கவனம் ஈர்த்த வெங்கட் பிரபு – அசோக் செல்வனின் ‘மன்மத லீலை’- ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இதனைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மதலீலை’ படத்தினை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகும் இப்படம் குறித்து, “மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்குப் பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் … Read more

ஆத்தூர் அருகே உலகிலேயே உயரமான முருகன் சிலை: ஏப்ரல் 6-ல் கும்பாபிஷேகம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இச்சிலையானது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் கொண்டது ஆகும். இந்த சிலை திறக்கப்பட்டால், இதுதான் உலகிலேயே பெரிய முருகன் சிலையாக இருக்கும். இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. இதுகுறித்து … Read more

’கோப்ரா’ ரிலீஸ் தேதி எப்போது?: ரசிகரின் கேள்விக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர்

’கோப்ரா’ படத்தினை வெளியிட திட்டமிடும் தேதியை அறிவித்திருக்கிறார், அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அருள்நிதியின் ’டிமாண்டி காலனி’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்துள்ளார் விக்ரம். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள ’கோப்ரா’ படப்பிடிப்பு கடந்த … Read more

“இந்த இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது”- உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்கக்கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்தப் பகுதி வேளாண் நிலம் என்பதால் … Read more

புனித் ராஜ்குமார் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் விஜய். 46 வயதான கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.  இதனால், நடிகர் சூர்யா, ராம் சரண், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஷால், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் புனித் … Read more

‘மேடையை விட்டு கீழே இறங்கு‘- கே.எஸ்.அழகிரி முன்னிலையிலேயே காங்கிரஸார் மோதல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையிலேயே காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கிடையே தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைவர் கே.எஸ்அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் மாநில அளவிலான நிர்வாகிகள், மேடையில் கே.எஸ். அழகிரியுடன் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த நிர்வாகி பன்னீர்செல்வம், முனுசாமி என்பவரை பார்த்து மேடையில் இருந்து கீழே இறங்கக்கூறி சத்தம் போட்டார். முனுசாமி இறங்க மறுத்ததால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. … Read more

எந்தெந்த தமிழ் மற்றும் இந்தியப் படங்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டன?

இயற்கை வளங்கள் நிறைந்த உள்ளூரில் என்னதான் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டாலும், படத்தின் ஒரு பாடலையாவது வெளிநாடுகளில் படம் பிடிக்க நமது ஊர் இயக்குநர்கள் சென்று விடுவது வழக்கம். திரையில் வெளிநாடுகளின் இயற்கை அழகை கண்டுக்களிப்பதில், நமக்கும் விருப்பம் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் இயற்கை வளங்கள் நிறைந்த உக்ரைனில், தமிழ் உள்பட சில இந்தியப் படங்களின் பாடல்கள் படம்பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்ரோஷமாக அங்கு போர் நடந்து வரும் நிலையில், இதுபோன்ற தகவல்கள் தேவைதானா என்று கூட நமக்கு தோன்றும். எனினும், … Read more

`நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமற்றது போர்’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 26-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு போர்கள் அவசியமா இல்லையா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. … Read more

நிறைவடைந்த 'விக்ரம்' படப்பிடிப்பு: லோகேஷை மகிழ்வித்த கமல்ஹாசன்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காகவே, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் கமல்ஹாசன். இந்த நிலையில், தற்போது ‘விக்ரம்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கமல்ஹாசன்,லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டப் படக்குழுவினர் கேக் … Read more

தொடர்ந்து குறையும் முட்டையின் விலை: காரணம் என்ன?

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரேநாளில் 25 காசுகள் சரிந்து 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18-ம் தேதி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 23-ம் தேதி 25 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 05 காசுகளாக விலை குறைக்கப்பட்டது. நேற்று மாலை மேலும் 25 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழகம், கேரளாவிலும் … Read more