"அதிமுகவின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்" – திருமாவளவன் கருத்து

அதிமுகவை வழிநடத்த சரியான ஆளுமை இல்லை, பாஜக உடன் இணைந்ததே அந்த கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், நகராட்சி துணைத் தலைவர்களின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த நகர்ப்புற … Read more

இதுவரை எத்தனை இந்தியர்கள் உக்ரைனிலிருந்து வந்து இருக்கிறார்கள்? – மத்திய அரசு தகவல்

‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையின் கீழ் 30 விமானங்கள் மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 6,400 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ” எங்களது முதல் ஆலோசனை வெளியானதில் இருந்து மொத்தம் 18,000 இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையின் கீழ் 30 விமானங்கள் மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 6,400 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அடுத்த 24 … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘முசாஃபிர்’ மியூசிக் ஆல்பம் வெளியீடு தேதி அறிவிப்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘முசாஃபிர்’ மியூசிக் ஆல்பம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பிற்கு ஐதராபாத்திற்கு சென்றபோது, கொரோனா தொற்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தார். இதனால் சில நாட்கள் மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ‘முசாஃபிர்’ என்ற டைட்டில் கொண்ட இந்த மியூசிக் ஆல்பத்தின் … Read more

"கேரள அரசு அனுமதிக்க வேண்டும்"- முல்லை பெரியாறு தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கடிதம்

“முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு கேரளா அனுமதி அளிக்கவேண்டும்” என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், முல்லை பெரியாறு பராமரிப்பு பணிகளுக்கு கேரளா ஒத்துழைப்பு தர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், “முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி தர வேண்டும். மேலும் அணைப் பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளை அமைக்க கேரள … Read more

“போரில் பூனையை யார் பார்த்துக்கொள்வார்கள்?”- தமிழக மாணவரின் நெகிழ்ச்சிப் பேட்டி

“நான் தாயகம் திரும்பி விட்டால், போர் நடைபெறும் அந்த இடத்தில் எனது பூனையை கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் என்னுடைய செல்லப்பிராணியையும் என்னுடன் அழைத்து வந்துவிட்டேன்” என தர்மபுரியை சேர்ந்த மருத்துவ மாணவர் கவுதம் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே கடுமையான போர் நடைபெற்று பெறும் சூழலில் இந்திய விமானப்படையின் விமானம் மூலம் உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள், செல்லப்பிராணிகளையும் அழைத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா … Read more

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் இணையும் முன்னணி நடிகர்? – வெளியான தகவல்

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில், நடிகர் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து அண்மையில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சிம்புவிற்கு இந்தப் படம் கம்பேக்காக அமைந்தது. இதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில், சிம்பு நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. … Read more

தமிழ்நாட்டில் எத்தனை நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு? – வானிலை மையம் தகவல்

வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை … Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி! 

உக்ரைன் மீது படையெடுத்துள்ளது ரஷ்யா. அதன் காரணமாக இரு நாடுகளும் போரிட்டு வருகின்றன. அதனால் உக்ரைன் நாட்டில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்கள் மற்றும் பணி நிமித்தமாக சென்ற நாட்டு மக்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் பத்திரமாக மீட்டு வரும் பணியை மேற்கொண்டு வருகிறது இந்தியா.   இந்த சூழலில் உக்ரைன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வாரணாசியில் இன்று நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பிரதமரை … Read more

’ஹே சினாமிகா’ திரை விமர்சனம்: ’ஹே சூப்பர்ப்பா’

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தமிழ் இதயங்களை கொள்ளையடித்த செம்ம ஹிட்டுக்குப் பிறகு, துல்கர் சல்மானின் நேரடி தமிழ்ப்படம் ‘ஹே சினாமிகா. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் துல்கர் சல்மானின் படம்… பிருந்தா மாஸ்டர் இயக்கியுள்ள முதல் படம்… ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் தமிழில் தயாரித்திருக்கும் முதல்… இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸ் ஆகியுள்ள ‘ஹே சினாமிகா’, அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? ஓவர் அக்கறையுடன் கவனித்துக்கொண்டு… பேசிக்கொண்டேஏஏஏ… இருக்கும் ஹவுஸ் ஹஸ்பண்டை பிரிய வித்தியாசமான முடிவை எடுக்கும் மனைவி. … Read more

தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு – எவ்வளவு தெரியுமா?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து கூடுதல் மத்திய நிதியுதவி வழங்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு ரூ. 352.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ரூ.17. 86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களிடமிருந்து நிதியுதவி … Read more