தலைநகரில் அதிகாலை 4 மணியளவில் நேர்ந்த பயங்கரம்.. அக்காள், தங்கையை சுட்டுக்கொன்ற 15 பேர் கொண்ட கும்பல்

டெல்லியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 15 பேர் கும்பலால் சகோதரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகாலை 4 மணியளவில், ஆர்.கே. புரத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை தட்டிய கும்பல், யாரும் வெளியே வராததால் செங்கற்களை எடுத்து கதவு மீது வீசி எறிந்தனர். அப்போது வெளியே வந்த வீட்டின் உரிமையாளர் லலித்தையும், அவரது இரு சகோதரிகளையும் நோக்கி அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது. இதில் மார்பிலும், வயிற்றிலும் காயமடைந்த லலித்தின் இரு சகோதரிகளும் … Read more

லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் குத்திக்கொலை – கேரள இளைஞர் கைது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான இளைஞர், இங்கிலாந்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் சவுத்ஆம்டன்வெ பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த அரவிந்த் சசிக்குமார் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கத்திக்குத்து காயங்களுடன் அரவிந்த் மீட்கப்பட்டார். அவருடன் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த சலீம் என்பவரே அரவிந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளி சலீமை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். கடந்த வாரம் இங்கிலாந்து … Read more

வட இந்தியாவை வாட்டும் வெப்ப அலை: உ.பி, பீகாரில் 98 பேர் பலி

அதீத வெப்ப அலை காரணமாக உத்தரப்பிரதேசம், பீகாரில் கடந்த மூன்று நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் வழக்கத்திற்கு மாறாக வீசிய வெப்ப அலையால், பல்லியா பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமார் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அறுபது வயதை கடந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில், பெரும்பாலானோர் காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இதே போல், பீகாரிலும் தீவிர … Read more

நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட வந்தவரை ஓடஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்த கும்பல்…!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட வந்தவரை கும்பல் ஓடஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்தது. கடந்த மார்ச் 30 ஆம் தேதி காரைக்குடி செஞ்சை நாச்சுழியேந்தலை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை அருகே உள்ள திருமோகூரைச் சேர்ந்த வினித் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் வினித் உள்ளிட்ட 3 பேர் தினமும் காரைக்குடி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் … Read more

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தை

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய தந்தையின் செயலால் இரண்டு குழந்தைகள் விபத்தில் உயிரிழந்தனர். மங்கப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலை ஒன்றை கவனக்குறைவாக கடந்ததில் விபத்து நிகழ்ந்தது. சாலையை கடக்க முயன்றபோது வாகனங்கள் ஏதும் வருகிறதா என சற்று நேரம் கூட கவனிக்காமல் சுரேஷ் அப்படியே செல்ல, அவ்வழியாக வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் … Read more

நடப்பாண்டில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 30 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்ப்பு

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதால், நடப்பாண்டில் இறக்குமதி அளவு 30 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒருபங்கு ரஷ்யாவிடமிருந்து பெறப்படுவதாக இந்திய எண்ணெய் நிறுவனமான ONGC யின் தலைவர் அருண்குமார் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 2021-22ல் ரஷ்யாவிடம் இருந்து 2 சதவீதமாக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இறக்குமதி அளவு 30 சதவீதத்தை … Read more

100 நாள் வேலை அட்டை பதிவு செய்வதற்கு ஐந்து ரூபாய் லஞ்சம்… சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் வீடியோ

100 நாள் வேலை அட்டை பதிவு செய்வதற்கு ஐந்து ரூபாய் லஞ்சம் வாங்கிய பணித்தள பொறுப்பாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட விடயபுரம் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக கடந்த பதினைந்து வருடங்களாக சேரன்மாதேவி என்பவர் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆய்வில் பணித்தள பொறுப்பாளர் சேரன்மாதேவி வேலைக்கு வராத 30 நபர்களின் அட்டையை வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. மேலும்  விடயபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பணித்தள … Read more

பொலிவியாவில் கன மழையால் வெள்ளப்பெருக்கு.. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சோயா தோட்டங்கள்

பொலிவியாவின் சாண்டா குரூஸ் மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள சோயா தோட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சில நாட்களுக்கு முன் அங்கு கடும் பனிப்பொழிவு நிலவிய நிலையில் தற்போது பெய்துவரும் கனமழையால் கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத கிராம மக்களையும், அவர்களது கால்நடைகளையும் மீட்பு குழுவினர் படகில் வந்து அழைத்து சென்றனர். சுமார் 280 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. Source link

ரயில்வே டிவிசன் கட்டுப்பாட்டு அறையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி டிவிசன் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ரயில்கள் இயக்கப்படுவதையும் அவற்றின் பாதுகாப்பையும் நேரில் ஆய்வு செய்தார். ரயில்வே இயங்கும் முறைகளை மேம்படுத்துவது தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் சுமார் 3 மணி நேரம்  அவர் ஆலோசனை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வேயில் கட்டுப்பாட்டு அறைகள் மிகவும் முக்கியமான செயலாற்றி வருவதாக குறிப்பிட்டார். ரயில்களின் இயக்கம், கட்டுப்பாட்டு அறை, ரயில் பாதைகள் பராமரிப்பு போன்றவற்றை தரம் உயர்த்த … Read more

ஸ்காலர்ஷிப் தருவதாக ஆசைகாட்டினால் உஷார்.. மொத்த பணமும் போயிரும்..! பணத்தை இழந்து தவிக்கும் பெற்றோர்

தமிழக அரசின் பெயரை தவறாக பயன்படுத்தி ஸ்காலர்ஷிப் தருவதாக 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை செல்போனில் தொடர்பு கொண்டு கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யச்சொல்லி அவர்களது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் சுருட்டிய சம்பவம் கோவையில்  நடந்துள்ளது.  கோவை பகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிந்த மாணவர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தமிழக அரசின் கல்வித்துறையில் இருந்து பேசுவதாக கூறி மாணவருக்கு 54 ஆயிரம் ரூபாய் ஸ்காலர்ஷிப் … Read more