வெறும் 44 வாக்குகள்: மன உளைச்சலால் மநீம வேட்பாளர் எடுத்த முடிவு

தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே பெற்றதால் விரக்தியடைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வருபவர் மணி (55). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36 வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார். இதனால் தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் 50 ஆயிரம் … Read more

முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

முல்லை பெரியாறு அணையில் 4 மாத இடைவெளிக்குப் பின் துணை கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு செய்கிறது. முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்புக்குழுவை அமைத்தது. இதற்கு உதவியாக துணை கண்காணிப்புக்குழுவையும் நியமித்தது. இந்த துணைக்குழு நவம்பர் 2 ஆம் தேதி அணையில் ஆய்வு நடத்தியது. அதன் பின்னர் நவம்பர் 9 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. டிசம்பர் 22 … Read more

தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 28ஆம் தேதி ராகுல்காந்தி ஆலோசனை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வரும் 28 ஆம் தேதி ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீடு நிகழ்வில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வரும் 28 ஆம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற இருக்கிறது. இதில், வெற்றி பெற்ற மாநகராட்சி, … Read more

ஒருவழியாக நிறைவடைந்த பாலாறு பாலத்தின் சீரமைப்பு பணிகள்: சீரானதா போக்குவரத்து?

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தில் நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாலத்தின் வழியே போக்குவரத்து தொடங்கியது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே இருங்குன்றம் பள்ளி – மாமண்டூர் இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலம் சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த 7 ஆம் தேதி மூடப்பட்டது. இதனால் அவ்வழியே செல்ல வேண்டிய வாகனங்கள், மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாகனப் போக்குவரத்துக்காக பாலம் திறந்து விடப்பட்டுள்ளது. … Read more

'உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்'- ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் அமைதியான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் கூறி வந்த நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் மிக ஆக்ரோஷமான போரை தொடங்கியிருக்கிறது ரஷ்யா. முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய போர் … Read more

ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம்: துரிதமாக செயல்பட்ட செவிலியரால் மகிழ்ச்சியடைந்த தம்பதியினர்

திருப்பத்தூரில் கூலித் தொழிலாளியின் மனைவியை பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இரட்டை ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சின்னசாமி, விஜயசாந்தி தம்பதியினர். இவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தங்கி ஒப்பந்த முறையில் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில்,, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விஜயசாந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை அருகிலுள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். … Read more

வீட்டை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு: சிறுமி மீது நடத்தப்பட்ட தாக்குதல்

வீட்டு உரிமையாளருக்கும், குடியிருப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாடகைதாரர் மகளின் மண்டையை உடைத்த புகாரில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், மாணிக்கம் நகரைச் சேர்ந்த ராஜசேகரன் சுமதி. தம்பதிகளுக்கு, 21 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். மகன், பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் நிலையில், மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில், 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த, 16ம் தேதி, ராஜசேகரன் குடும்பத்தார் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் … Read more

சென்னை: பள்ளி மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு – போலீசார் விசாரணை

சென்னை: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, தேவநேசன் நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (39), இவரது, மனைவி கௌரி (35), இவர்களது 12 வயது மகள் ஜெனிபர் சேலையூரில் உள்ள, தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், ஜெனிபர் கடந்த இரண்டு நாட்களாக, வயிற்று வலியால் அவதிப்பட்டு, பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை … Read more

'பிக்பாஸ் அல்டிமேட்': ஸ்டைலிஷ் லுக்கில் தொகுத்து வழங்கும் சிம்பு

பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்குப் பதில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’பிக்பாஸ்’ நிகழ்ச்சி சீசன் 5 வரை ஹிட் அடித்ததால் ’பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார், சினேகன், ஜூலி, தாமரை, அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள். நடிகர் கமல்ஹாசனே ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தற்போது ‘விக்ரம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாலும் படம் … Read more

மகளின் கண்முன்னே ரயிலில் இருந்து தவறி விழுந்த தந்தை உயிரிழப்பு: இரணியலில் சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் மகள் கண்முன்னே ரயிலில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் ரத்தினராஜ், இவருக்கு ஜெமீலா என்ற மனைவியும் ஆஸ்வின்ராஜ் என்ற மகனும், அன்மரியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ரத்தினராஜ், தனது மகள் அன்மரியாவுடன் இரணியல் ரயில் நிலையத்துக்கு வந்தனர். இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து மங்களூரு செல்லும் பரசுராம் எஸ்பிரஸ் ரயில் இரணியல் … Read more