”நிஜத்திலும் ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்கவே எனக்கு ஆசை ” : துல்கர் சல்மான் பிரத்யேக பேட்டி

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி, புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக துல்கர் சல்மான் மனம் திறந்துள்ளார். ஹே சினாமிகா படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்? “’ஹே சினாமிகா’ ஒரு காதல் படம். பொதுவாக, படங்களில் காதலன், காதலி கடைசியில் ஒன்று சேர்ந்து திருமணத்துடன் படம் நிறைவடையும். ஆனால், ’ஹே சினாமிகா’வில் திருமணத்தில்தான் படமே தொடங்குகிறது. அதன்பிறகு, இருவருக்கும் நடைபெறும் சின்ன சின்ன பிரச்சனைகள், … Read more

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 4-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் நான்காம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும், தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வருகிற 4ஆம் தேதி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் … Read more

”உக்ரைனில் இந்திய மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள்” – நாடு திரும்பிய மாணவி அதிர்ச்சி தகவல்

உக்ரைன் காவலர்கள் இந்திய மாணவர்களை எல்லையை கடக்க விடுவதில்லை என்றும் கடக்க முயன்றால் தாக்குகிறார்கள் என்றும் நாடு திரும்பிய மாணவி தெரிவித்துள்ளார். உக்ரைனில் போர் நடந்து வருவதையடுத்து அங்கு தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனில் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கிருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து நாடு திரும்ப இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி கடும் குளிரில் குவிந்து வருகிறார்கள். … Read more

காலத்தால் அழியாத காவியப் படைப்புகளை தந்த ஏழிசை மன்னர் எம்.கே.டி. பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்த்திரையுலகின் எவர் க்ரீன் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் 112 ஆவது பிறந்த நாளான இன்று அவரது நினைவலைகளில் சற்று நீராடலாம். மன்மத லீலையை வென்றார் உண்டோ, இப்படி காலத்தால் அழியாத பாடல்களையும், வருடக்கணக்கில் திரையரங்கில் ஓடிய காவிய படங்களிலும் நடித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.டி. 7 வயதிலேயே நாடகக்குழுவில் இணைந்து கலக்கியவர். எளிய குடும்பத்தில் பொற்கொல்லரின் மகனாக பிறந்தாலும், தமது கலைத்திறனால் கோலோச்சியவர். தமிழ்த்திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் நாயகன். மாயவரம் … Read more

கடலூரின் துணை மேயர் பதவியை கேட்கும் தவாக – கூட்டணி கட்சிகள் உடன் திமுக ஆலோசனை

உள்ளாட்சிப் பதவிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என் நேருவின் இல்லத்தில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இடப்பங்கீடு குறித்த இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, … Read more

பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,33,026 கோடியாக உயர்வு

நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சென்ற பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவிகிதம் அதிகமாகும். அதேநேரம், சென்ற ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலான ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 986 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வசூலில் … Read more

“அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை” – அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட்

“அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை”  என்று அஜித் சார்பில், அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார். ‘வலிமை’ படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24 ஆம் தேதி வெளியானதால் ’அஜித் அரசியலுக்கு வருகிறார்’ என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பேசியதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் சார்பாக விளக்கம் கொடுத்துள்ளார். அவரது அறிக்கையில், ”அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. … Read more

கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமானதா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது உக்ரைன் விவகாரம், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வெளியுறவுத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் அதனை கண்காணித்து வருகிறார். பிரதமர் மோடி கிட்டத்தட்ட 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளார். உக்ரைன் ஒரு பெரிய நாடு. உக்ரைனின் மேற்கு பகுதியில் யுத்தம் அதிக அளவில் இல்லை. அதனால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பெரிய அளவில் … Read more

”நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்தான் வெளிநாடுகளில் படிக்கிறார்கள்” – மத்திய அமைச்சர்

இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கிறார்கள் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார் இது தொடர்பாக பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ” வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்லக்கூடிய மாணவர்கள் 90 சதவிகிதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான். மாணவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்று விவாதிக்க இது … Read more

நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினியுடன் இணையும் வடிவேலு?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி – வடிவேலு கூட்டணி என்றாலே அனைவருக்கும் ‘சந்திரமுகி’தான் நினைவுக்கு வரும். வடிவேலுவுக்கு காமெடிக் காட்சிகளில் டஃப் ஃபைட் கொடுத்திருப்பார் ரஜினி. சந்திரமுகியின் வெற்றிக்கு அதன் கதை ஒரு காரணமாக இருந்தாலும் வடிவேலு – ரஜினி காமெடி காம்போவும் பலமாக இருந்தது. இதேகூட்டணி மீண்டும் வாசு இயக்கத்தில் ‘குசேலன்’ படத்தில் இணைந்திருந்தனர். திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் … Read more