நடிகர் சங்க தேர்தல்: 3 ஆண்டுகள் கழித்து உயர்நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பில், நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் மறுதேர்தல் தேவையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் … Read more

"அவர் கற்றுக்கொடுத்த பாடத்தையே இன்றும் பின்பற்றுகிறேன்”- உணர்ச்சிவசப்பட்ட கார்த்தி

‘பருத்தி வீரன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அடியெடுத்து வைத்து, இன்றோடு 15 வருடங்கள் முடிந்துள்ளநிலையில், நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் முதல் வாரிசான சூர்யா, ஏற்கெனவே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருந்தநிலையில், அவரின் 2-வது வாரிசான கார்த்தி, முதலில் மணிரத்னத்திடம் ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குநராகவே பணிபுரிந்தார். பின்னர், இயக்குநர் அமீரின் இயக்கத்தில், கிராமத்து காதல் கதையான ‘பருத்தி வீரன்’ படத்தில் கார்த்தி அறிமுகமானார். … Read more

பள்ளி பேருந்திலிருந்து தனியே கழன்று சென்ற டயர்… காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவ்விபத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி வந்த விவேகம் மேல்நிலைப்பள்ளி பள்ளி வேன் டயர் திடீரென கழன்று ஓடியது. இதில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். … Read more

ஹிஜாப் வழக்கை விசாரித்த நீதிபதிக்கு எதிராக ட்வீட் – கன்னட நடிகர் கைது

ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஆட்சேபகரமான ட்வீட் செய்ததற்காக கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்தியப் பிரிவு காவல் துணை ஆணையர் எம்.என்.அனுசேத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னட திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன் அஹிம்சா பெங்களூரு நகர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சர்ச்சைக்குரிய ட்வீட் செய்ததற்காக, ஷேஷாத்ரிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமையன்று அவர் … Read more

கமர்ஷியலும் வரும்; கண்டெண்ட்டும் வரும் – ‘காம்போ காக்டெயில்’ கார்த்தியின் 15 ஆண்டுகள்!

முதல் படமென்பது நடிகர்களுக்கு ஆசிட் டெஸ்ட் போலதான். வெகு சிலருக்குத்தான் அந்த முதல் வாய்ப்பே ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒன்றாக மாறும். 1950களில் வெளியான பராசக்திக்குப் பிறகு அப்படி ஒரு பெரிய ஓப்பனிங் அமைந்த அறிமுக நடிகர் கார்த்திதான். பருத்தி வீரன் மூலம் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தமிழ்சினிமாவில் செட்டிலாக சூர்யா எடுத்துக்கொண்ட நேரம் கூட தம்பி கார்த்திக்கு தேவைப்படவில்லை. முதல் படத்திலேயே இறங்கி அடித்தார். தாடிக்கு நடுவே கொஞ்சமாக தெரியும் முகம், முறுக்கிய மீசை, இழுத்து … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான மற்றுமொரு வழக்கில் கைது செய்துள்ளது சென்னை காவல்துறை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நாளில் திமுக நிர்வாகியை தாக்கியதாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், ஜார்ஜ்டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா … Read more

‘ஆண்களை குறைசொல்ல முடியாது… ஆனால்’ – நடிகர் மாதவன் பேசிய சமத்துவம்

மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த ஆண்கள் இன்னும் தீவிரமாக பாலின சமத்துவம் குறித்த விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று நடிகர் மாதவன் வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக பேசிய மாதவன், “பாலின சமத்துவம் பற்றிய உரையாடல்கள் புதியவை அல்ல, ஆனால் சமூகம் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால் இப்போதும் அது பொருத்தமானதாக உள்ளது. முதலில் நிபந்தனைகளிலிருந்து விடுபடுவதே மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், ஆண்களையும், பெண்களின் வேலையையும் வரையறுக்கும் இந்த விதிகளில் அவர்கள் வளர்க்கப்பட்டதால், ஆண்களையும் குறை … Read more

'நீட் தேர்வை விட கொடுமையானது'- தேசிய கல்விக் கொள்கைக்கு அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை விட கொடுமையானது என்பதால், உயர் கல்வியில் தற்போது உள்ள நடைமுறையை மாற்றக்கூடாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிகள் மற்றும் கட்டமைப்பு குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கி அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி எனும் தமிழக அரசின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை தொடர்ந்து எதிர்த்து வருவதாக கூறியுள்ளார். … Read more

பழம்பெரும் மலையாள நடிகை கேபிஏசி லலிதா காலமானார்

பழம்பெரும் மலையாள நடிகை கேபிஏசி லலிதா உடல்நலக்குறைவால் காலமானார். 74 வயதாகும் அவர் தமிழில் விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்து கவனம் ஈர்த்தவர். ‘அலைபாயுதே’, ‘காற்று வெளியிடை’ உள்ளிட்டப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இரண்டு முறை சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் வென்றிருக்கிறார். வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 10 வயது முதல் நாடகத்தில் நடிக்கத் … Read more

”ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது ஏன்?” – நள்ளிரவில் நடந்தது என்ன?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் இணைந்து திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை சரமாரியாக தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சையானது. இதனையடுத்து திமுகவை சேர்ந்த நரேஷ் தண்டையார்ப்பேட்டை போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக … Read more