'அரபிக் குத்து' பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து நடனமாடி 'தெறி'க்கவிடும் அட்லீ!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது.  View this post on Instagram A post shared by Atlee (@atlee47)  யூட்யூப் தளத்தில் மட்டுமே 6.6 கோடி வியூஸ்களை இந்த பாடல் பெற்றுள்ளது. … Read more

குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தட்டிக்கேட்க முயன்ற தந்தை – மகளுக்கு அரிவாள் வெட்டு

ராஜபாளையத்தில் குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தட்டி கேட்ட முதியவரை சராமாரியாக தாக்கியுள்ளார் அந்த இளைஞர். இதை தடுக்க சென்ற இளம் பெண் ஒருவரும் அரிவாளால் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் பிள்ளையார். 55 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்திருக்கிறார். இன்று மதியம் இதே பகுதியை … Read more

’முயற்சி திருவினையாக்கும்’ : உலகிலேயே இளம்வயது யோகா ஆசிரியர்-9 வயது இந்திய சிறுவன் சாதனை!

உலகிலேயே இளம் வயது யோகா ஆசிரியர் பட்டம் பெற்ற இந்தியாவை சேர்ந்த 9 வயது சிறுவன் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். துபாயில் வசிக்கும் இந்தியத் தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு பிறந்தவர் ரேயான்ஷ் சுரானி. 9 வயது சிறுவனான இவர், தனது 4 வயது முதலாகவே யோகா கற்று வருகிறார். ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக யோகா செய்து வந்த சுரானி, ஒருகட்டத்தில் அனைத்து ஆசனங்களையும் கற்று தேர்ந்தார். அதன் பிறகு, வீட்டில் தினமும் காலை யோகாசனங்களை … Read more

”இதனால்தான் இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறேன்” : கே.பாக்யராஜ் போட்டி

வரும் 27ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு பாக்யராஜ். செயலாளர் பதவிக்கு பார்த்திபன். பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சங்க தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விருகம்பாக்கத்தில் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டார்.  பின்னர் மேடையில் பேசிய அவர், “தற்போது உள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது. தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை. … Read more

திருப்பதி கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ஏழுமலையான் கோயிலில் வழக்கமான பக்தர்கள் தரிசனம் மட்டுமன்றி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளைக் கூட்டத்தில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி, வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ. 50,000 -இல் இருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. கல்யாண உற்சவ … Read more

வாக்களிக்கும் போது செல்ஃபி.. வைரலான புகைப்படம் – கான்பூர் மேயர் மீது பாய்ந்தது வழக்கு

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் மாநகராட்சி மேயர் பிரமிளா பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 59 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக கான்பூர் மாநகராட்சி மேயர் பிரமிளா பாண்டே, அங்குள்ள ஹட்சன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பிற்பகல் சென்றார். அப்போது தான் வாக்களிப்பதை தனது … Read more

“பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன்”- கனத்த இதயத்துடன் காரணத்தை அறிவித்த கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக சமூக வலைதளம் மூலமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது, அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும், மக்களை மகிழ்விக்கக் கிடைக்கும் எந்தச் சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்குப் பிக்பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அவ்வகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் புரட்சிகரமான … Read more

சென்னை: குடியரசு தின தமிழக அலங்கார ஊர்திகளை மலர்தூவி வரவேற்ற அமைச்சர்கள்

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திகள், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 23 நாட்களில் 2 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ள அலங்கார ஊர்திகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சென்று … Read more

பஞ்சாப்: வாக்குச்சாவடிக்கு செல்ல முயற்சித்ததாக நடிகர் சோனு சூட் தடுத்து நிறுத்தம்!

பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடிக்குள் செல்ல முயன்ற பாலிவுட் நடிகர் சோனு சூட்டை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் நேரடிப் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் பிரதமர் அமரீந்தர் சிங் தொடங்கிய புதிய கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பாஜக … Read more

விரைவில் இரண்டாவது பாகம்: இளையராஜாவின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகம்!

`HOW TO NAME IT’ இசைத் தொகுப்பின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான HOW TO NAME IT இசைத் தொகுப்பு, இந்திய – மேற்கத்திய முதல் FUSION ஆல்பமாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரும் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவருமான தியாகராஜ சுவாமிகள் மற்றும் ஜெர்மன் இசை மேதை ஜே.எஸ்.பாக்கிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட HOW TO NAME IT ஆல்பம் 48 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும். HOW TO … Read more