'நெருப்பில்லா சமையல்' – பாளையங்கோட்டை கல்லூரியில் வினோத போட்டி – மாணவிகள் அசத்தல்!

மகளிர் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் நெருப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது. வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, நெருப்பில்லா சமையல் என்ற போட்டி நடத்தப்பட்டது இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகள் துறை வாரியாக பிரிந்து, நெருப்பில்லாமல் இயற்கை முறையிலான உணவுப் பொருட்களை தயார் … Read more

இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்கள்: ஹே சினாமிகா முதல் ’ஜுண்ட்’ வரை

இந்தவாரம் துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படம் முதல் அமிதாப் பச்சனின் ‘ஜுண்ட்’ திரைப்படம் வரை வெளியாகின்றன. ‘ஹே சினாமிகா’ துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் வெளியாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றிக்குப்பிறகு துல்கர் நடிக்கும் … Read more

வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது புயல் சின்னம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் அண்மையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு … Read more

குழந்தைகளுடன் குறைவான நேரத்தை செலவிடுவதாக பெற்றோர்கள் கவலை – ஆய்வில் தகவல்

பெரும்பாலான குடும்பங்களில் அனைவரும் ஒன்றாக இருந்தும் தங்கள் பொழுதை தனியாகவே கழித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‘ஒன்றாக இருந்தும் தனித்திருக்கும்’ (Alone-together) நேரம் என சொல்கின்றனர். குழந்தைகளும், பெற்றோர்களும் ஒரே இடத்தில் இருந்தும் தனித்தனியாகவே இருப்பதாக குழந்தைகள் தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட இணை ஆய்வறிஞர் தெரிவித்துள்ளார்.  குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட தவறிய இந்திய பெற்றோர்கள் குற்ற உணர்வுடன் இருப்பதாகவும், அழுத்தத்துடன் இருப்பதாகவும் உணர்வதாக கடந்த 2014 வாக்கில் வெளியிடப்பட்ட IKEA பிளே … Read more

’ஏகே61’ படத்திற்காக 25 கிலோ உடல் எடையைக் குறைக்கும் அஜித்- வெளியானது புதிய அப்டேட்

’அஜித் 61’ படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையைக் குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். வரும் மார்ச் 9 ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை கடந்த ஒரு மாதமாக ’அஜித் 61’ படக்குழுவினர் அமைத்து வருகிறார்கள். வரும் தீபாவளிக்கு ’அஜித் 61’ படத்தினை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். நாயகியாக … Read more

தூத்துக்குடி மாணவி சோபியா கைது விவகாரம் – தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பாஜக குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக கூறி, அவருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியாவும், அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் ஒன்றாக பயணித்தனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கியதும், பாஜக குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் … Read more

‘பொன்னியின் செல்வன்’ மிரட்டலான போஸ்டர்களுடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளது படக்குழு. இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதற்கான, படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி, மத்திய பிரதேசம், ஊட்டி என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், … Read more

’ராஜேந்திர பாலாஜிக்கு விஷ்வாசமாக இருப்பேன்’ எனச் சொல்லி பதவியேற்ற மாமன்ற உறுப்பினர்!

சிவகாசி மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரைச்சொல்லி பதவியேற்றுக் கொண்ட மாமன்ற உறுப்பினர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி முதன்முதலாக அறிவிக்கப்பட்டு, மேயராக பெண் ஒருவர் அமர உள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், 48 வார்டுகளை கொண்ட சிவகாசி மாநகராட்சியில், 2 அதிமுக உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைவரும் திமுகவில் இணைந்தனர்.  இதனால் தற்போது திமுகவின் பலம் 45 ஆக அதிகரித்துள்ளது. இன்று சிவகாசி மாநகராட்சியில் … Read more

"தொழில்நுட்பத்துறையில் நாடு சுயசார்பு நிலையை எட்டுவது அவசியம்" – பிரதமர் மோடி பேச்சு

தொழில்நுட்பத்துறையில் நாடு சுயசார்பு நிலையை எட்டுவது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இணையதள கருத்தரங்கு ஒன்றில் பேசிய பிரதமர், தொழில்நுட்ப அடிப்படையிலான வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் தந்து வருவதாக கூறினார். கடந்த மத்திய பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், ட்ரோன் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அடுத்து வரவுள்ள 5ஜி தொழில்நுட்பம், வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தாண்டு 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் … Read more

”ஹே சினாமிகா இறுதிநாள் படப்பிடிப்பின் போது அழுதேன்” – அதிதி ராவ் பேட்டி

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில், நாயகியாக நடித்துள்ள அதிதி ராவ் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசும்போது, இந்தப் படத்தை நீங்கள் எதனால் ஒப்புக்கொண்டீர்கள்? “பிருந்தா மாஸ்டரை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடன் பணியாற்றுவதை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் … Read more