சுயேட்சையாக செயல்பட்ட கட்சியினர்… அதிரடி நடவடிக்கை எடுத்த மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிடும் 61 திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 61 பேரும், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அக்கட்சி நீக்கியுள்ளது. “ கட்சிக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டால் வேட்புமனுக்களை திரும்பப் பெற வேண்டும் என்ற தெளிவான செய்தியை எங்கள் தலைமை இந்த … Read more

இன்று சர்வதேச தாய்மொழி தினம்… அதன் வரலாறு தெரியுமா?

உலகின் மூத்த மொழிகளில் ஒன்று செம்மொழியான தமிழ் மொழி. இது போன்ற பழமைமிக்க மொழிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மொழிகளுக்காக ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி தினம் ‘பிப்ரவரி 21’-ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு ‘பன்மொழி கற்றலுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: அது சார்ந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற கருப்பொருளை முன்னெடுத்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு.  உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் மொழிகள் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் அதில் வெறும் சில நூறு மொழிகள்தான் … Read more

‘புஷ்பா’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்: கொண்டாட்டத்தில் ஒட்டுமொத்த படக்குழு

‘தாதாசாஹேப் பால்கே’ சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2022-ல் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை புஷ்பா திரைப்படம் வென்றுள்ளது. இது தொடர்பாக ‘தாதாசாஹேப் பால்கே’ சர்வதேச திரைப்படவிழா ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ” தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள்2022-இல் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதற்காக ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்கு வாழ்த்துகள். படக்குழுவின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் பலனளித்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ‘புஷ்பா’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 2021 … Read more

சென்னையில் வாக்குப்பதிவு பாதியாக குறைந்தது ஏன்? மக்கள் மறந்து விட்டார்களா? – ஓர் அலசல்

நடைபெற்று முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு பாதியாக குறைந்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமப்புறங்கள் சார்ந்த பேரூராட்சிகளில் அதிகமாகவும், சிறு நகரங்கள் அடங்கிய நகராட்சிகளில் சராசரியாகவும் வாக்குகள் பதிவான நிலையில், பெருநகரான சென்னை, தாம்பரம், நெல்லை மாநகராட்சிகளில் மோசமாக பதிவாகியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், உள்ளாட்சித் தேர்தலின் முக்கியத்துவத்தை மக்கள் அறியாமல் இருப்பதே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயத்தில், அறிந்தவர்களும் கூட அதை உதாசீனப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் என்றாலே நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் … Read more

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பிலும் சிக்சர் காணவருகிறார் தோனி?!

இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலுக்கு காரணம், விக்னேஷ் சிவனின் இன்றைய இன்ஸ்டா போஸ்ட் தான். தோனிக்கு பூங்கொத்து அளிப்பது போன்ற ஒரு புகைப்படத்துடன், `என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்…. இவருடன் நான் இருக்கும் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது அவரை நான் சந்தித்த அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட உணர்வை முழுமையாக வெளிப்படுத்தாது. வாழ்க்கை மிகவும் … Read more

”வள்ளுவர் டூ வாலி” – சீர்வரிசையாக வழங்கப்பட்ட தமிழ் நூல்கள்! கவனத்தை ஈர்த்த திருமணம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு தமிழ் நூல்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது. தமிழ்மொழியின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து ‘தமிழினி வாட்ஸ்அப் தளம்’ ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தின் கௌரவத் தலைவராக முன்னாள் சாகித்திய அகடமி குழு உறுப்பினரும், கவிஞருமான புதுக்கோட்டையைச் சேர்ந்த தங்கம் மூர்த்தி உள்ளார். இவரது மகள் காவ்யாமூர்த்தியின் திருமண விழா புதுக்கோட்டை … Read more

“விரைவில் நல்ல செய்தி வரும்” – உத்தவ் தாக்கரேவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு!

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒருமித்த கருத்துகளை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவர் ஆகியோரை சந்தித்து பேசினார். ஹைதராபாத்தில் இருந்து மும்பை சென்ற தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், நேரடியாக உத்தவ் தாக்கரேவின் இல்லத்திற்கு சென்று தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தார். அண்மையில், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சிவசேனா தலைவரும், … Read more

ரஜினிகாந்த் உடன் இணைந்து புதிய படமா? – வைரலாகும் தகவல்கள்; போனி கபூர் வெளியிட்ட அறிக்கை

இந்திய சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான வலிமை வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவரது தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.  Rajni Garu has been a friend for years. We meet regularly and keep exchanging ideas. Whenever we finalise a film to work together on, I shall be the … Read more

மெரினாவில் சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகள்: பார்த்து ரசிக்கும் மக்கள்

குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு தமிழகத்தில் சார்பாக அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஊர்திகள் பின்னர் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த ஊர்திகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. ஒட்டுமொத்தமாக மூன்று ஊர்திகள் உள்ளன, தற்போது இந்த ஊர்திகள் இன்றிலிருந்தே வரும் 23-ஆம் தேதி வரை … Read more

முகலாய பேரரசர்கள் முதல் பிரிட்டிஷ்காரர்கள் வரை: நாணயங்கள் சேகரிப்பில் அசத்தும் ஐ.டி ஊழியர்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவர் பண்டையக்கால நாணயங்களை சேகரித்து வைத்து வியப்பில் ஆழ்த்துகிறார். நாணயங்கள் சேகரிப்பு பலரும் விரும்பி செய்யக் கூடிய ஒன்றாக உள்ளது. பலர் பொழுதுபோக்காகவும், சிலர் ஆராய்ச்சியாகவும் இதனை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திராவின் மச்சிலிப்பட்டனத்தைச் சேர்ந்த ஐ.டி.ஊழியர் கிரிதர் ஸ்ரீபதி என்பவர், பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், முகாலயர் காலம் என பல்வேறு பண்டையகால தொடர்பு கொண்ட நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார். சிறு வயதில் தனது பாட்டி பிறந்தநாள் … Read more