TET தேர்வில் வென்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் – 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் மறுநியமனத் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் TET தேர்வுக்கான வயது வரம்பை 58ஆக உயர்த்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2ஆவது நாளாக இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். போராட்டத்தின் போது இரண்டு பெண்கள் மயங்கிவிழுந்தது போராட்டக்காரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

உக்ரைனிலிருந்து கேரளா திரும்பிய 36 மாணவர்கள்

கேரளாவைச் சேர்ந்த 36 மாணவர்கள் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நேற்று (திங்கட்கிழமை) மாலை உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வந்த 36 மாணவர்களில் 25 பேர் கொச்சிக்கும், 11 பேர் திருவனந்தபுரத்திற்கும் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தலைநகர் கிவ்வை விட்டு உடனே வெளியேறுமாறும் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் இன்று கிவ்வை விட்டு வெளியேறுமாறும் இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையும் … Read more

ஆர்.கண்ணன் இயக்கும் ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் ஹன்சிகா

ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், மிர்ச்சி சிவா நடிப்பில் ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்டப் படங்களை இயக்கிவரும் இயக்குநர் ஆர்.கண்ணன் அடுத்ததாக நடிகை ஹன்சிகா மோத்வானியை வைத்து ஃபேண்டஸி ஹாரர் காமெடி படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ஹன்சிகா இப்படத்தில் நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னை ஈசிஆரில் … Read more

“வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவியை வைக்கும் மெக்கானிக்கை பிடிங்க ” – சென்னை கமிஷனர்

அதிக சத்தத்தை எழுப்பும் கருவியை பைக்குகளில் பொருத்தும் மெக்கானிக் ஷாப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை வேப்பேரி, ஈ.வே.ரா பெரியார் சாலை – ஈ.வி.கே சம்பத் சாலை சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் … Read more

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையில் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி மார்ச் மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை 105 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் 19 கிலோ சிலிண்டர் விலை 2,145 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்கள் விலை தொடர்ந்து 915 ரூபாய் ஆகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை ரூ.112 கோடிக்கு கைப்பற்றிய ஓடிடி தளம்

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி – அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். … Read more

தெற்கு ரயில்வே ரயில்கள்: திடீர் சோதனையின்போது கோடிகளில் வசூலான அபராதத்தொகை

மதுரை கோட்டத்தில் ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ. 7.79 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு பரிசோதனையின்போது பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர், பதிவு செய்யப்படாத உடமைகளை கொண்டு செல்வோர், வேறு ஒருவர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் பயணம் செய்வோர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். இதில், மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்களிலும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ரகசியமாக திடீரென பயணச்சீட்டு பரிசோதனை நடத்துகையில், கடந்த  2021 ஏப்ரல் மாதம் … Read more

மகா சிவராத்திரி: 6 மணி நேரத்தில் 23436 ருத்ராட்சங்களை கொண்டு சிவன் சிற்பத்தை வடித்த சிற்பி

ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் மாசி மாதம் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் சிவன் ஆலயங்களில் சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவதும் உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா இன்று (01/03/2022) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரையில் சிவபெருமானின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.  View this post on Instagram A post shared by Sudarsan pattnaik … Read more

மானசரோவர் புனித யாத்திரை மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் – அறநிலையத்துறை அறிவிப்பு

சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்தவர்கள் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரையான காலத்தில் புனித யாத்திரை மேற்கொண்டு முழுமையாக நிறைவு செய்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதற்கு தகுதிபெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhrce.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து சான்றுகளையும் வரிசைப்படி இணைத்து பக்க எண்ணிட்டு ஏப்ரல் 30ஆம் … Read more

தந்தை, மகன் விசாரணைக் காவலில் இறந்தது தொடர்பான வழக்கு – காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட காவலர் சாமதுரையின் தாயார் உயிரிழந்ததால் அவருக்கு மூன்று நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் சாமதுரை, தமது தாயார் உயிரிழந்துவிட்டதாகவும் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜாமீன் … Read more