எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை – ராகுல் காந்தி

எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கலிஃபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் இந்தியாவிலேயே அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபரும், கிரிமினல் தண்டனை பெற்றதும் தாம் தான் என்று கூறியுள்ளார். எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என நினைத்ததில்லை என்றாலும், அது தனக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அரசியல் செயல்படும் விதம் இதுதான் … Read more

செயற்கை நுண்ணறிவுடன் மேம்படுத்தப்பட்ட, மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க ரோபோ…!

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுடன் மேம்படுத்தப்பட்ட, மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க மனித உருவ ரோபோவை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. அமெக்கா என்ற அந்த ரோபோவின் முகபாவனைகளைக் கட்டுப்படுத்த அதன் தலையில், சமிக்ஞைகளை இயக்கங்களாக மாற்றுவதற்கான சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், அமெக்காவின் புன்னகை, கண் சிமிட்டல் போன்றவை மனிதர்களைப் போன்றே இருப்பதாகவும், அதை உருவாக்கிய நிறுவனத்தின் தலைவர் தெரித்துள்ளார். செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அமெக்காவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ரோபோக்கள் மிகவும் … Read more

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக கையாள்கிறோம்: அனுராக் தாகூர்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மத்திய அரசு உணர்வூப்பூர்வமாக கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  தெரிவித்தார். சட்டம் அனைவருக்கும் சமம் எனக்கூறிய அவர், அனைத்து வீரர், வீராங்கனைகளும் தங்களுக்கு முக்கியம் என தெரிவித்தார். ஜூன் 1-ல் மல்யுத்த வீராங்கனைக்ளுக்கு ஆதரவாக சம்யுக்த் கிசான் மோர்சா (Samyukt Kisan … Read more

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் : எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்திருப்பதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், டெஸ்லா அதிபர் மஸ்க்கும், பிரான்ஸ் தொழிலதிபர் லூயிஸ் வுட்டன் பெர்னார்ட் அர்னார்ட்டும் மாறி மாறி, முதலிடத்தை வகித்து வருகின்றனர். தற்போது  இந்திய ரூபாய் மதிப்பில் 15 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் மஸ்க் முதலிடத்துக்கு முன்னேறி இருப்பதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த லூயிஸ் … Read more

”மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு, கர்நாடகா பயனடையும்..” – டி.கே.சிவகுமார்..!

மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இரு மாநிலங்களும் பயனடையும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், அத்திட்டத்தால், காவேரி படுகையில் விவசாயிகள் பாசனமும், பொதுமக்கள் குடிநீரும் பெறுவர் என்றும் தமது டிவிட்டர் பக்கத்தில் டி.கே.சிவக்குமார் … Read more

கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கத்தை மீட்ட கடலோர காவல்படை…. தங்கத்தின் மதிப்பு ரூ.10 கோடியாக இருக்கலாம் என தகவல்…!

ராமேசுவரம் அருகே கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்க கட்டிகளை கடலோர காவல் படையினர் மீட்டனர். தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மண்டபம் நோக்கி நேற்று வந்த பைபர் படகு ஒன்றை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சுற்றி வளைத்தனர். அதிலிருந்த 3 பேரை விசாரித்த போது, இலங்கையைச் சேர்ந்த சிலர் தங்களிடம் 2 பார்சல்களை கொடுத்து அனுப்பியதாகவும், கடலோர காவல் அதிகாரிகளைக் கண்டதும் அவற்றை மணாலி தீவு பகுதியில் தூக்கி வீசிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். உடனே, … Read more

கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயிலுக்கு தீ வைப்பு… தப்பியோடிய மர்ம நபருக்கு வலை வீச்சு…!

கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரயிலில் மர்ம நபர் தீ வைத்தார். இதில் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பொதுப்பெட்டி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கட்டுப்படுத்தியதால் தீ பிற பெட்டிகளுக்கு பரவவில்லை. பயணிகள் யாரும் பெட்டியில் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் தப்பியோடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மோப்ப நாய் வந்து மோப்பம் பிடித்து, … Read more

ஆவின் பால் கொள்முதல் விலை இந்தாண்டு அதிகரிக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்!

ஆவின் பால் கொள்முதல் விலையை அரசு இந்தாண்டு அதிகரிக்க இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆவின் மூலம் வாடிக்கையாளருக்கு தரமான பாலை குறைவான விலையில் கொடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். முன்னதாக, புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். Source link

மேகதாது அணை விவகாரம்: டி.கே. சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்..!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் வறண்ட பாலைவனமாவதை தடுக்க அ.தி.மு.க. அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கும் என அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்தபோது, தமது அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தியும் அணை கட்டுவதை தடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். பன்மாநில நதிநீர் தாவாச் சட்டத்தில், நதிநீரை தடுப்பதற்கோ, திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் … Read more

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்… 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கீவின் கிழக்கு புறகரில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மற்றும் டினிப்ரோவ்ஸ்கியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 14 பேர் காயமடைந்திருப்பதாக கீவ் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலில் மருத்துமனை மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தது. கீவில் கடந்த ஒரு மாதத்தில் 18 முறையாக நடத்தப்படும் ரஷ்ய தாக்குதல் இது என்று உக்ரைன் கூறியுள்ளது. Source link