அஜித்தின் ‘வலிமை’ படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு – எத்தனை நிமிடம்? என்ன காரணம்?

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அஜித் நடிப்பில், திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, ரசிகர்கள் அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தில் பைக் சேஸிங், சண்டைக் … Read more

விடைப்பெற்ற ஆசிரியை… விடைகொடுக்க முடியாமல் கண்ணீர்விட்ட மாணாக்கர்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி உயர்வு பெற்று வேறு பள்ளிக்குச் செல்லும் ஆசிரியைக்கு மாணாக்கர்களும் சக அசிரியர்களும் கண்கள் பனிக்க பிரியாவிடை கொடுத்தனர். விராலிமலை அருகே மலைக்குடிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 11 ஆண்டுகளாக பணியாற்றியவர் ஜெனிட்டா. மாணாக்கர்களிடம் கனிவாக நடந்து கொள்வதோடு, அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார். ஆசிரியை ஜெனிட்டாவுக்கு பதவி உயர்வும் பணியிட மாற்றமும் கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு பிரியாவிடை கொடுக்கும்விதமாக பள்ளியில் நடந்த விழாவில், மாணாக்கர்களின் பெற்றோரும் சக ஆசிரியர்களும் ஜெனிட்டாவுக்கு பரிசுகள் … Read more

"உறவினர்களின் நிலை தெரியவில்லை" ரஷ்ய தூதரகத்தை முற்றுகையிட்ட சொந்தங்கள்

உக்ரைனில் சிக்கியுள்ள தங்கள் உறவினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறி, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தை ஏராளமானோர் முற்றுகையிட முயன்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு குறித்து தெளிவின்மை நிலவுகிறது. அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வருமாறு உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் இருப்போரின் உறவினர்கள் டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு துணை ராணுவத்தினரும் டெல்லி காவல் துறையினரும் … Read more

பழங்குடியினத் தலைவரின் பயோபிக்; பாலிவுட்டில் அறிமுகமாகும் பா. ரஞ்சித் – புதிய அப்டேட்

இயக்குநர் பா. ரஞ்சித் பாலிவுட்டில் அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் வலி நிறைந்த கதைகளை, திரைப்படமாக இயக்கியும், தயாரித்தும் வெற்றிபெற்று வருகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இருந்ததால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதேபோல், இவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளிவந்த … Read more

திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக காரைக்குடி – சென்னைக்கு நேரடி ரயில்!

காரைக்குடியில் இருந்து திருத்ததைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு நேரடி ரயில் இயக்கப்படவுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டியளித்துள்ளார். காரைக்குடியில் தொடங்கி திருவாரூர் வரை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ரயில் பாதை, ரயில் நிலையங்கள் ஆகியவற்றை நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஊழியர்களிடம் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். தொடர்ந்தது திருத்துறைப்பூண்டி ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ரயில்வே பாதையில் உள்ள 70 ரயில்வே வாயில்களுக்கு பகல் நேரத்தில் பணியாற்றும் வகையில் கேட்-கீப்பர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். … Read more

உத்தர பிரதேசத்தில் நிறைவுபெற்றது 5ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரைகள்

உத்தர பிரதேசத்தில் நாளை நடைபெறும் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதி கட்ட பரப்புரை நிறைவடைந்துள்ளது. 403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், அயோத்தி உட்பட 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி என முக்கிய தலைவர்கள் இந்த தொகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டான்‘ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு? – வெளியான தகவல்

சிவகார்த்திகேயனின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு மே 12-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவர இருந்த பல படங்கள், கொரோனா இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக அறிவிப்பு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஊரடங்குகள் தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டு, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக … Read more

"எங்கள் மகனை மீட்டுக் கொடுங்கள்" புதுச்சேரி முதல்வரிடம் பெற்றோர் உறுக்கம்

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவரை மீட்டு தாயகம் அழைத்து வருமாறு முதல்வர் ரங்கசாமியிடம் மாணவரின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்தியால்பேட்டையைச் சேர்ந்த நித்திஷ்குமார் என்ற மாணவர் உக்ரைனில் வினிஸ்டா நகரில் மருத்துவம் பயின்று வருகிறார். தற்போது அங்கு போர் நடந்து வருவதால், உயிருக்கு அஞ்சியும் உணவு கிடைக்காமலும் தவித்து வருகிறார். இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியிடம் நேரில் முறையிட்ட மாணவரின் பெற்றோர், தங்கள் மகனை பத்திரமாக மீட்குமாறு கோரினர். … Read more

உக்ரைனில் சிக்கி தவிக்கும் நெல்லை மாணவி – தமிழக அரசு உதவ பெற்றோர் கோரிக்கை

நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தீபஸ்ரீ என்ற மாணவி 20 நாட்களுக்கு முன்பு மருத்துவம் படிக்க உக்ரைன் சென்ற நிலையில் அங்கு சிக்கியுள்ளார். அவரை மீட்டுத்தர வேண்டும் என அவரது மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 6ஆம் தேதி மாணவி தீபஸ்ரீ மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றார். அங்கு உக்ரைனில் முதலாமாண்டு படித்து வரும் மருத்துவ மாணவி அங்கேயே சிக்கியுள்ளார். மேலும், கல்லூரி விடுதியில் மாணவி தீபஸ்ரீ முடங்கியுள்ளார். இந்நிலையில், மகளை மீட்டுத்தர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். … Read more

ரஷ்யா மீது பொருளாதாரத் தடையின் எதிரொலி – இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதன் எதிரொலியாக பங்குச் சந்தைகள் கணிசமாக உயர்ந்தன. தங்கம் மற்றும் கச்சா எண்ணெயும் விலை குறைந்துள்ளன. உக்ரைன் மீது இரண்டாவது நாளாக தாக்குதலை தொடர்வதால், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக, இன்று ஹான்சாங், நிக்கி, கோஸ்பி உள்ளிட்ட ஆசியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளும் கணிசாமக உயர்ந்தன. … Read more