இந்தியாவில் பீர் மதுபானத்தின் விலை உயரும் சூழல் – ஏன் தெரியுமா?

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக இந்தியாவில் பீர் மதுபானத்தின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பீர் தயாரிக்கும் மூலப்பொருள்களான பார்லி உள்ளிட்டவை ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து இந்தியா உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே பார்லி உள்ளிட்ட மூலப் பொருள்களின் உற்பத்தி இருந்தாலும் சர்வதேச சந்தையில் அவற்றின் விலை உயரும் போது அதன் தாக்கம் இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும் விலை ஏற்றம் குறித்து மாநில அரசும், உற்பத்தியாளர்களுமே கலந்தாலோசித்து முடிவு … Read more

தனுஷின் ‘மாறன்’ ட்ரெய்லருடன் ரிலீஸ் தேதியை வெளியிட்டப் படக்குழு

தனுஷின் ‘மாறன்’ படத்தின் ட்ரெய்லருடன் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் இருந்த படக்குழுவினர் தற்போது ட்ரெய்லருடன் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்திருக்கிறார்கள். ட்ரெய்லரில் ஊடகத்துறையச் சேர்ந்தவராக கவனம் ஈர்க்கிறார் தனுஷ். மிரட்டல் வில்லனாக சமுத்திரக்கனி … Read more

”நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு

தான் தமிழன் என்று ஏன் சொன்னேன் என்பது குறித்து ராகுல்காந்தி உருக்கமாக உரையாற்றியுள்ளார்.  சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகிய தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் ராகுல்காந்தி பேசுகையில், ”ஒரு அருமையான புத்தகத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். இது பல ஆண்டுகால போராட்டம். தமிழ்நாட்டு மக்களுக்கு … Read more

“யாருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி சொல்லவில்லை” – நிர்மலா சீதாராமன் உரை

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை விளக்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிர்மலா சீதாராமன் பேசியதன் தொகுப்பு: யாருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி சொல்லவில்லை. ஒரு Engine-க்கு Lubricant Oil போலத்தான், அரசுக்கு வரிப்பணமும். எங்கு செல்கிறது ? யாருக்கு செல்கிறது? என்பதை விட அதனால் அரசு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என்பது தான் முக்கியம். முந்தைய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக செலவழிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு … Read more

‘ஜோசப்’ ரீமேக்: ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜோசப்’ படத்தினை ஆர்.கே சுரேஷ் நடிப்பில் ரீமேக் செய்துள்ளார், இப்படத்தின் தயாரிப்பாளர் பாலா. தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, ‘அது விபத்தல்ல திட்டமிட்டக் கொலை’ என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மிரட்டியிருப்பார். மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும் … Read more

ராகுலை தம்பி என அழைத்த சத்யராஜ் – 'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் கலகல பேச்சு!

ராகுல்காந்தியை தம்பி என நடிகர் சத்யராஜ் அழைத்துள்ளார். மேலும், அண்ணா ஸ்டாலின் எனவும், தம்பி ராகுல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், ”நான் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். என்னுடைய ஆங்கிலம் சற்று மோசமானதாக இருக்கும். காரணம், தமிழ் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த ராகுல்காந்திக்கு எனது பாராட்டுக்கள். ஒரு சிங்கத்தைப்போல அவர் நாடாளுமன்றத்தில் … Read more

உக்ரைன் எல்லை நாடுகளுக்கு பயணிக்க இருக்கிறார்களா இந்திய அமைச்சர்கள்? யார்…யார்?

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க 4 அமைச்சர்கள் அங்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் வெலியான தகவலில், மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, விகே சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கு சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்கும் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பர் என்றும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சுமார் 15,000 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டு எல்லையில் … Read more

ஒரே நாளில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படங்களில் ட்ரெய்லர் ஒரே நாளில் வெளியாகின்றன. ‘ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் மார்ச் 10 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், வரும் மார்ச் 2 ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு. அதேசமயம், … Read more

“அதிமுகவில் வென்றவர்களை திமுகவில் சேருமாறு காவல் துறையினர் மிரட்டுகிறார்கள்” – ஓபிஎஸ்

எதிர்கட்சியை அழித்துவிட திமுக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். கட்சி நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்கு பதியாமல், அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அரசு அச்சுறுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். தேனி மாவட்டத்தில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அவர்களை காவல் துறையினர் … Read more

உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி: பிரதமர் மோடி

நாடு முழுவதும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்க முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் கதி சக்தி திட்டம் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பிரதமரின் கதி சக்தி திட்டம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் எனக் கூறினார். தரமான கட்டமைப்புகளை கட்டுவதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்றும், அது விலை மலிவாக … Read more