ராகுல் காந்திக்கு முன் உள்ள சட்ட வாய்ப்புகள் என்னென்ன?

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது நீதிமன்ற தீர்ப்பின் தாக்கம் என்பதால் அந்த தீர்ப்பை எதிர்த்து தடை பெறுவதுதான் சரியானதாக இருக்கும் என சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கியது சூரத் நகரில் உள்ள சீஃப் ஜூடிசியல் (CJM)  மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம். ஆகவே இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியில் உள்ள செஷன்ன்ஸ் நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு … Read more

தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த போலீசார் – ஆவடி காவல் ஆணையரகத்தில் தம்பதி புகார்

வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழிப்பறி குறித்து புகார் அளிக்க சென்ற தம்பதியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலைய உதவி ஆய்வாளர், மற்றும் தலைமை காவலர் மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளுர் மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் (38) கட்டடத் தொழிலாளியான இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணத்தை எடுத்துக் கொண்டு சென்று உள்ளார். அப்பொழுது சாலையில் சிறுநீர் கழிக்க நின்றபோது இவரை வழிமறித்த … Read more

ராகுல் காந்தி எம்.பி. பதவியைத் திரும்பப் பெறுவது சுலபமா… கடினமா? ஓர் அலசல்

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டாலும், ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவது சுலபமல்ல எனவும், அதற்கு அதிக அவகாசம் தேவைப்படும் எனவும் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். முதல்கட்டமாக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, தான் குற்றவாளி என சூரத் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு மற்றும் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இரண்டு வருட சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் தடை பெற வேண்டும். அப்போது, எதிர்தரப்பு ராகுல் காந்தியின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதற்கும், மேலும் தீர்ப்பு அவருக்குச் … Read more

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் – அடுத்தது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி நாடாளுமன்ற பதவியை இழந்துள்ளார் ஒரு மக்கள் பிரதிநிதி என்னென்ன காரணங்களுக்காக பதவி இழப்பை சந்திப்பார்கள் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி முன்னாள் உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன உள்ளிட்டவற்றை விரிவாக காணலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் அந்தந்த தொகுதிகளுக்கான இடங்கள் என்பது … Read more

பெண்களுக்கு தனி பட்ஜெட்: எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை – அமைச்சர் கீதா ஜீவன் பதில்!

பெண்களுக்கு தனி பட்ஜெட் என்பது பூர்வாங்க பணியில் உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளதாகவும் அதை மேம்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சாலைகளை மேம்படுத்த 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, முதல் கட்டமாக 90 கோடியில் … Read more

கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிடும் அதிமுக? – பேரவையில் கே.பி.முனுசாமி பேசியது என்ன?

‘அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அடித்துக் கொண்டிருந்தால் தான், நமக்குள் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சியாக இருக்க முடியும்’ என கே.பி. முனுசாமி ஆவேசமாக பேசியுள்ளார். நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி, தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 56 வாக்குறுதிகளில் விவசாயிகளுக்காக இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால் நிதிநிலை அறிக்கையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதாக கூறினார். தி.மு.க. வாக்குறுதியில் இடம்பெற்ற நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ஆயிரம் ரூபாயும் … Read more

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி!

பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரைப் பின்னணி பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக, இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, லால்குடி ஜெயராமன், டி.ஆர். பாலாமணி ஆகியோரிடம் வாய்ப்பாட்டு கற்றவர். கடந்த 2021-ம் ஆண்டு, மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதையும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக இசை ரசிகர்களை தனது ‘வசீகர’ குரலால் கவர்ந்த இவர், தமிழ், … Read more

சொத்து வரி மற்றும் தொழில் வரியினை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தவேண்டும்-சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் 2022-23 நிதியாண்டுக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரியினை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை சுமார் 1400 கோடி வரி வசூல் ஆகியுள்ளதாகவும் தகவல். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும் 200 வார்டுகளும் உள்ளது. இவற்றில், மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் 2022-23 நிதியாண்டு … Read more

காணாமல் போன சாலையை கண்டுபிடிச்சு தாங்க: இளைஞர்கள் அளித்த புகாரால் பரபரப்பு

புதுக்கோட்டையில் நடிகர் வடிவேலு திரைப்பட நகைச்சுவை பாணியில் காணாமல் போன சாலையை கண்டுபிடித்துத் தரக்கேரி காவல் நிலையத்தில் புகாரளித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்திற்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சி 9-வது வார்டு பகுதியில் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் கிராம சாலை உள்ளது. இந்த கிராம சாலை மிகச்சரியாக கீரமங்கலம் மற்றும் செரியலூர் இனாம் ஊராட்சிகளின் எல்லையில் செல்கிறது. 400 மீ நீளம், 8.5 மீ அகலம் இருக்க வேண்டிய … Read more

புகாரைவிட கூடுதலான நகைகளை கைப்பற்றிய போலீசார் – ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த திட்டம்?

லாக்கரில் இருந்த நகைகள் காணாமல் போன வழக்கில், நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கரில் இருந்து நகைகள் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவர் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் … Read more