கடலூர்: வெள்ளி கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கொத்து கொத்தாக உயிரிழப்பு

கடலூரில் கூட்டம் கூட்டமாக ஆமை குஞ்சுகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் வெள்ளி கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் பொரிப்பகம் உள்ளது. கடற்கரை ஓரத்தில் உள்ள ஆலிவ் ரெட்லி ஆமைகளின் முட்டைகளை சேகரித்து அவற்றை பொரிப்பகத்தில் வைத்து பராமரிப்பது வழக்கம். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பாதுகாப்பாக வெளியே வந்த பிறகு, அவை முறையாக கடலில் விடப்படும். இந்நிலையில் இன்று வெள்ளி கடற்கரையில் உள்ள பொரிப்பகத்திலிருந்து ஆமைக் குஞ்சுகள் வெளியே வந்து கூட்டம் கூட்டமாக உயிரிழந்துள்ளது. அரசு ஆமைகள் … Read more

மின் வேலி, மின் கம்பத்தால் தொடரும் யானை மரணங்கள்.. கோவையில் யானை பலியானதால் சோகம்!

மின் கம்பம் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் மலையடிவாரப் பகுதியில் கிராமங்களும், விவசாய நிலங்களும் அதிகமாக இருக்கிறது. இப்பகுதியில் உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக காட்டு யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் வந்து செல்கிறது. இதன் காரணமாக அவ்வப்போது யானை மனித மோதல்கள் ஏற்படும் சூழலும், விவசாய பயிர்கள் சேதம் அடைவதும் பின்னர் … Read more

பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? – குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் ‘மின்னலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடலை பாடியதன் மூலம் இங்கு புகழ்பெற்றார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி பல முன்னனி இசையமைப்பாளர்களின் இசைகளில், ஏராளமான பாடல்களை இவர் பாடியுள்ளார். இந்த நிலையில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சமீபத்தில் லண்டன் சென்ற பாம்பே ஜெயஸ்ரீ, அங்கே தங்கியிருந்த விடுதியில் … Read more

உசிலம்பட்டி: குழந்தைகளுக்கு நாளை காதணி விழா… குடும்பத்தகராறில் தாய் எடுத்த விபரீத முடிவு

உசிலம்பட்டி அருகே குழந்தைகளுக்கு நாளை காதணிவிழா நடைபெற இருந்த நிலையில், குடும்பத்தகராறில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தப்பட்டியைச் சேர்ந்தவர்கள் அமர்நாத் – மீனா என்ற தம்பதியர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கும் நாளை (26 ஆம் தேதி) காதணி விழா நடத்த திட்டமிட்டிருந்த பெற்றோர் அமர்நாத் – மீனா, கடந்த … Read more

‘உங்க ATM கார்டு காலாவதி ஆகிடுச்சு…’- திருச்சியில் மூதாட்டியிடம் லட்சக்கணக்கில் மோசடி!

சமயபுரம் அருகே மூதாட்டியொருவரை ஏமாற்றி, அவரது வங்கிக் கணக்கில் இருந்த 3,78,848 ரூபாயை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இந்த சைபர் கிரைம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் விஜயராணி (63). தனியாக வசித்து வரும் இவரது செல்போன் எண்ணிற்கு சமீபத்தில் மூன்று புதிய செல்போன் எண்களிலிருந்து ‘நட்ராஜ் பென்சில் கம்பெனியில் பகுதி நேர வேலை வாங்கித் தருகிறோம்’ என … Read more

“ராகுல்காந்தி தகுதி நீக்கம்: ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள பெரிய சவால்” – MP திருச்சி சிவா

“ராகுல்காந்தி, நடை பயணத்தின் (இந்திய ஒற்றுமை யாத்திரை) மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில், அவருக்கு இந்த தண்டனையை பெற்று தந்துள்ளது பாஜக” என திமுக எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் ‘திராவிட மாடல் 63’ ‘அலைபோல் உழைப்பு மலைபோல் உயர்வு’ என்ற தலைப்பின்கீழ் புகழ் அரங்கம் நடைபெற்றது. அம்பத்தூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் எம்டிஆர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் … Read more

அரியலூர்: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ‘உதவி கோட்ட பொறியாளர்’ கையும் களவுமாக கைது!

ஜெயங்கொண்டத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு என்பவர் பணியாற்றி வருகிறார். இதே ஜெயங்கொண்டத்தின் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் என்பவர், சாலை பணி – களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இவரிடம் உதவி கோட்ட பொறியாளர் வஹிதா பானு, ஒப்பந்த தொகையில் 2 சதவீதம் கமிஷனாக … Read more

2024க்குள் 1000 பேருக்கு வேலை – ஆகாச ஏர் நிறுவனம் அறிவிப்பு

1000 பேரை புதிதாக வேலையில் அமர்த்த உள்ளது ஆகாச ஏர் நிறுவனம். வரும் 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள், 1000 பேரை புதியதாக பணிக்கு நியமிக்க உள்ளதாக ஆகாச ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3,000ஆக அதிகரிக்க உள்ளது. விமானங்களின் எண்ணிக்கையும் விமானம் சென்று சேரும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், 1000 பேரை பணியில் அமர்த்த உள்ளதாக ஆகாச ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 மாதங்களுக்கு … Read more

ஒளரங்கசீப் குறித்து செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்… குடும்பத்தை வெளியேற்றிய கிராமம்!

செல்போனில் ஒளரங்கசீப் குறித்து தவறான ஸ்டேட்டஸ் வைத்ததற்காக, இளைஞர் ஒருவரின் குடும்பத்தை, கிராமத்தைவிட்டே வெளியேற்றி உள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள ஔரங்காபாத் நகரை, பெயர் (சத்ரபதி சம்பாஜி நகர்) மாற்றம் செய்தது தொடர்பாக ஏற்கெனவே உள்ளூர் அரசியல் கட்சியினருக்கு இடையே சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தற்போது புதிய பிரச்சினை ஒன்று வெடித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் … Read more

'வசதி படைத்தோருக்கெல்லாம் ரூ.1000 உரிமை தொகை வழங்க முடியுமா?' – அமைச்சர் எ.வ. வேலு பதிலடி

ரேஷன் அட்டை இருக்கிறது என்பதற்காக வசதி படைத்தோருக்கெல்லாம் ரூ.1000 உரிமை தொகை வழங்க முடியாது என அமைச்சர் எ.வ. வேலு  தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது, தேர்தல் அறிக்கையிலே அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என கூறிவிட்டு தற்போது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் கொடுப்போம் என கூறுவது ஏன்  என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய … Read more