“இது பீஸ்ட் மோட்” – 12 நாட்களில் புதிய மைல்கல்லை எட்டிய அரபிக் குத்து பாடல்!

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் கடந்த 14-ஆம் தேதி வெளியாகி இருந்தது.   View this post on Instagram A post shared by Sun Pictures (@sunpictures) பாடல் வெளியாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில் யூடியூப் தளத்தில் சுமார் … Read more

குமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மிகவும் பிரசத்தி பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது … Read more

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: அயோத்தி உட்பட 61 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு

403 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐந்தாவது கட்ட தேர்தலில் மொத்தம் 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அயோத்தி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு. வரும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கடைசி இரண்டு கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் … Read more

ரஜினி வெளியிட்ட தோனி நடிப்பில் உருவான 'அதர்வா – தி ஆரிஜின்' கிராஃபிக் நாவல்

இதுவரை கண்டிராத அவதாரத்தில் முன்னாள் இந்திய  கிரிக்கெட் வீரர் & கேப்டன் எம்.எஸ். தோனி நடிப்பில் அதர்வா – தி ஆரிஜின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய யுக கிராஃபிக் நாவலின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையுடன் வெளியிட்டார். புராஜெக்ட் ஹெட் எம்.வி.எம் வேல்மோகன் தலைமையில் ரமேஷ் தமிழ்மணி எழுதி, வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு அசோக் மேனர் தயாரித்த புராணக் கதையின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார்.  அதர்வா, தி … Read more

உக்ரைனில் சிக்கிய மாணவி; பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி தந்தையிடம் ரூ41 ஆயிரம் மோசடி!

உக்ரைனில் சிக்கி இருக்கும் மகளை மீட்டுத்தருவதாகக் கூறி, மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவரிடம் மர்மநபர் ஒருவர் 41 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். போபாலை சேர்ந்த வைஷாலி என்பவரின் மகள் உக்ரைனில் சிக்கியுள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறி வைஷாலியை தொடர்பு கொண்ட மர்மநபர், விமானம் மூலம் அவரது மகளை மீட்டு வருவதற்கு பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி, வைஷாலியும் 41 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியாத … Read more

காதலிக்கு வேறு இடத்தில் நிச்சயம் – ஆத்திரத்தில் காதலர் செய்த வேலையால் போலீஸ் வலைவீச்சு

காதலிக்கு வேறு இடத்தில் நிச்சயமான ஆத்திரத்தில், காதலியுடன் எடுத்த புகைப்படத்தை, அந்தப் பெண் கொடுத்த கவிதை வசனத்தோடு களக்காடு பஜார் முழுவதும் சுவரொட்டியாக ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி பிரமுகர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் … Read more

தமிழகம் முழுவதும் நாளை போலியோ முகாம்கள்

தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு, மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 500 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 1,647 முகாம்களில் சொட்டு மருந்து போடப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாம்களில் சொட்டு மருந்து போட … Read more

உக்ரைனிலிருந்து இந்தியா வரும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசம்: மும்பை மேயர்

உக்ரைன் மீது படையெடுத்து யுத்தம் செய்து வருகிறது ரஷ்யா. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக வசித்து வந்த இந்தியர்களை மீட்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. 219 இந்தியர்கள் மும்பை திரும்பியுள்ளனர்.  இந்த நிலையில் மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு திரும்பும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசம் எனத் தெரிவித்துள்ளார் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர்.  அனைத்து மாணவர்களும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வரை அவர்களுக்கான உணவு, உறைவிடம் மாநகராட்சி சார்பில் … Read more

'வலிமை' வசூலில் சாதனை – மகிழ்ச்சியில் இயக்குநரை சந்தித்த விநியோகஸ்தர்

அஜித்தின் ‘வலிமை’ வசூலைக் குவித்துக்கொண்டு வருவதால் படத்தின் விநியோகஸ்தர் கலைமகன் இயக்குநர் ஹெச்.வினோத்தை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ கடந்த 24 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் நாளிலேயே ரூ.36,14 கோடி ரூபாய்யும், இரண்டாவது நாளான நேற்று ரூ.24.62 கோடி ரூபாய்யும் வசூலித்து, மொத்தம் ரூ.60.79 கோடி ரூபாய்யை தமிழகத்தில் மட்டுமே வசூலித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. அதனை நிரூபிக்கும் விதமாய் ‘வலிமை’ ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. … Read more

"குடிக்க தண்ணீர் கூட இல்லை" – உக்ரைனில் உள்ள தமிழக மாணவி வேதனை

உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு உணவும், தண்ணீரும் கிடைக்காத சூழல் நிலவுவதாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஷைலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறையிடம் அவர் தொலைபேசியில் கூறியதாவது: “உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்-இல் நாங்கள் தற்போது தங்கியுள்ளோம். இந்திய மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே தங்கியிருக்கிறோம். இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி எங்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதால் … Read more