தளபதி 67 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான அரபிக்குத்து பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூப்பில் 125 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டர் … Read more

சென்னை மேயர் அணியும் அங்கி, தங்கச்சங்கிலியின் பின்னணி

சென்னை மாநகராட்சி மேயருக்கு வழங்கப்படும் அங்கி, செங்கோல், தங்கச்சங்கிலி ஆகியவை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மாநகராட்சிகளில் முதன்மையானது சென்னை மாநகராட்சி. சென்னை மாநகராட்சியின் மேயருக்கு வழங்கப்படும் அங்கி, செங்கோல், தங்கச்சங்கிலி ஆகியவற்றின் பின்னணி சுவாரஸ்யமானது. சென்னை மேயர் இரண்டு நிறங்களில் அங்கி அணிவார். ஒன்று சிவப்பு நிறம் மற்றொன்று கருப்பு நிறம். பதவி ஏற்பு விழா, வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்குபெறும் நிகழ்ச்சி, குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் போன்றோர் பங்குபெறும் … Read more

ரயில்களின் மோதலை தடுக்கும் புதிய தொழில்நுட்பம்: என்ன அது?

இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்தால் மோதலை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கவச் என்ற பாதுகாப்பு அம்சத்தின் செயல்விளக்கம் வெற்றிகரமாக நடந்தது. விபத்தில்லாத பயணம் என்ற திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரே தண்டவாளத்தில் வரும் ரயில்களின் மோதலை தடுப்பதற்காக ‘கவச்’ என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான செயல்முறையை ரயில்வே உருவாக்கியுள்ளது. இச்செயல்முறை செகந்திரபாத் அருகே நிகழ்த்திக் காட்டப்பட்டது. ’கவச்’ தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்ட இரு ரயில் என்ஜின்கள் ஒரே … Read more

ஷாருக்கான் மகன் கைது ஏன்? – 'மின்னல் முரளி' டோவினோ தாமஸ் கருத்து

ஷாருக்கானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் நோக்கத்தில்தான் ஆர்யன்கான் மீது போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டதாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். சிறையில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு 22 நாட்களுக்குப் பிறகுதான் ஜாமீன் கிடைத்தது. இதற்கு பின்பு அரசியல் நோக்கம் இருப்பதாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. பல நடிகர்களும் இதே கருத்தை முன்வைத்திருந்தனர். ஆர்யன்கான் வழக்கு ஒரு அரசியல் … Read more

"மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம்" – பழனிவேல் தியாகராஜன்

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். ஆங்கில ஊடகம் சார்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு தெரிவித்தார். மத்திய அரசின் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் சிறந்து விளங்குவதாகவும் கூறினார். … Read more

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட கேரள கர்ப்பிணி: குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறார்?

கேரளாவைச் சேர்ந்த அபிஜித் என்பவர், தனது கர்ப்பிணி மனைவியுடன், உக்ரைனில் உள்ள கீவ் நகரில் சிக்கிக்கொண்டார். மத்திய அரசின் ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையின் கீழ் இவர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டு போலந்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலந்து-உக்ரைன் எல்லையில் இருந்து பேசிய அபிஜித், “எனது மனைவி போலந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். எனது மனைவியும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனது குழந்தை … Read more

கூட்டணி அறம் காத்துள்ளார் முதல்வர் – திருமாவளவன்

கூட்டணி அறத்தை காக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை திமுக ஏற்றதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சிகளில் தலைமைப்பொறுப்புக்கான தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை உணர்ச்சிப்பூர்வமாகவும் முதிர்ச்சி நிறைந்ததாகவும் இருந்ததாக திருமாவளவன் தன் அறிக்கையில் கூறியுள்ளார். சில இடங்களில் நடந்த அத்துமீறல்களுக்கு திமுக தலைமை காரணமில்லை என்றபோதும் அதனை சீர்செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து முதல்வர் ஆற்றியுள்ள எதிர்வினை … Read more

திடீரென ஒத்திவைக்கப்பட்ட இந்திய விமானப்படை பயிற்சி: காரணம் என்ன?

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படை நடத்தவிருந்த பயிற்சி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது நாடெங்கும் 3 ஆண்டுக்கு ஒரு முறை வாயு சக்தி என்ற பெயரில் ராஜஸ்தானின் பொக்ரானில் இந்திய விமானப்படை பயிற்சி செய்வது வழக்கம். இந்தாண்டுக்கான பயிற்சியை 148 விமானங்களுடன் நாளை மறுநாள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் எனக் கூறப்பட்டிருந்தது. ரஃபேல் விமானங்கள் முதல் முறையாக இந்நிகழ்ச்சியில் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பதவி விலகுங்கள்: கூட்டணிக்கு எதிராக வென்ற திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க.வினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 22-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். இதையடுத்து இன்று காலை நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் … Read more

ஆர்.ஜே. பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்

மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த ‘தியான்’ படத்தின் இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் தமிழ் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்.ஜேவாக இருந்து நகைச்சுவை நடிகராக உயர்ந்த ஆர்.ஜே. பாலாஜி தற்போது, தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன. இதையடுத்து ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்தப் படத்தின் இறுதிகட்ட … Read more