பக்தர்கள் சூழ்ந்திருந்தபோது துண்டாகி விழுந்த 40 டன் எடை கொண்ட கொடி மரம் – பதறவைத்த சம்பவம்

ஆந்திர மாநிலம் குண்டூரில் பக்தர்கள் முன்னிலையில், பழமையான ராமர் கோவில் முன்பு இருந்த 40 டன் எடை கொண்ட கொடி மரத்தை, வேறு இடத்திற்கு மாற்றி வைக்க முயற்சிசெய்தபோது, கொடி மரம் துண்டாகி கீழே விழுந்த காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள பழமையான ராமர் கோவில் முன்பு, 40 டன் எடையுள்ள 44 அடி … Read more

ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வனின் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’

நடிகர் அசோக் செல்வனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கவனம் ஈர்த்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இப்படத்தினை விஷால் வெங்கட் இயக்க ‘ஜெய் பீம்’ மணிகண்டன் வசனம் எழுதியிருந்தார். அஷோக் செல்வன், நாசர் மகன் அபி ஹாசன், நாசர்,கே.எஸ் ரவிக்குமார், மணிகண்டன், ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் … Read more

கோட்சே ஆதரவு; 8 ஓட்டுகள் என வதந்தி – 134 வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி

சென்னை மாநகராட்சியின் 134வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டவர் உமா ஆனந்தன். இந்த வார்டில் முதல் சுற்றில் உமா ஆனந்தனின் வாக்கு எண்ணிக்கை தவறாக (குறைவாக) சொல்லப்படுவதாக கூறி பாஜக பிரமுகர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் 8 ஓட்டுகளை மட்டுமே பெற்றதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து 5539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். … Read more

'மூன்றாம் பிறை’ வெளியாகி 40 ஆண்டுகள்: இளையராஜாவை சந்தித்த தயாரிப்பாளர் டி.ஜி தியாகராஜன்

கமல்ஹாசனின் ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் வெளியானதையொட்டி அதன் தயாரிப்பாளர் டி.ஜி தியாகராஜன் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துள்ளார். 80ஸ் கிட்ஸ்… 90ஸ் கிட்ஸ்… மட்டுமல்ல 2கே கிட்ஸ் என மூன்று தலைமுறைகள் கடந்தாலும் தமிழ் சினிமாவின் கடக்க முடியாத திரைப்படம் ‘மூன்றாம் பிறை’. கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இப்படத்தினை இயக்கி அக்காலத்திலேயே சினிமா ரசிகர்களின் இதயத்தில் ’மகேந்திர பாகுபலியாய்’ சிம்மாசனமிட்டு அமர்ந்தார் பாலு மகேந்திரா. ’விவேகம்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்டப் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் சத்யஜோதி … Read more

வெற்றி பெற்ற சில நிமிடங்களில் ஆளும் கட்சிக்கு தாவிய வேட்பாளர்கள்! நகர்புற தேர்தல் ட்விஸ்ட்

நகர்புற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அருண் சுந்தர பிரபு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். வெற்றி பெற்ற சில நிமிடங்களில் அதிமுகவைச் சேர்ந்த அருண் சுந்தர பிரபு திமுகவில் இணைந்து மேலூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, ஆவடி … Read more

உ.பி: மனைவியுடன் சண்டை – தந்தை உதைத்ததில் 2 வயது குழந்தை மரணம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின்போது, தந்தை உதைத்ததில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தையின் உடலை அவசரமாக அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில், ஃபிரோசாபாத் கிராமத்தில் உள்ள சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 2 வயது பெண் குழந்தை ஆயத்தின் தந்தை ஷாநவாசுக்கும் அவரது தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, அவர் … Read more

"கண்ணும் கருத்துமாக செயலாற்றுங்கள்"- திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி உறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கையில், “உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், நமக்கு வெற்றி உறுதி. இதனால் நமக்கு கடமையும், பொறுப்பும் மிகுதியாகியுள்ளது. இருப்பினும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் குறைத்துக் கொண்டு, மக்கள் பணிகளை கூடுதலாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பத்தாண்டுகளாகப் பாழாக்கப்பட்ட உள்ளாட்சி ஜனநாயகத்தின் வேர்களுக்கு நீர் வார்த்து தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம். வாக்கு எண்ணிக்கை … Read more

“மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குங்கள்” – மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கக்கோரி, மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தார். இது தொடர்பாக சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான சுபாஷ் தேசாய் பேசுகையில், “இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் சமஸ்கிருதம் ஆகிய ஆறு மொழிகளுக்கு இந்திய அரசால் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது குறித்து முடிவெடுக்க நிபுணர் குழுவை அமைத்தோம். அந்த குழு அறிக்கை தயாரித்து … Read more

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்களுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன், கடந்த மே மாத இறுதியில் ஒரு மாத பரோலில் வெளியே வந்திருந்ததார். இதன்பின்னர் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. அப்படி கடந்த மாதம் நீட்டிக்கப்பட்டிருந்த பரோல், இப்போது மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மே 28-க்குப் பின் 10-வது முறையாக நீட்டிக்கப்படும் பரோலாகும்.  ராஜீவ் கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், … Read more

லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் 20% திறனில் மட்டுமே செயல்படுகிறது: ரிம்ஸ் மருத்துவமனை

ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமானதாகவும், ஆனால் சீராக இருப்பதாகவும் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகம்(RIMS) தெரிவித்துள்ளது. லாலு பிரசாத்துக்கு சிகிச்சை அளிக்க RIMS ஆல் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட மருத்துவக் குழுவின் தலைவர் வித்யாபதி பேசுகையில் “லாலு பிரசாத் யாதவின் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கமாக உள்ளது. சர்க்கரை அளவு காலையில் 70 mg/dl ஆக இருந்தது, ஆனால் மதியம் 240 mg/dl … Read more