'உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும்' – பிரதமர் மோடி

தீபாவளியன்று, மட்கலங்களால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்குவது மட்டுமே உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்பதாக ஆகாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய, இணையதளத்தில் ‘மேக் இன் இந்தியா ஃபார் தி வேர்ல்ட்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். அப்போது உரை நிகழ்த்திய அவர், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆராய்ச்சி அடிப்படையிலான எதிர்கால அணுகுமுறை தேவை என்றும், அதற்கு நாம் பெரிய அளவில் சிந்திக்க வேண்டும் … Read more

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் எப்போது ரிலீஸ்? – படக்குழு வெளியிட்ட அறிக்கை

கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படம், திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கொரோனா உள்ளிட்ட பல கபாரணங்களால் தளளிவைக்கப்பட்டு தற்போது படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. … Read more

பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்;தியுள்ளனர். தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இன்று பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை தமிழ்நாடு கடல்சார் வாரியம் துறைமுக அதிகாரிகள் … Read more

நாம் அவர்களிடம் போரை நிறுத்தச் சொல்ல முடியுமா? – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

போரை நிறுத்துமாறு நாம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கேட்க முடியுமா? என்று உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார் இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்வி ரமணா, “இந்த விஷயத்தில் நாம் என்ன செய்ய முடியும்? நாளை புடினுக்கு உத்தரவு பிறப்பிக்கச் சொல்வீர்களா…நாம் அவர்களிடம் போரை நிறுத்தச் சொல்ல முடியுமா? மாணவர்கள் மீது எங்களுக்கு முழு அனுதாபமும், அக்கறையும் உள்ளது. … Read more

திமுக சார்பில் போட்டியிடும் மேயர் – துணை மேயர் வேட்பாளர்கள் யார் யார்? முழு விவரம்

நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர் – துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பெயர்களை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அந்த வேட்பாளர்களின் விவரங்கள், பின்வருமாறு: சென்னை:மேயர் – ஆர்.பிரியா, எம்.காம்துணை மேயர் – மு.முகேஷ் குமார் பி.ஏ. மதுரை:மேயர் – இந்திராணி பி.ஏ, எம்.எல்.ஐ.எஸ். திருச்சி: மேயர் – மு.அன்பழகன் எம்.ஏ,துணை மேயர் – திவ்யா தனக்கோடி திருநெல்வேலிமேயர் – பி. எம். சரவணன் பி.ஏ.துணை மேயர் – … Read more

உக்ரைனில் பணயக் கைதிகளாக இந்தியர்கள்? இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் யாரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை என உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று கருதி கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் நேற்று அவசர அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால், சில இடங்களில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் உக்ரைன் வீரர்களால் … Read more

'கே.ஜி.எஃப். 2' டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 27ம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாக உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எஃப்.: சாப்டர் 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இந்தப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய … Read more

சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் – முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி

அதிமுக தலைமையை சசிகலா ஏற்கவேண்டும்; டிடிவி தினகரன் வழிநடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, ”ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கட்சியை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். தமிழக மக்கள் அதிமுகவை அதிகப்படியாக விரும்பாமல் வாக்களித்திருக்கிறார்கள். தலைமை சரியில்லாத காரணத்தால் இந்த இயக்கம் தொய்வுற்று இருக்கிறது. 4 வருடத்திற்கு முன்பே உள்ளாட்சித்தேர்தலை நடத்தியிருந்தால் அதிமுக வென்றிருக்கும். அதை விட்டுவிட்டார்கள். எனவே, சசிகலாவும், டிடிவி தினகரனும் இணைந்து கட்சியை … Read more

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் 102-ஐ திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜக ஒரு நகராட்சியை கூட கைப்பற்றவில்லை. 108 நகராட்சிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள நகராட்சிகளில் 102 நகராட்சிகளை ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. எதிர்கட்சித் தலைவரும், பாஜக எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினரின் வசம் இருந்த கண்டாய் நகராட்சியில் திரிணாமூல் … Read more

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழையும், நாளை அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, … Read more