பைக் வேகத்தில் பாதியாவது திரைக்கதைக்கும் வேண்டாமா? – 'வலிமை' திரைப்பார்வை

நீண்ட பெரும் எதிர்பார்ப்புகளை அடுத்து இன்று திரைக்கு வந்திருக்கிறது வலிமை. அஜித், எச்.விநோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய இந்த சினிமா உண்மையில் தமிழ் சினிமா ரசிகர்களை பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம். நேர்மையான காவல்துறை அதிகாரி அர்ஜுனாக வருகிறார் அஜித். சாத்தானின் அடிமைகள் என்ற குழு போதைப் பொருள் விற்பனை, நகைபறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடு படுகின்றன. டெக்னாலஜி உதவியுடன் அவர்கள் செய்யும் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாமல் திணரும் … Read more

”அதிமுகவில் தற்போது தலைமையே கிடையாது” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

“அதிமுகவில் தலைமையே கிடையாது. தற்போது உள்ளவர்கள் கட்சியை வழி நடத்தவே நாங்கள் உருவாக்கியுள்ளோம். பணபலம் மற்றும் அதிகார பலம் தான் திமுக வெற்றிக்கு காரணம்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், … Read more

'ஐ லவ் யூ' என ஒரு முறை கூறுவது பாலியல் தொல்லை அல்ல: போக்ஸோ வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ என்று ஒரு முறை கூறுவது பாலியல் தொல்லை ஆகாது என மும்பை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016ஆம் ஆண்டு மும்பையில் இளைஞர் ஒருவர் தங்களது மகளிடம் ஐ லவ் யூ என்று கூறியதாக அவளது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த இளைஞர் தங்களது மகளைப் பார்த்து முறைத்ததுடன் கண் சிமிட்டியதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். அதன்பேரில், வாடாலா டி.டி. காவல்துறையினர், 23 வயது இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் … Read more

ரிலீஸ்க்கு இரண்டே நாட்கள்.. 'கங்குபாய் கத்தியவாடி' பெயரை மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை

‘கங்குபாய் கத்தியவாடி’ திரைப்படத்தின் பெயரை மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை அலியா பட் நடித்துள்ள இந்தி திரைப்படமான ‘கங்குபாய் கத்தியவாடி’, நாளை நாடு முழுவதும் வெளியாக உள்ளது. பாலியல் தொழிலாளியாக இருந்து மும்பையில் அரசியல்வாதியான கங்குபாய் கத்தியவாடியின் உண்மைச் கதையை அடிப்படையாக வைத்து, இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தை தடை செய்யக் கோரி கங்குபாயின் மகன் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை விசாரித்த … Read more

அன்னதானம், ஊர்வலம்… தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.   மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை, 74 இடங்களில் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் கொண்டாடினர். ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை … Read more

உக்ரைன் போர் – இந்தியர்களை அழைத்து வர சென்ற விமானம் பாதியிலேயே திரும்பியது

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர சென்ற ஏர் இந்தியா விமானம் பாதி வழியிலேயே தாயகம் திரும்பியது. போர் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து உக்ரைனில் உள்ள இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் ரஷ்யா திடீரென இன்று காலை முதல் உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் தலைநகர் கீவில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே … Read more

’வலிமை’ திரையிட தாமதம் – திரையரங்கக் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்

மதுரையில் ’வலிமை’ படத்தை திரையிட தாமதமானதால் திரையரங்கக் கண்ணாடியை உடைத்து அஜித் ரசிகர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நடிகர் அஜித்குமார் நடித்து இரண்டு வருடங்களுக்கு பின்பு திரையரங்குகளில் வலிமை திரைப்படம் இன்று வெளியானது. மதுரையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. நள்ளிரவு ஒரு மணி முதல் ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக திரைப்படத்தை காண திரையரங்குகளுக்கு முன்பு குவிந்தனர். அஜித்குமார் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள், மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கைகளுடன் உற்சாகமாக கொண்டாடி திரைப்படத்தை வரவேற்றனர். இந்நிலையில் … Read more

உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப ஏற்பாடு – உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப விரும்பினால், 044-28515288 / 96000 23645 / 99402 56444 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், மேலும் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவிகள் கோரலாம் என்றும் தமிழக அரசின் அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது உக்ரைன் … Read more

'வலிமை' முதல் காட்சி தாமதம் – திரையரங்கு கண்ணாடி, மேற்கூரைகளை உடைத்து ரசிகர்கள் ரகளை

திரையரங்கு உள்ளே அனுமதிக்காமல் தாமதப்படுத்தியதாகக் கூறி ஆவேசமடைந்த ரசிகர்கள் கண்ணாடி மற்றும் மேற்கூரைகளை உடைத்தனர். அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘வலிமை’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து திரையங்குகளிலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. தமிழகத்தின் பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. இதனையொட்டி ஒவ்வொரு தியேட்டருக்கு முன்பாகவும் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க நடிகர் அஜித் … Read more

'அதிமுக, பாமகவை சிதைக்கும் வேலையை பாஜக செய்யும்' – திருமாவளவன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 13 மாவட்டங்களை சேர்ந்த திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோவை, கரூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் முதல்வரை சந்தித்தனர். ஒரே நாளில் 13 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்கள் குவிந்ததால் அண்ணா அறிவாலயத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. திமுக வேட்பாளர்களை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் … Read more