தேனி: ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நடந்த கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டம் செக்கானூரணியைச் சேர்ந்தவர் சிவபாண்டி (வயது 48), செல்வம் (55), பாண்டியராஜன் (44). இவர்கள் தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆண்டிப்பட்டி கணவாய், திம்மரசநாயக்கனூர் விலக்கு அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த கார் மீது … Read more

உ.பி: கலப்பட மதுபானம் குடித்த 4 பேர் பலி – 41 பேர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரப் பிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தில் கலப்பட மதுவை குடித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்ததாக அசம்கர் மாவட்ட மாஜிஸ்திரேட் அம்ரித் திரிபாதி தெரிவித்தார். கலப்பட மதுவை உட்கொண்ட 20 பேர் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அசம்கர் மாவட்ட … Read more

கோவை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கோவை மாநகராட்சி தேர்தலில், கட்சிப் பாகுபடின்றி பணம் விநியோகிக்கப்பட்டதாகக்கூறி தொடரப்பட்ட வழக்கில், வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும் தேர்தல் முடிவுகள் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் அனைத்து கட்சியினருக்கும் பாகுபாடில்லாமல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், எனவே தேர்தலை ரத்து செய்து உத்தரவிடுமாறு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், பணப்பட்டுவாடா குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் … Read more

ஜெயக்குமார் வீட்டில் குவிந்த போலீஸார் – கைது நடவடிக்கையின் போது நடந்தது என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்த போது அங்கு நடந்தது என்ன என்பது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. திமுக பிரமுகரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள 49-வது வார்டில், கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து அதிமுகவினர் தாக்கினர். அந்த சமயத்தில், அங்கு வந்த முன்னாள் … Read more

"வலுக்கட்டாயமாக என் கணவரை காவல்துறையினர் இழுத்துச் சென்றனர்" – ஜெயக்குமார் மனைவி பேட்டி

‘காவல்துறையினர் என் கணவரை என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி பேட்டியளித்துள்ளார். திமுக பிரமுகரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள 49ஆவது வார்டில், கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில், நரேஷின் சட்டையை … Read more

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி – கோர்பேவேக்ஸுக்கு அவசரகால அனுமதி

12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசியான கோர்பேவேக்ஸின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 180 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, 12 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு செலுத்துவதற்காக ‘கோர்பேவேக்ஸ்’ … Read more

கச்சத்தீவு திருவிழா: தமிழக பக்தர்கள் 50 பேருக்கு இலங்கை அரசு அனுமதி

கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் அலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. கச்சத்தீவில் உள்ள பிரசித்தி பெற்ற அந்தோணியார் ஆலய திருவிழா வரும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனிடையே, பக்தர்கள் இன்றி இந்த திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த திருவிழாவில் பங்கேற்க இந்தியா, இலங்கயைச் சேர்ந்த 50 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.Source : … Read more

கேரளா: மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர் வெட்டிக் கொலை – கண்ணூரில் பதற்றமான சூழல்!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கே. ஹரிதாஸ் (54). மீனவரான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் ஆவார். இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டருகே பதுங்கியிருந்த மர்ம கும்பல், அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. ஹரிதாஸின் … Read more

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமம் யாருக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் காத்துவாக்குல காதல் படத்தின் படத்தின் தியேட்டர் ரீலிஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பகிர்ந்துகொண்டுள்ளது. ‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்திற்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இவர்களுடன் சமந்தாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை … Read more

”திமுகவின் அராஜகத்தை முறியடிப்போம்” – ஜெயக்குமார் கைதுக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கள்ள ஓட்டு போட வந்த திமுகவினரை ஜெயக்குமார் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்றும் மனப்பான்மையில் ஜெயக்குமார் செய்த இந்த செயல் எந்த வகையில் முறைகேடானது? ஓரிடத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபரை பிடித்து, அவர் தப்பிக்கக் கூடாது என்பதற்காக கைகளை … Read more