ஒமைக்ரான் சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்று – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

ஒமைக்ரான் சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்று என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் நேரடியாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஷ் சிங் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “முதல் அலையில் பாதிக்கப்பட்டபோது நான்கு நாட்களில் நான் குணமடைந்து விட்டேன். ஆனால், மூன்றாம் அலை சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்றாக … Read more

சூரிய புரோட்டான் நிகழ்வுகளைக் கண்டறிந்தது சந்திரயான்-2 விண்கலம்!

கடந்த 2019 வாக்கில் நிலவுக்கு இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம். இந்த விண்கலம் தற்போது அதிதீவிர சூரிய எரிப்பு காரணமாக சூரிய புரோட்டான் நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு.  சூரியன் சுறுசுறுப்பாக இருக்கும்போது, சூரிய எரிப்பு எனப்படும் கண்கவர் வெடிப்புகள் சில சமயங்களில் ஆற்றல்மிக்க துகள்களை (சோலார் புரோட்டான் நிகழ்வுகள் அல்லது SPEகள் என அழைக்கப்படுகின்றன) கிரகங்களுக்குள் வெளியேற்றுகின்றன. இதை தான் கண்டறிந்துள்ளது சந்திராயன்-2.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ஸ்பிளீட் ஸ்கிரீன் முறையில் முதன்முறையாக உருவாகும் ‘பிகினிங்‘ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்பிளீட் ஸ்கிரீன் முறையில் தமிழில் முதன்முறையாக உருவாகும், ‘பிகினிங்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘நான் மகான் அல்ல’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் வினோத் கிஷன். இதேபோல் ‘96’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கவுரி கிஷன். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் ‘பிகினிங்’. இந்தப் படம் பிளவு திரை, அதாவது ஸ்பிளீட் ஸ்கிரீன் (split screen) திரைப்படமாக உருவாகி வருகிறது. திரையில் ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகள் … Read more

”சொந்தக்காரங்க தகராறுக்கெல்லாம் பொதுநல வழக்கா?” – நீதிபதிகள் காட்டம்

உறவினர்களுக்கு இடையே ஏற்படும் நடைபாதை பிரச்சினை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் பொது நல வழக்குகளாக தாக்கல் செய்யப்படுவது ஏற்புடையது அல்ல என்று மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரை சீல்நாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள கண்மாய் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த பொது நல மனு நீதிபதிகள் பரேஸ்உபத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ”இது போன்ற வழக்குகள் உரிமையியல் நீதிமன்றங்களில் … Read more

போர் பதற்றம் – உக்ரைனில் அமலாகிறது அவசர நிலை – துப்பாக்கி வைத்துக் கொள்ளவும் அனுமதி

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் முடிவெடுத்துள்ளது. உக்ரைனின் 2 பகுதிகளை தன்னாட்சி பிராந்தியங்களாக ரஷ்யா அங்கீகரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்காக அவசர நிலையை கொண்டு வர, நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்சி டானிலோவ் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவசர நிலை அமலாக்கத்தை நாடாளுமன்றம் முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more

”மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கிறாரா?”- விக்ரம் மேனேஜர் விளக்கம்

மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக விக்ரமின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். ’மகான்’ படத்தினைத் தொடர்ந்து ‘கோப்ரா’, ‘துருவ நட்சத்திரம்’ படங்கள் அடுத்தடுத்து விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘விக்ரம் 61’ படத்தில் நடிக்கும் விக்ரம் அடுத்ததாக, தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. ’கீதா கோவிந்தம்’ இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் தற்போது ’சர்காரு வாரி … Read more

தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளில் மேயர் பதவியை பிடிப்பது யார்? – ஓர் பார்வை

தமிழகத்தில் முக்கியமான மாநகராட்சிகளில் மேயர் பதவி யாருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது? என்பது குறித்து பார்ப்போம். சென்னை தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில் அவற்றில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை, தாம்பரம், மதுரை, கோவை, ஈரோடு, வேலூர், கடலூர், கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், சிவகாசி என மொத்தம் 11 மாநகர மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை, தாம்பரம் ஆகிய இரு மாநகர மேயர் பதவிகளும் பட்டியலின பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன. 200 … Read more

ஓபிசி பட்டியலில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்க்க கேரள அரசு முடிவு

ஓபிசி பட்டியலில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்க்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தென்னிந்திய ஐக்கிய திருச்சபையை சேர்ந்தவர்கள் நீங்கலாக ஓபிசி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்.  முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சமூகத்தைச் சேர்க்க சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்‘ படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுக்கும் பாலிவுட் ஸ்டார்! படக்குழு தகவல்

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்துக்கு, நடிகர் அமிதாப்பச்சன் கதை சொல்பராக, வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள, பான் இந்தியா திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். பாக்கியஸ்ரீ, சச்சின் கெடேக்கர், ஜெகபதி பாபு, பிரியதர்ஷினி உட்பட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீரியட் படமான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கும் காதல் கதையைக் கொண்டது. நடிகர் பிரபாஸ், விக்ரம் ஆதித்யா … Read more

தானாகவே சார்ஜ் ஆகும் பேட்டரி சைக்கிள் கண்டுப்பிடிப்பு: மதுரை மாணவருக்கு குவியும் பாராட்டு

தானாகவே சார்ஜ் ஆகும் பேட்டரி சைக்கிளைக் கண்டுப்பிடித்துள்ள மதுரை மாணவர் தனுஷ்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம் மேலூர் கோட்ட நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தனுஷ் குமார். இவருடைய தந்தை கட்டிட காண்டிராக்டர். மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வரும் தனுஷ் குமார், புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டவர். கடந்த ஆண்டில் சோலார் சக்தியின் மூலம் இயங்கும் சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார். இந்நிலையில், புதிய முயற்சியாக ரீ-சார்ஜபில் இ … Read more