சமூகநலத்துறை அதிகாரிகளை மிரட்டி லஞ்சம் – இணை இயக்குநர் மீது வழக்கு

சமூக நலத்துறை அதிகாரிகளையே மிரட்டி லஞ்ச பெற்றதாக அத்துறையின் இணை இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமூகநலத்துறையில் மதிய உணவுத் திட்டத்தின் இணை இயக்குநராக இருப்பவர் ரேவதி. இவர் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் மற்றும் சத்துணவு ஊட்டச்சத்து மாவட்ட திட்ட அதிகாரிகளுக்கு எதிராக போலியான லஞ்சப் புகாரை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லஞ்ச … Read more

உடல் பருமன் பாதிப்புகள் எதிரொலி: சில உணவுப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?

இந்தியாவில் உள்ள மக்களிடம் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்னையை தீர்க்க அதிக உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள நிதி ஆயோக், … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

பொதுமக்களுக்கு தேர்தல் மீதே நம்பிக்கை போய் விட்ட காரணத்தால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது. டிபன் பாக்ஸில் பணம் வைத்து வீட்டுக்கு வீடு கொடுத்ததுதான் திராவிட மாடல் வெற்றியா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற … Read more

ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் அந்நாட்டிடம் இருந்து இந்தியா பாதுகாப்பு சாதனங்களை கொள்முதல் செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது உக்ரைனில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்து பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவுக்கும் மறைமுக பாதிப்புகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ் 400 எனப்படும் ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்தும் வான் பாதுகாப்பு சாதனங்கள் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. எஸ் 400 … Read more

முதல் நாளில் வலிமை படத்தை 5 முறை பார்த்த ரசிகர் – ஹூமா குரோஷி பகிர்ந்த நெகிழ்ச்சிப் பதிவு

முதல் நாளில் வலிமை படத்தை 5 முறை பார்த்த ரசிகர் ஒருவர் பற்றி அப்படத்தின் ஹீரோயின் ஹூமா குரோஷி ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பகிர்ந்திருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் நாளிலேயே ரூ.36.14 கோடி ரூபாய்யும், இரண்டாவது நாளில் ரூ.24.62 கோடி ரூபாயும் தமிழகத்தில் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை நிரூபிக்கும் விதமாய் ‘வலிமை’ ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், … Read more

அலையில் சிக்கிய 2 பள்ளி மாணவர்கள் – மெரினா கடலில் குளித்த போது நேர்ந்த பரிதாபம்!

சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஒன்பது பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், மெரினா கடற்கரைக்கு வந்தனர். அப்போது நேதாஜி சிலை பின்புறத்தில் உள்ள கடலில் 9 மாணவர்களும் குளித்து வந்தனர். திடீரென குளித்து கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் கடல் அலையில் சிக்கி காணாமல் போயினர். அதிர்ச்சியடைந்த  சக மாணவர்கள் இது குறித்து மெரினா போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், அடித்து செல்லப்பட்ட இரு மாணவர்களை கடலில் தீவிரமாக … Read more

பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் சென்னை பெண் விமானி உயிரிழப்பு – முதல்வர் இரங்கல்

தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பயிற்சி விமானி உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் நலகொண்டா அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி மகிமா உட்பட 2 பயிற்சி விமானிகள் உயிரிழப்பு.#Helicoptercrashed #Telangana. pic.twitter.com/OO4I5bF5Bc — Lankasri FM (@lankasri_fm) February 26, 2022   சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் மகிமா கஜராஜ். 29 வயதான இவர் குண்டூர்  ஆந்திர மாநிலம் பகுதியில் உள்ள விமான பயிற்சி … Read more

“இது உங்கள் மாஸ்டர் பீஸ்; சொல்ல வார்த்தையில்லை” – ஆலியா பட்டை புகழ்ந்து தள்ளிய சமந்தா!

‘இது உங்கள் மாஸ்டர் பீஸ் திரைப்படம்’ என  ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஆலியா பட்டை புகழ்ந்துள்ளார் நடிகை சமந்தா ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படைப்பு ‘கங்குபாய் கத்தியவாடி’. இந்தப் படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொரோனா காணமாக … Read more

"நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வு" – ஆய்வாளர் வெளியிட்ட தகவல்

மார்ச் 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வு. தமிழ்நாட்டில் அரிதான நிகழ்வாக வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. Time for an weather post for an significant event after a … Read more

மீண்டும் தொடரும் மீனவர் கைது… அச்சத்தில் ராமேஸ்வர மீனவர்கள்! அரசுகள் உதவ கோரிக்கை

ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்து, மீனவர்களின் ஒரு விசைப்படகையும் இன்று கைப்பற்றியுள்ளனர் இலங்கை கடற்படையினர். இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், `இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துள்ளனர்’ எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. … Read more