வசூலில் தெறிக்கவிடும் ‘வலிமை’: நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

அஜித்தின் ‘வலிமை’ வெளியான நான்கே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ கடந்த 24 ஆம் தேதி வெளியானதிலிருந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் வெளியான படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை ’வலிமை’ முறியடித்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே ரூ.36,14 கோடி ரூபாய்யும், இரண்டாவது நாளில் ரூ.24.62 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.20.46 கோடியும், நான்காம் … Read more

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை விவகாரம்: கருத்து தெரிவித்து பற்ற வைத்த கடம்பூர் ராஜூ

அதிமுக ஒற்றை தலைமையில் இயங்குவதாக முடிவெடுத்தால் தொண்டர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் திமுக ஆட்சியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜு பேசும்போது… நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக … Read more

தாக்கிய தேனீ: ட்ரெக்கிங் சென்ற பள்ளி மாணவர்கள் அலறல்

மகாராஷ்டிராவில் ட்ரெக்கிங் சென்ற பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொடுரமாக தாக்கியதில் 21 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள டைனமிக் இங்க்லீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் 64 பேரை ஞாயிற்றுக்கிழமை அம்பா அம்பிகா பகுதிக்கு நான்கு ஆசிரியர்கள் கொண்ட குழு ட்ரெக்கிங் அழைத்துச் சென்றுள்ளனர். மாலை 4 மணியளவில் அவர்கள் மலையேறிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காட்டுத்தேனீக்கள் மாணவர்களை பலமாக தாக்கியிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட 21 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

குஜராத்தி சினிமாவில் தடம் பதிக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்: வெளியான அறிவிப்பு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து குஜராத்தி மொழியில் படமொன்றை தயாரிக்க உள்ளனர். இவர்களின் `ரௌடி பிக்சர்ஸ்’ சார்பில் தமிழில் மட்டுமே படங்கள் தயாராகி வந்த நிலையில், தற்போது அடுத்தகட்டமாக குஜராத்தி திரையுலகிலும் தடம்பதிக்க தயாராகிவிட்டது இந்த ஜோடி! இவர்கள் இருவரின் இணை தயாரிப்பில் `காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீஸூக்கு காத்திருக்கிறது. இந்தப் படத்தை தயாரிப்பதுடன் விக்னேஷ் சிவம் இயக்கவும் செய்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து தங்களின் `ரவுடி … Read more

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்

பெரம்பலூரில் போஸ்டர் ஒட்டக்கூடாது என கூறிய திமுக கவுன்சிலரை, அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் கவுன்சிலராக திமுகவை சேர்ந்த சேகர் என்பவர் உள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான போஸ்டரை அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜ் என்பவர், சேகர் வீட்டின் சுவற்றில் ஒட்டியுள்ளார். இதையடுத்து என் வீட்டின் சுவற்றில் அ.தி.மு.க. போஸ்டரை ஒட்டக்கூடாது என்று சேகர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், தி.மு.க. கவுன்சிலர் சேகரை … Read more

'புர்கா'வில் மறைக்கப்பட்ட தங்கம்: விமான நிலையத்தில் சிக்கிய பெண் !

தெலுங்கானாவில் புர்காவில் தங்கத்தை தைத்து கடத்தி செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தின் தெலுங்கானாவின் ஷாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் எடைகொண்ட தங்கத்தை தனது உடையில் கட்டி கடத்த முயன்ற துபாயை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த தங்கத்தை கடத்துவதற்காக, சிறு சிறு பாசிகளாக அதை செய்து கொண்டு, பின் அதை ரோடியத்தின் (rhodium) மூலம் முலாம் பூசி தனது புர்காவில் தைத்து அதை அணிந்திருந்திருக்கிறார் அந்தப் … Read more

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடம்: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை அகற்றக் கோரி மாணவ மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் காவல் நிலையம் எதிரே உள்ள சத்திய மூலம் நகராட்சி பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 508 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள 11வகுப்பு அறையின் அருகில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தில் சாப்பிட வேண்டியுள்ளது. இந்நிலையில், இந்த கட்டடம் எந்த நேரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தின் மேற்கூரைகள் … Read more

ருமேனியாவிலிருந்து 249 பேருடன் இந்தியா வந்தடைந்த விமானம்: இதுவரை எத்தனை பேர் மீட்பு?

உக்ரைனில் இருந்து மேலும் 249 இந்தியர்கள் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் தாயகத்துக்கு பத்திரமாக அழைத்துவரப்பட்டனர். உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அங்கு வசித்த மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் ஏற்கெனவே ஆயிரம் பேர் தாயகம் அழைத்துவரப்பட்டனர். தற்போது 5ஆவதாக சிறப்பு விமானம் ஒன்று ருமேனியாவிலிருந்து இந்தியா புறப்பட்டுள்ளது. அதில் … Read more

'வாகன கடனை கட்டவில்லை' தனியார் வங்கி ஊழியர்கள் செய்த அராஜகம்

கறம்பக்குடி அருகே வாகன தவணை தொகையை கட்டவில்லை என தாய் மகன் மீது தனியார் வங்கி ஊழியர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெத்தாரிகுளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மனைவி பராசக்தி. தர்பூசணி பழ வியாபாரம் செய்து வரும் பராசக்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி மூலம் கடன் பெற்று டாட்டா ஏஸ் வாகனம் ஒன்றை வாங்கி அதன் மூலம் பழ வியாபாரம் செய்து … Read more

"இந்தியர்களின் பாதுகாப்பே முக்கியம்" – அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடி

உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர்களை தாயகத்திற்கு அழைத்துவர போதிய … Read more