500 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு – நடந்தது என்ன?

500 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலையை இணையதளம் மூலமாக ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை. அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமம் வரதராஜூ கோவிலில் இருந்த அனுமன் சிலை கடந்த 2012 ஆம் ஆண்டு இரவில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செந்துறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரான ராஜராமன் என்பவர்  இணையதளங்களில் திருடப்பட்ட அனுமன் சிலை குறித்து … Read more

மும்பை இளம்பெண் கொடூரக் கொலை – மகனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி கொடுத்த தந்தை!

மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில், குற்றவாளியின் தந்தையே தனது மகனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி போலீஸாருக்கு கொடுத்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பையில் உள்ள மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்தவர் கேரல் (29). கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே,, கடந்த மாதம் 24-ம் தேதி தோழி ஒருவரை சந்திக்க போவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கேரல் சென்றுள்ளார். ஆனால், இரவு 10 மணிக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து … Read more

’பருத்திவீரன்’ கார்த்தி சினிமாவில் 15 ஆண்டுகள்: காமன் டிபியை தெறிக்கவிடும் ரசிகர்கள்

நடிகர் கார்த்தி திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதையொட்டி காமன் டிபி வெளியிட்டுள்ளார்கள் அவரது ரசிகர்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி கடந்த 2007 ஆம் ஆண்டு அமீரின் ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமானார். அந்த ஆண்டு வெளியான படங்களில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்ததோடு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. கார்த்தி, பிரியாமணி என ஒவ்வொருவரும் எதார்த்தமாக நடித்தார்கள் என்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை உயிரோட்டமாக … Read more

தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதா? – தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?

கடின உழைப்பால் தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜக மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில், மொத்தமுள்ள 12,838 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, ஒரே கட்டமாக, கடந்த சனிக்கிழமை (19-ம் தேதி) தேர்தல் நடந்தது. 12,838 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, 57,778 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது.  இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், … Read more

"ஹிஜாப் அணிவது 25-வது சட்டப்பிரிவின் கீழ் வராது" – கர்நாடக நீதிமன்றத்தில் தொடரும் விசாரணை!

ஹிஜாப் அணிவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் வராது என கர்நாடகா அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, ஹிஜாப் அணிந்து செல்வதற்கு அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் தடை விதித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை இரு வாரங்களுக்கு முன்பு விசாரித்த நீதிமன்றம், … Read more

அடுத்தமாதம் துவங்கும் செல்வராகவன் – மோகன்.ஜி படத்தின் படப்பிடிப்பு

செல்வராகவன் – மோகன்.ஜி இணையும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி நடிகர் செல்வராகவனுடன் இணைந்துள்ளார். சமீபத்தில் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்து “படத்தின் தலைப்பு மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது என்றும் இயக்குநர் மோகன்.ஜியே சொந்த பேனரில் தயாரிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ‘சாணிக்காயிதம்’, … Read more

”அதிமுக, பாஜக சேர்ந்தால் கொங்கு எங்கள் கோட்டை” – அண்ணாமலை பேட்டி

அதிமுகவும், பாஜகவும் இணைந்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்றும், அது திமுகவின் கோட்டை இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் கவலைப்பட வேண்டாம். மக்கள் நலனுக்காக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும். பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி; எங்களை தொடர்ந்து நம்புங்கள். பாஜக சார்பில் … Read more

பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் தொடரும் பதற்றம்! ஷிவமொக்காவில் 24-ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

கர்நாடகாவில் பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து, ஷிவமொக்கா மாவட்டத்தில் வரும் 24-ம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் பஜ்ரங் தள அமைப்பின் நிர்வாகியாக இருந்தவர் ஹர்ஷா. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது, கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து இந்தக் கொலை நடந்திருப்பதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியதால் இருதரப்பு மக்கள் இடையே மோதல் … Read more

கமல்ஹாசனுக்குப் பதில் ’பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு?

‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்குப் பதில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ’பிக்பாஸ்’ நிகழ்ச்சி சீசன் 5 வரை ஹிட் அடித்ததால் ’பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார், சினேகன், ஜூலி, தாமரை, அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள். நடிகர் கமல்ஹாசனே ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தற்போது ‘விக்ரம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாலும் படம் வரும் … Read more

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 23 வயதேயான திமுகவின் இளம் வேட்பாளர்!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும், பேரூராட்களையும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் இளம் வேட்பாளர் சுகன்யா போட்டியிட்டார். அதிமுக சார்பில் வினிதா களமிறக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக வேட்பாளர் வினிதா 453 வாக்குகள் பெற்றிருந்தநிலையில், திமுக வேட்பாளர் சுகன்யா … Read more