பாடலாசிரியர் பா. விஜய் இயக்கும் படத்தில் ஜீவா, அர்ஜூன் – மேதாவியா; புதியக் கதையா?

ஜீவா – அர்ஜூன் நடிக்கும் பீரியட் ஆக்‌ஷன் படத்தை பாடாலாசிரியர் பா. விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு கே. பாக்யராஜ் நடிப்பில் உருவான ‘ஞானப்பழம்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான பா.விஜய், முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். பின்னர் ‘ஞாபகங்கள்’ படத்தின் வாயிலாக நடிகராகவும் அறிமுகமானதுடன், ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தை இயக்கி நடித்திருந்தார். தொடர்ந்து, ‘ஆருத்ரா’ படத்தை இயக்கியிருந்த நிலையில், தற்போது ஜீவா, அர்ஜூன் நடிக்கும் புதியப் படத்தை பா. விஜய் … Read more

இறகுகள் வெட்டப்பட்ட 42 வளர்ப்பு பச்சைக்கிளிகள்… கன்னியாகுமரி வனத்துறை முயற்சியால் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறகுகள் வெட்டப்பட்டு வீட்டில் வளர்க்கப்பட்ட 42 பச்சை கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவை உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி வீடுகளில் ஆந்தை, மைனா, கழுகு, பச்சை கிளி, மரகத புறா போன்ற பறவைகளை வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தை குறிப்பிட்டு, ‘பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வன விலங்குகளை வளர்ப்பு பிராணியாக வைத்திருந்தால் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கவும்’ என கன்னியாகுமரி மாவட்ட வன … Read more

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் பலியான நாமக்கல் பன்றி… எஞ்சியுள்ள பன்றிகளை அழிக்க முடிவு?

நாமக்கல்லில் உயிரிழந்த ஒரு பன்றிக்கு, ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் சுற்று வட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பன்றிகளை வெளியே கொண்டு செல்லவும், உள்ளே கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து 500க்கும் மேற்பட்ட வெண்பன்றிகளை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த கொட்டையில் வளர்க்கப்பட்ட பன்றியொன்று, கடந்த 9-ம் தேதி திடீரென உயிரிழந்தது. அந்தப் பன்றிக்கு நாமக்கல் … Read more

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கலா? – பொதுமக்கள் போராட்டம்

வீடுகள் ஒதுக்குவதில் குலுக்கல் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருச்சி தாராநல்லூர் அருகே உள்ள கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் 192 வீடுகள் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 64 மாடி வீடுகள் மற்றும் 75 வீடுகளும் தற்போது பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குலுக்கள் முறையில் பயனாளிகளுக்கான வீடு ஒதுக்குவதற்கான … Read more

“ராகுல் காந்தி தகுதி நீக்கம் முழுக்க முழுக்க சட்டப்படி நடந்தது”– எல்.முருகன் கருத்து

“தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காலை திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு, தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோயில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். இதைத் தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு … Read more

தொடரும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்: கடன் தொல்லையால் மருத்துவமனை ஊழியர் விபரீத முடிவு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியரொருவர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால்  தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (37). இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். அப்படி ரவிசங்கர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் ரூ.6 லட்சம் பணத்தை இழந்தததோடு கடன் … Read more

ராகுல்காந்தி தகுதி நீக்கம்: வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்குமா ஆணையம்?

நேற்றைய தினம் வயநாடு எம்பி ராகுல்காந்தி, எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் எம்.பி.யாக இருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் பேசிய ராகுல்காந்தி, ‘ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்?’ என்று பேசியிருந்தார். இதையடுத்து குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ … Read more

சரிந்த முட்டை விலை, உயர்ந்த கறிக்கோழி விலை… என்ன காரணம்? விற்பனையாளர்கள் விளக்கம்!

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 4.60-ல் இருந்து 10 காசுகள் குறைத்து ரூ. 4.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 6 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, அவற்றின் வழியாக தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவற்றில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி 50 லட்சம் முட்டைகளும், கேரளாவுக்கு ஒரு கோடி முட்டைகளும், மீதம் உள்ள முட்டைகள் தமிழகத்தின் … Read more

”உங்களை போன்ற எதேச்சதிகாரிகளுக்கெல்லாம்…” – மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையும், அவருடைய பதவியை பறித்ததும்தான் இந்தியா முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடத்தப்பட்ட பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருப்பது எப்படி?” என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது, மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிடுவதை போல இருப்பதாகவும், மோடி என்ற சமூகத்தினரை அவமதிப்பதாகவும் சொல்லி குஜராத்தின் முன்னாள் பாஜக அமைச்சரும் எம்.எல்.ஏவுமான … Read more

“நகைச்சுவை ததும்பவே பேசியிருந்தார் ராகுல் காந்தி” – திருமாவளவன் கருத்து

“எதிர்கட்சித் தலைவரே இல்லாத, எதிர்கட்சிகளே இல்லாத தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அச்சத்தின் உச்சத்தில் பாஜகவினர் இருக்கின்றனர்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். விடுதலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை நேற்று திருவள்ளூரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த நாடாளுமன்ற பொது தேர்தலின் போது கர்நாடகாவில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி ‘இந்தியாவில் பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருப்பவர்களெல்லாம் மோடி மோடி என பெயர் கொண்டுள்ளார்களே… மோடி என்றாலே திருடர்கள் … Read more