இரவு நேர வாகன போக்கவரத்து தடை: நோயாளியுடன் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் தமிழக – கர்நாடக எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நோயாளியுடன் ஆம்புலன்ஸ் சிக்கித் தவித்தது. திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடி வரை 23 கிலோமீட்டர் தொலைவிற்கு வனப்பகுதியில் உள்ள சாலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் இரவு நேர வாகன போக்குவரத்து தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாலை … Read more

உக்ரைனில் இருந்து மேலும் 21 மாணவர்கள் தமிழகம் திரும்பினர்

உக்ரைனில் இருந்து மேலும் 21 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனில் இருந்து 250 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் நேற்று மாலை டெல்லிக்கு வந்தடைந்தது. அதில், 21பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர், மாணவிகள் ஆவர். சென்னை, கோவை, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 21மாணவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் அதிகாலை 1.30 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையம் வந்திறங்கிய மாணவர்கள் முக்கிய நகரங்களில் ஆபத்தான நிலையில் இருக்கும் … Read more

அஜித்தின் 'வலிமை' திரைப்பட இயக்குநர் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்: என்ன காரணம்?

வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியதாக இயக்குநர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் … Read more

அந்தமான் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்குள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

”13 வயதில் இருந்தே களத்தில் இருப்பவர் மு.க.ஸ்டாலின்” – பினராயி விஜயன், உமர் புகழாரம்

உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சுயசரிதை நூல் வெளியிட்டுவிழாவில் பேசியிருப்பதை பார்ப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயசரிதையான உங்களில் ஒருவன் நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். பினராயி விஜயன், தேஸ்வி யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். நூல் வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி, கவிஞர் வைரமுத்து, நடிகர் … Read more

’தீயணைப்புத் துறையினருக்கும் சலுகைகள் வழங்குக’ – ஓய்வுபெற்ற டிஜிபி கோரிக்கை

“காவல்துறையினரை போலவே தீயணைப்புத் துறையினருக்கும் பல சலுகைகளை வழங்க வேண்டும்” என ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை டிஜிபி கரன்சின்ஹா கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் இயக்குநரும், டிஜிபியுமான கரன்சின்ஹா, இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். … Read more

“நீங்கள் இல்லாவிட்டால் இசையின் மீதான என் காதலை வெளிப்படுத்தியிருக்கவே முடியாது” – யுவன்

‘ரசிகர்களால் தான் 25 வருடத்தை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளேன். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்’ என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த முதல் திரைப்படமான அரவிந்தன் படம் கடந்த 1997ம் ஆண்டு இதே நாள் வெளியானது. திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், யுவன்சங்கர்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. என் அன்பையும், நன்றியையும் எனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் … Read more

”மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்”-சுயசரிதை நூல்வெளியீட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மாநிலங்களின் உரிமைகள் பறிபோவதால், அம்மாநில மக்களின் அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். உங்களின் ஒருவன் மு.க. ஸ்டாலின் என்ற சுயசரிதை நூல் வெளயீட்டு விழாவில் இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். மு.க. ஸ்டாலினின் முழு பேச்சை கீழே உள்ள வீடியோவில் காணலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

'என் மகன் உங்க வெறித்தனமான ஃபேன்னு விஜய் சார் சொன்னாரு' – யுவன்சங்கர் ராஜா

‘என் மகன் உங்க வெறித்தனமான ஃபேன்னு விஜய் சார் சொன்னாரு’ என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற தன்னுடைய 25 வருட இசைப்பயணம் குறித்த நிகழ்ச்சியில் யுவன் பேசுகையில், ”25 வருடம் எப்படி வேகமாக சென்றது எனக்கு தெரியவில்லை. நா.முத்துகுமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடன் எராளமான பாடல்கள் வேலை செய்துள்ளோம். நாங்கள் பணியாற்றிய பெரும்பாலான பாடல்கள் வெற்றியடைந்துள்ளன. நான் பயணங்களின் போது அப்பா பாடல்களைத்தான் விரும்பிக் … Read more

"3 அலைகளிலும் இதுதான் முதன்முறை" – தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகம் இதுவரை சந்தித்துள்ள 3 அலைகளிலும் முதன்முறையாக 400 க்கும் கீழ் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55,994 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 366 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் சராசரியாக 0.7 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படும் அளவிற்கு தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். கோவிட் முதல் காலகட்டத்தில் 2020 ஜீலை 27 … Read more