அதிமுக நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

தேனி மாவட்டத்தில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால், அதிமுக நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறி, அதிமுகவை சேர்ந்த 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு படி, 6 கவுன்சிலர்கள் உட்பட 7 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

‘நீங்க இல்லாம நான் இல்ல’ – சிம்பு உருக்கம்

’மாநாடு’ படத்தின் 100-வது நாளையொட்டி நடிகர் சிம்பு உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி தொடர்ந்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது. குறிப்பாக, திரைக்கதைக்காக பலரும் வெங்கட் பிரபுவை கொண்டாடுகிறார்கள். சிம்புவுடன் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்த‘மாநாடு’ வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூல் சாதனையையும் செய்தது. வெற்றியின் உற்சாகத்தில் ‘மாநாடு 2’ எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார் … Read more

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 6 மற்றும் 7-ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வரை தரைக்காற்று … Read more

உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி – ஸ்டீல் விலை கடும் உயர்வு

ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியாக, ஸ்டீல் (எஃகு) விலை டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான போர் தீவிரமடைந்தால், இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று தொழில்துறையினர் தெரிவிக்கிறார்கள். ஸ்டீல் உருவாக்கத்திற்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான நிலக்கரியில், 85 சதவிகிதம் இறக்குமதியை இந்தியா நம்பியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதானமாகவும், தென் ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து நிலக்கரியை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில், உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக, வர்த்தகச் … Read more

'மாநாடு' வெற்றியை தமிழ்த் திரையின் வெற்றியாக பார்க்கிறேன் – சிம்பு

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தமிழ்த்திரையின் வெற்றியாக பார்ப்பதாக நடிகர் சிம்பு கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகி வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்ததால் கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு மாநாடு மீண்டும் திரையிடப்பட்டது. இந்த நிலையில் இன்றுடன் மாநாடு திரைப்படம் 100 நாட்களை நிறைவு செய்கிறது. இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சிலம்பரசன் மாநாடு திரைப்படத்தை பார்த்தார். அப்போது … Read more

பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ரவிக்குமார் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான வார்டுகளை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றின. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றனர். இதனை சுட்டிக்காட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை … Read more

கவனம் ஈர்க்கும் அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’தீயவர் குலைநடுங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ‘திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படங்களுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் அர்ஜுனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அருள்குமார் தயாரிக்க தினேஷ் லக்‌ஷ்மணன் இப்படத்தை இயக்குகிறார். ”ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. … Read more

அதிமுகவில் திருப்பம்? – சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு

வி.கே.சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்தார். முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் வி.கே.சசிகலா இரண்டு நாட்கள் ஆன்மிக பயணமாக தென்மாவட்டங்களுக்கு செல்வதாக அறிவித்திருந்தார். இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் ஆன்மிக பயணம் செல்வதாகவும், தொண்டர்களை மட்டுமே சந்திக்கவிருப்பதாகவும், எந்தவொரு ஆலோசனைக் கூட்டமோ, கட்சி சார்ந்த அலுவல் கூட்டமோ இல்லை என அறிவித்திருந்தார். ஆனால், இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்றிருந்த சசிகலாவை திருச்செந்தூரில் ஓபிஎஸ்-இன் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசிவருகிறார். இந்த சந்திப்பு குறித்து … Read more

’வைகைப்புயலை இயக்கும் கனவு நிறைவேறியது'- மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தில் நடிகர் வடிவேலு இணைந்ததையொட்டி வடிவேலுவுக்கு பூச்செண்டு கொடுக்கும் புகைப்படத்தை உற்சாகமுடன் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். லைகா புரொடொக்‌ஷன் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அதேசமயம், நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார். மாரி செல்வராஜ் – உதயநிதி இணையும் ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்ததாக, நெல்சன் இயக்கும் ‘ரஜினி 169’ … Read more

“முதலில் எம்.ஜி.ஆர் படத்தை போஸ்டரில் பெருசா போடுங்க!”-வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 3-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘இன்றைய அதிமுகவுக்கு சசிகலாவின் தேவை… அவசியமா? இல்லையா?’ எனக் கேட்டிருந்தோம். இதற்கு வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை … Read more