இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

அரியலூர் அருகே சாலையோரம் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக, காதலனே விபத்தை ஏற்படுத்தி கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லைப் பகுதியில், கடந்த 30ஆம் தேதி, சாலையோரத்தில் காது, மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், படுகாயங்களோடு கிடந்த இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த உடையார்பாளையம் போலீசார், சாலையோரம் சடலமாக கிடந்தவர், பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்பதும், … Read more

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளி.. விளைநிலங்கள், குடியிருப்பு கட்டிடங்களுக்கு கடும் சேதம்!

சீனாவின் லியோனிங் மாகாணத்தில்கடுமையான சூறாவளி தாக்கியது. பெரும் வேகத்துடன் காற்று சுழன்றடித்ததில், விளைநிலங்களில் இருந்து பயிர்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதம் அடைந்தன. சூறாவளி தாக்குதலையடுத்து, தீயணைப்பு, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் பொதுப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சூறாவளியால் சுமார் 100 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

அமெரிக்காவில் ஸ்பெல்லிங் பீ போட்டி.. கடினமான வார்த்தைகளை மிகச்சரியாக உச்சரித்த இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி..!

அமெரிக்காவின் பிரபலமான ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது மாணவன் வெற்றி பெற்றுள்ளார். ஆங்கில மொழி உச்சரிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஸ்கிரிப்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் கடினமான வார்த்தைகளை மிகச்சரியாக உச்சரிப்பவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான போட்டியில் புளோரிடாவின் லார்கோவில் வசித்து வரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தேவ் ஷா இறுதி சுற்றில் சாம்மோபைல்  என்ற வார்த்தையை சரியாக உச்சரித்து வெற்றி பெற்றார். 200 போட்டியாளர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற 8ம் … Read more

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து பெண்ணை மணந்த, சென்னை கார் நிறுவன பொறியாளர் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு மணமகளுடன் உறவினர்கள் மத்தியில் ஆட்டம் போட்டு தனது திருமணத்தை கொண்டாடினார். திருமணத்தன்று குனிந்த தலை நிமிராமல் மணமகளை அடக்கி வைத்த காலம் போயே போச்சி என்பதை போல ஆட்டம் போட்ட புதுமண தம்பதி இவர்கள் தான்..! திருவாரூர் மாவட்டம் அக்கரைக் கோட்டகம் பகுதியைச் சேர்ந்த சேகர் – கொளஞ்சி தம்பதியினரின் மகன் விஜய். … Read more

தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த போக்குவரத்து போலீசார்…!

தஞ்சாவூரில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து வந்த பெண்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்து போக்குவரத்து போலீசார் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். நூறு சதவீதம் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெண்கள் தலைக்கவசம் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் பழைய பேருந்துநிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், தலைக்கவசத்துடன் வந்த பெண்களுக்கு வாழ்த்துக் கூறி பரிசளித்தனர். முறையாக ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு போக்குவரத்து … Read more

”முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் தோல்வி..” – எடப்பாடி பழனிசாமி..!

முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 நாள் பயணத்தில் 3 ஆயிரத்து 233 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறி இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் ஆயிரத்து 891 கோடி ரூபாய்க்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், வெளிநாட்டில் திரட்டிய முதலீட்டின் உண்மையான மதிப்பு எவ்வளவு? என இ.பி.எஸ். கேள்வியெழுப்பி உள்ளார். … Read more

ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து கடைக்கு வரும் சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் கைது!

மதுரையில் ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து கடைக்கு வரும் சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் கைது செய்யப்பட்டான். மதுரை அகிம்சாபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது பேரன், பேத்திகளை அழைத்துக் கொண்டு கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் துணிமணி எடுக்க சென்றுள்ளார். அப்போது பேத்தி அணிந்திருந்த செயின் காணாமல் போனது கண்டு திடுக்கிட்ட அவர் கடை மேலாளர் உதவியுடன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் … Read more

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மாறும் – விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் விரைவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாறும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அட்லாண்டா விமான நிலையத்தை விட, மிகப்பெரிய விமான நிலையமாக மாறும் என்றும் கூறியுள்ளார். தற்போது, டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தற்போது ஆண்டுக்கு 70 மில்லியன் பயணிகள் வந்து செல்வதாகவும் மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 109 … Read more

தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி, போலீஸின் பிடியிலிருந்து நழுவி தப்பியோடிய போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தார். அவரை துப்பாக்கி முனையில் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். பரபரப்பான பல்லடம் பேருந்து நிலையத்திற்கு, சீருடையில் இருந்த 4 போலீஸார் துப்பாக்கி ஏந்தியவாறு 3 பேரை அழைத்து வந்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் திடீரென போலீஸ் பிடியிலிருந்து நழுவி தப்பியோடினான். மற்ற 2 கைதிகளையும் காவலர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, … Read more

நடுத்தர தொலைவு அக்னி-1 அணு ஆயுத ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை.!

நடுத்தர தொலைவு அக்னி – 1 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒடிசாவின் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், எஸ்.எப்.சி.(SFC) ரக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி-1 அணு ஆயுத ஏவுகணை, மிக உயர்ந்த நிலையில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், ஏவுகணையின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்தன என்றும் குறிப்பிட்டுள்ளது. அணு ஆயுதங்களைத் தாங்கி 5,000 … Read more