பரபரப்பாக ஹெல்மெட் அணிந்து வந்து பதவியேற்ற கவுன்சிலர்கள்: காரணம் இதுதான்

ஹெல்மெட் அணிந்து வந்து பதவியேற்ற கவுன்சிலர்கள் அடுத்த சில நிமிடங்களில் டெம்போ ட்ராவலர் வேனில் மின்னல் வேகத்தில் பறந்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக 10 உறுப்பினர்களை பெற்று தலைவர் பதவியை கைப்பற்றுகிறது. திமுகவினர் கடும் முயற்சி செய்து அதனை தடுக்க முயன்று வருவதாக அதிமுக தரப்பினர் புகார் கூறுகின்றனர். பதவியேற்க வந்தால் அதிமுக உறுப்பினர்களின் மண்டையை உடைப்போம் என மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் பாதுகாப்பு கருதி ஹெல்மட் அணிந்து வந்த கவுன்சிலர்கள் அவசர அவசரமாக … Read more

ஜிவி பிரகாஷின் ‘செல்ஃபி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்த ‘செல்ஃபி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தற்போது அதிகளவில் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘செல்ஃபி’. இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில், பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் … Read more

திருவேற்காடு நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு

திருவேற்காடு நகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். திருவேற்காடு நகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 11, காங்கிரஸ் 1, சுயேட்சைகள் 6 பேர் என மொத்தம் 18 பேர்வெற்றி பெற்றனர். இவர்கள் திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் 18 பேரும் இன்று நகர்மன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது முழுமையான பெயரை கூறி பதவியேற்றுக் கொண்டனர். … Read more

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? வெளியானது அறிவிப்பு

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது நடக்கவுள்ளதென்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அமைச்சர் இதுதொடர்பாக இன்று அறிவித்தவற்றில் குறிப்பிடப்பட்டவை: * செய்முறை தேர்வு: 10, +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு 25-04-2022ல் தொடங்கும் * தேர்வு எப்போது? பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தொடங்கி மே 28-ம் வரை தேர்வு நடைபெறும் +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி … Read more

உக்ரைன் போர் எதிரொலி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலராக உயர்ந்துள்ளது. உக்ரைனில் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் தாக்கம் சர்வதேச பொருள் வர்த்தக சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக உலகின் முக்கிய எரிசக்தி ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் விலை 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து 110 டாலரை தொட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் … Read more

'விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்… படக்குழு உற்சாக அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஜூலை மாதம் படத்திற்கான பணிகள் யாவும் தொடங்கின. இந்நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்களில் ‘விக்ரம்’ படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. அனிருத்தின் இசையில், இந்தப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் … Read more

மகா சிவராத்திரி: தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடைபெற்ற நாட்டியாஞ்சலி

மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது மகா சிவராத்திரி. இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு மாலை முதல் அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் … Read more

இந்திய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 11% அதிகரிப்பு

இந்தியப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சென்ற 2021-ஆம் ஆண்டில் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனமான KNIGHT FRANK தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 226 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்புள்ள பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 287 லிருந்து 13 ஆயிரத்து 637ஆக உயர்ந்துள்ளது. இதில், பெங்களூருவில் அதிகபட்ச வளர்ச்சியாக 17.1 சதவீதம் அதாவது 352 பேரும், டெல்லியில் 210 பேரும், மும்பையில் ஆயிரத்து 596 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் மற்றும் … Read more

மின்வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாடம் படிக்கும் இருளர் இன குழந்தைகள்

ராணிப்பேட்டையில் இருளர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வீட்டில் வைக்கப்படும் சிறு சிறு விளக்குகளை வைத்தும், மெழுகுவர்த்தி வைத்தும் படிக்கும் சூழ்நிலையால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். விரைவில் தங்களுக்கு மின் வசதி சேவையை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம், அத்தியானம் கிராமத்தைதில் 20 கும் மேற்பட்ட இருளர் இன சமூகத்தை சேர்ந்த குடும்பங்களில், 60 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக தங்களுக்கு மின் வசதி … Read more

‌‌‌உ‌‌க்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி: இந்தியாவில் உயரும் சூரியகாந்தி எண்ணெய் விலை

உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. உலகில் சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தியில் சுமார் 80% பங்கை உக்ரைன் வகிக்கிறது. உக்ரைனில் தற்போது போர் நடந்து வருவதால் அங்கிருந்து இந்தியா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சூரிய காந்தி எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக உக்ரைனில் இருந்து வரும் சூரியகாந்தி எண்ணெயில் 65 சதவிகிதத்தை தென்னிந்தியாவே அதிகம் பயன்படுத்தும் நிலையில் விலையேற்றமும் இங்கு … Read more