தமிழகத்துக்கான கோரிக்கை – நிர்மலா சீதாராமனை சந்தித்த பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்த பழனிவேல் தியாகராஜன் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்பட்டால் அந்த தொகைகளை தமிழக அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் சேர்க்க முடியும் என தெரிவித்தார். இந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்படவில்லையானால், அந்த தொகைகளை அடுத்த … Read more

அவசர எண் விளம்பரத்தில் புது யுக்தி- நடிகர் விஜயின் படங்களை வைத்து தெறிக்கவிட்ட கேரள போலீஸ்

கேரளாவில் அவசர உதவி எண்ணை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், அம் மாநில காவல்துறை, நடிகர் விஜயின் படங்களை வைத்து, புது யுக்தியின் மூலம் வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளது வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக நாம் பேருந்திலோ, ரயிலிலோ அல்லது சாலைகளிலோ பயணிக்கும்போது, எதிர்பாராதவிதமாக நமக்கு அவசர உதவி தேவைப்படும். நாம் மட்டுமின்றி நமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாருக்கேனும் உதவி தேவைப்படலாம். அந்தவகையில், அமெரிக்காவில் எல்லா அவசர உதவிக்கும் 911 என்ற எண் இருப்பது போல், … Read more

இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க – மதுரை எம்பி. சு.வெங்கடேசன் கடிதம்

உக்ரைனில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்க்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில்… மதுரையில் இருந்து உக்ரைன் சென்று படிக்கிற மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழ்நாடு அளவில் எனும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். அவர்களின் பெற்றோர்கள் பதட்டத்தோடு என்னை தொடர்பு கொண்டு வருகிறார்கள். உக்ரைனில் போர்ச் சூழல் நிலவுகிறது என்றும் குண்டு வெடிப்புகள் பல … Read more

செங்கல் சூளை வியாபாரிக்கு ஓவர் நைட்டில் அடித்த லக்… கையில் இப்போது ரூ.1 கோடி

மத்தியப் பிரதேசத்தில் செங்கல் சூளை வியாபாரிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் கிடைத்துள்ளது. வாழ்க்கையில் அதிசயம் அற்புதம் எல்லாம் எல்லாருக்கும் தினமும் நடக்குமா என்ன? ஆனால் அந்த எதிர்பார்ப்பு நம் அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. அப்படி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த செங்கல் சூளை வியாபாரி ஒருவருக்கு ஓவர் நைட்டில் கிக்கான லக் அடித்திருக்கிறது. ஆம். மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த சாதாரண செங்கல் சூளை வியாபாரி சுஷில் சுக்லா ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிவிட்டார். … Read more

‘பீப்’ பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

‘பீப்’ பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்புவுக்கு எதிராக, சென்னை காவல்துறையில் பதிவான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் சிம்பு, பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாகக் கூறி, இணையத்தில் ‘பீப்’ பாடல் ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பாடலைப் பாடிய சிம்பு மற்றும் அந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக, பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனைத் தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் … Read more

"தோற்றது போதும் தலைமையேற்க வா தாயே" – மதுரையில் சசிகலா ஆதரவு போஸ்டர்

தோற்றது போதும் எம்.ஜி.ஆர், அம்மா கட்டிகாத்த அதிமுகவிற்கு தலைமை ஏற்க வாருங்கள் என சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து அதிமுகவினரால் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், பல இடங்களில் டெபாசிட்டை இழந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் முடிவுகள் அதிமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக அதிமுகவிற்கு தலைமை மாற்றம் தேவை எனவும், சசிகலா அதிமுகவின் தலைமை ஏற்க … Read more

'இந்தியா ரஷ்யாவிடம் பேச வேண்டும்!' – உக்ரைன் தூதர் கோரிக்கை

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த பிரதமர் மோடி தலையீட வேண்டும் என்று தெரிவித்துள்ள இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா, இந்த பிரச்னை தீர்க்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”ரஷ்யாவுடன் இந்தியா சிறந்த நல்லுறவை பேணி வருகிறது. தற்போது உக்ரைனில் நிலவும் சூழலை கட்டுப்படுத்த இந்தியா தலையிட வேண்டும். இது தொடர்பாக … Read more

”யார் வெற்றி பெற்றாலும் நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி முடிக்க வேண்டும்” – ஐசரி கணேஷ்

”நடிகர் சங்கத் தேர்தல் செல்லும். மறுதேர்தல் தேவையில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை ’வரவேற்கிறேன் என்றும் யார் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்குத் தனது உதவிகள் தொடரும்’ என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணியும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். அதுதொடர்பான, விஷால் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் ”நடிகர் சங்கத் தேர்தல் … Read more

"வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள்" – திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது… எதிர்கட்சியை பழி வாங்கும் நடவடிக்கையாக அமைச்சர் ஜெயகுமார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியை நசுக்கும் முயற்சியில் முதல்வர் … Read more

காணாமல் போன தெரு நாய் – திரும்ப கிடைத்ததால் மலர்தூவி உற்சாக வரவேற்பு ; வைரல் வீடியோ

மும்பை அருகே காணாமல்போன தெரு நாய் திரும்பி வந்ததையடுத்து, அதற்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர். மும்பையில் பிரபாதேவி பகுதியில் வசித்துவந்த ஆதரவற்ற நாய் ஒன்றுக்கு அப்பகுதி மக்கள் விஸ்கி என செல்லப் பெயரிட்டு ஆதரவு கொடுத்து வந்தனர். அங்குள்ள அனைவரிடமும் அன்பாக பழகிவந்த விஸ்கி கடந்த எட்டாம் தேதி காணாமல் போயுள்ளது. இதனால் மனமுடைந்த அப்பகுதி மக்கள் மிஸ்ஸான விஸ்கியை வெகுவாக மிஸ் செய்தனர். ஆனால் எப்படியோ 7 நாட்களுக்குப் பிறகு வில்சன் கல்லூரி அருகே விஸ்கி இருப்பதைப் … Read more