உலகின் முதல் 3டி இந்து கோவில் தெலுங்கானாவில் உருவாக்கம்..!

தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் Burugupally பகுதியில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இந்து கோவில் உருவாக்கப்படுகிறது. கணிணியில் முப்பரிமாணத்தில் கட்டடத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டு அதன் வடிவமைப்பைக் கொண்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. விநாயகருக்காக கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்காக சிவலிங்கம் வடிவிலும், பார்வதிக்காக தாமரை வடிவிலும் இந்தக் கோவில் அமைய உள்ளது Source link

தோனிக்கு வெற்றிகரமாக முடிந்த முழங்காலில் அறுவை சிகிச்சை… வலிகளுக்கு நடுவே நனவான கோப்பை கனவு!

சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, மும்பை மருத்துவமனையில் இடதுகால் மூட்டில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஐ.பி.எல் முழுவதும் முழங்கால் வழியால் அவதிப்பட்ட தோனி, முழங்காலுக்கு ஐஸ்பேக் வைத்து சமாளித்து விளையாடினார். ஐ.பி.எல் தொடரில், சி.எஸ்.கே அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்த கையோடு அமதாபாத்தில் இருந்து மும்பை சென்ற தோனிக்கு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாள்களில் மருத்துவமனையில் இருந்து … Read more

பெண்களை குறி வைத்து மோசடி செய்யும் ஆசாமி… மின்வாரிய ஊழியர் என்று கூறி பெண்ணிடம் ரூ.5,000 வாங்கிக் கொண்டு நைசாக நழுவி ஓட்டம்..!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை தொடர்ந்து, படர்ந்தபுளியிலும் வீ’ட்டில் மீட்டர் பொருத்த வந்துள்ள அதிகாரி எனக்கூறி, அரசின் மின் மீட்டரை கொடுத்து பெண்ணிடம் பண மோசடி நடைபெற்றுள்ளது. எட்டயபுரம் கார்த்திகை தெருவில் உள்ள தனசேகரன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் குணசுந்தரி வீட்டுக்கு டிப்-டாப்பாக உடையணிந்து வந்த நபர் ஒருவர், மின் இணைப்பு கொடுப்பதற்கு, மீட்டர் பொருத்த வந்திருப்பதாக கூறி, 5 ஆயிரத்து 500 ரூபாய் வாங்கிவிட்டு ஓடிவிட்டார். இதேபோல் படர்ந்தபுளி கிராமத்தில் வசிக்கும் ஆதிலெட்சுமி வீட்டிற்கு மும்முனை … Read more

இத்தாலியில் பென்சன் பணத்திற்கு ஆசைப்பட்டு தாயின் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்ந்த மகன் கைது..!

பென்ஷன் பணத்திற்காக இறந்த தாயின் சடலத்துடன் 60 வயது முதியவர் ஆறு ஆண்டுகள் வசித்துவந்த சம்பவம் இத்தாலியில் நிகழ்ந்து உள்ளது. வனெட்டோ பகுதியைச் சேர்ந்த ஹெல்கா மரியா ஹெகன்பார்த், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது 86 வயதில் மரணமடைந்து உள்ளார். ஹெல்காவுக்கு மாதந்தோறும் கிடைத்து வந்த பென்ஷன் பணத்தை இழந்து விடக் கூடாது என்று எண்ணி,பலேதிட்டம் போட்ட மகன் அவரது உடலை வீட்டிலேயே மறைத்துவைத்துள்ளார். இவ்வாறு 6ஆண்டுகள் ஆன நிலையில், சந்தேகத்தின்பேரில் ஹெல்காவின் குடியிருப்பிற்குள் அதிரடியாக … Read more

எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை – ராகுல்காந்தி

எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கலிஃபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் இந்தியாவிலேயே அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபரும், கிரிமினல் தண்டனை பெற்றதும் தாம் தான் என்று கூறியுள்ளார். எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என நினைத்ததில்லை என்றாலும், அது தனக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அரசியல் செயல்படும் விதம் இதுதான் … Read more

தமிழகத்தில் நீதிபதியாக பணியாற்றுவது கௌரவமானது.. கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன் : உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா உறுதி

தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன் என சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி, கலை கலாச்சார செறிவும், பல சான்றோர்களையும் கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது எனத் தெரிவித்தார். முடிவுகள் எடுக்கும் போது, அனைத்து தரப்பினரின் நம்பிக்கையும் பெறப்படும் எனவும், எவருக்கேனும் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படும் எனவும் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தெரிவித்தார்.  Source link

ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் கீவ் நகர சாலையின் நடுவே விழுந்ததால் பொதுமக்கள் அச்சம்..!

ரஷ்ய ஏவுகணையில் இருந்து உடைந்த சிறு பகுதி ஒன்று, உக்ரைன் தலைநகர் கீவ்வில், சாலையில் சென்று கொண்டிருந்த காருக்கு அருகே விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென பறந்து வந்த ஏவுகணையின் துண்டு, வெள்ளை நிற காருக்கு அருகில் விழுந்து நொறுங்கியது. ரஷ்ய ஏவுகணை இலக்கை நெருங்குவதற்கு முன்னதாகவே இடைமறித்து அழித்துவிட்டதாகவும் அதன் மிச்சங்களே சாலையில் விழுந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. Source link

பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து கோணலூர் ஏரிக்கு வலசை வந்த அரியவகை பறவைகள்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள ஏரியில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தஞ்சமடைந்துள்ளன. கோணலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு குருட்டு கொக்கு, உன்னி கொக்கு, வெள்ளை கொக்கு போன்ற உள்நாட்டு பறவைகளும் நத்தைக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைக் கிடா, கரண்டிவாயன் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளன. இந்தப் பறவைகளை சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மக்கள் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். கோணலூருக்கு ஆண்டுதோறும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்து செல்வது … Read more

கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்…!!!

விழுப்புரம் மாவட்டம் மனம்பூண்டி கிராமத்தில் இரும்பு கடை ஒன்றின் மேற்கூரையை உடைத்து பெரும் சிரமப்பட்டு உள்ளே இறங்கிய திருடன் ஒருவன், கல்லாப்பெட்டியில் இருந்த கிழிந்து போன 20 ரூபாயை திருடிச் சென்றுள்ளான். விழுப்புரம் மாவட்டம் மனம்பூண்டி கிராமத்தில் இந்தியா ஸ்டீல்ஸ் என்ற இரும்பு கடையை நடத்தி வருகிறார் மும்மூர்த்தி. வழக்கம்போல காலையில் கடையைத் திறந்து பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததோடு, மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த … Read more

”இந்தியா – நேபாளத்துடனான உறவு இமய மலையின் உயரத்திற்கு கொண்டு செல்ல முயற்சி..” – பிரதமர் மோடி..!

இந்தியா – நேபாளத்துடனான உறவை இமய மலையின் உயரத்திற்கு கொண்டு செல்ல கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக இந்தியா வந்த நேபாள பிரதமர் பிரசன்டாவை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, இருதரப்பு விவகாரம் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், நேபாள பிரதமருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, எதிர்காலத்தில் இரு நாடுகளின் உறவை சூப்பர்ஹிட்டாக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறினார். … Read more