சாயா சிங் நடிப்பில் இன்று முதல் ஒளிபரப்பாகும் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’

நடிகை சாயா சிங் நடிப்பில் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ இன்று முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. ‘பூவே உனக்காக’ சீரியலில் நடித்துவரும் நடிகை சாயா சிங் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ நெடுந்தொடரில் நடித்து வருகிறார். பிரபல நடிகர்களோடு இணைந்து நடிகை சாயா சிங், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த புதிய நெடுந்தொடரை சிறப்பு பார்ட்னராக பிரித்வி இன்னர் வேர்ஸ் மற்றும் பவர்டு பை அரோமா அக்மார்க் நெய், இனைந்து வழங்குகின்றனர். தீவிரமான உணர்வுகள் மற்றும் அதிரடி … Read more

வாகனத்தை நிறுத்தச்சொல்லி மாணவர்களுடன் நேரில் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட பள்ளி மாணவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி, செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்திய விடுதலை போரில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற மூன்று அலங்கார ஊர்திகளை சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்திகளை பள்ளி … Read more

கம்பீரமாக அணிவகுத்து நின்ற கப்பல்கள்… நேரில் பார்வையிட்ட குடியரசுத் தலைவர்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நேரில் பார்வையிட்டார். 12ஆவது முறையாக நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் 60க்கும் மேற்பட்ட கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், 55 போர்விமானங்கள் பங்கேற்றன. அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள கடற்படைக் கட்டுப்பாட்டு மையத்தின் போர்க்கப்பல்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றன. 44 போர்க்கப்பல்கள் நான்கு வரிசையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்ததை, ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பயணித்தபடி சென்று, குடியரசுத்தலைவர் பார்வையிட்டார். அப்போது, … Read more

”அடக்கம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு'- அஜித்தை புகழ்ந்து தள்ளிய போனி கபூர்

அஜித்தின் ‘வலிமை’ வெளியாவதையொட்டி தயாரிப்பாளர் போனி கபூர், ’அஜித் தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர்” என்று கூறியுள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள ‘வலிமை’ வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. இதனையொட்டி, தயாரிப்பாளர் போனி கபூர் பேசும்போது, “அஜித் மிகவும் அடக்கமான நடிகர். ஒழுக்கம், தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் … Read more

பதாகை ஏந்தி தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்த சீன மாணவிகள்

உலக தாய்மொழி தினமான இன்று சீனாவில் உள்ள யுனான் மீஞ்சூப் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமெங்கும் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், செஞ்சீனத்தில் தமிழை பரப்பும் முனைப்போடு கடந்த 2019-ம் ஆண்டு சீனாவை சேர்ந்த தமிழ் பேராசிரியை நிறைமதி என்ற கிகி ஜாங் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி பெற்று அங்கு தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியருக்கு தமிழ் மொழியை … Read more

ஆந்திர அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்

ஆந்திரப் பிரதேச தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி இன்று மாரடைப்பால் காலமானார். 50 வயதான ஆந்திரப் பிரதேச ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டிக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அதன்பின்னர் உடனடியாக அவரை ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

‘ஏக்கம், கனவு எல்லாமே அதுதான்’- இன்ஸ்டாவில் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்ட விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அது சென்னை ஐ.பி.எல் அணிக்கான விளம்பரப் படமென்று விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். நேற்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா போஸ்ட்டில் தோனிக்கு பூங்கொத்து அளிப்பது போன்ற ஒரு புகைப்படத்துடன், “என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்…. இவருடன் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது அவரை நான் சந்தித்த அந்த … Read more

'திறமை இருந்தும் பணம் இல்லையே'- உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவி

தஞ்சாவூர் அருகே பார்வையற்ற குடும்பத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி, இசைக்கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். திறமை இருந்தும் படிப்பதற்கு வாய்ப்பின்றி தவித்து வருகிறார் அவர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த புதுவிடுதி கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற மாணவி, பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். சந்தியா மட்டுமின்றி அவரது தாய், சகோதரர்கள் என குடும்பமே பார்வையற்றவர்கள். தற்போது 12-ம் வகுப்பு படித்து வரும் இவர், இசை மீது தீரா காதல் கொண்டுள்ளார். இசைக்கல்லூரியில் பயின்று, பாடகியாக … Read more

கேரளாவைப் போல கர்நாடகாவிலும் நந்திமலையில் சிக்கிய இளைஞர்: பத்திரமாக மீட்ட விமானப்படை

கேரளாவில் மலை இடுக்கில் இருந்து இளைஞர் பாபு மீட்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், கர்நாடகாவின் சிக்கபல்லபூரில் உள்ள நந்திமலையில் சிக்கிய இளைஞரை ஹெலிகாப்டர் உதவியுடன் இந்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கர்நாடகாவில் பொறியியல் படித்து வரும் டெல்லியைச் சேர்ந்த மாணவர் நிஷாங்க், நந்திமலைக்கு தனியாக மலையேற்றம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். எனினும் நல்வாய்ப்பாக மலை உச்சியில் இருந்து தட்டையான பகுதியில் விழுந்ததால் உயிர் பிழைத்தார். பின்னர் தான் சிக்கிக்கொண்டிருப்பது குறித்து அவரே … Read more

நீலகிரி: மணல், செங்கல், அஸ்திவாரம் இல்லாமல் ஆச்சர்யப்படுத்தும் அழகான வீடு

மணல், செங்கல், மரம் போன்ற பொருட்களை பயன்படுத்தாமல் நீலகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பார்த்தவுடன் கண்களை கவரும் இந்த வீடு கூடலூர் அருகே அய்யன்கொல்லி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. பேபி என்பவருக்கு சொந்தமான இந்த வீடு, 1,500 சதுர அடியில் 10 லட்சம் ரூபாயில் உருவானது என்றால் ஆச்சரியமாக இருக்கும். மரம், செங்கல், மணல் போன்றவற்றை பயன்படுத்தாமல் கட்டப்பட்டிருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்கள் மூலம் வீட்டின் … Read more