோதியதால் கோரமண்டல் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன தடம் புரண்ட 4 பெட்டிகள் கவிழ்ந்ததில் 50 பேர் காயம் என தகவல் பாலசோர் மாவட்டத்தில் பகானகா ரயில் நிலையம் அருகே விபத்து நேரிட்டது சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று … Read more