திருப்பூர்: அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளகிணறு அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின், முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. இதையறிந்த ஓட்டுநர், உடனடியாக நடுவழியிலேயே பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் இருந்த 47பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். <blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>தாராபுரம்-கோவை சென்றகொண்டிருந்தஅரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென்று கழன்று சென்றுவிட்டது ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து நிலை தடுமாறாமல் உடனடியாக நிறுத்தப்பட்டது.<br> <a href=”https://twitter.com/hashtag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#இடம்</a>: <a … Read more

நெல்சனை தொடர்ந்து கனா பட இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த் – 170 பட அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த்தின் 169-வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக கடந்த பத்தாம் தேதி, அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படத்துக்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அப்படத்தை இயக்குநரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்குவார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக ஆங்கில தளமொன்றில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, அருண்ராஜா காமராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம், ஆர்டிக்கிள் 15 என்ற இந்திப்படத்தின் ரீமேக் ஆகும். இதைத் … Read more

கன்னியாகுமரி: இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

கன்னியாகுமரி அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். பரம்பை பகுதியில் உள்ள குடியிருப்புகளில், சிலர் இறைச்சிக் கழிவுகளை கொட்டிச் செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், விடிய விடிய அப்பகுதி மக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சரக்கு வாகனத்தில் வந்த இளைஞர்கள், இறைச்சிக் கழிவுகளை கொட்ட முயற்சித்தனர். உடனடியாக அவர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இறைச்சிக் கழிவுகளை சேகரித்து கொட்டி வருவது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும், … Read more

'ஆளுநர் மாளிகையை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை' – கேரள ஆளுநர்

ஆளுநர் மாளிகையை கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநில அரசுக்கு கிடையாது என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணிக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே ஏற்கெனவே மோதல்போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநரின் இந்தக் கருத்து பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்ட கொள்கைகளின் அடிப்படையில் மாநில அரசு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளதாக செய்தியாளர்களிடம் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்தார். ஆளுநர் மாளிகைக்கான அதிகாரியை … Read more

ஹேன்ட் பிரேக் போடாததால் லாரி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு – அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கோவையில் ஹேன்ட் பிரேக் போடாமல் லாரியை நிறுத்தியதால், அதன் ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கருமத்தம்பட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில், சேலத்தை சேர்ந்த சுரேஷ்பாபு என்ற லாரி ஓட்டுநர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, ஹேன்ட் பிரேக் போடாமல் இயற்கை உபாதை கழிக்க சுரேஷ்பாபு சென்ற போது, எதிர்பாராதவிதமாக லாரி … Read more

ஆப்கனின் பாரம்பரிய உடையை அணிந்த பிரதமர் மோடி!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாரம்பரிய உடையை அணிந்த பிரதமர் மோடி , ‘இதைப்பார்த்தால் ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் கர்சாய் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்’ என்று கூறினார், இதற்கு கர்சாய் எதிர்வினையாற்றியுள்ளார் டெல்லியில் ஆப்கானிஸ்தான் இந்து-சீக்கியர்கள் பரிசளித்த சப்பான் பாரம்பரிய உடையை பிரதமர் நரேந்திர மோடி அணிந்த பிறகு பேசிய பிரதமர் மோடி, “முன்னாள் ஆப்கானிஸ்தான் பிரதமர் ஹமீத் கர்சாய் சாஹாப் இதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்” என்று கூறினார். இதற்கு பதிலளித்துள்ள கர்சாய், “பிரதமர் மோடியின் அருமையான … Read more

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் அக்‌ஷய் குமார் – உறுதிப்படுத்திய பரேஷ் ராவல்

சூர்யா நடிப்பில் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார் என்ற தகவலை அப்படத்தின் நடிகர் பரேஷ் ராவல் உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் பரேஷ் ராவல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழி படங்களில் நடித்துள்ளவர், இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற சூரரைப்போற்று திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றவர். அவர் தற்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு டியர் ஃபாதர் என்ற படத்தின் மூலம் குஜராத்தி சினிமாவிலும் நடிக்கிறார். … Read more

கச்சத்தீவு ஆண்டு விழாவில் தமிழர்கள் பங்கேற்க தடையா? – உரிய நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கடிதம்

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறும் ஆண்டு விழாவில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.  கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தில் நடக்கும் ஆண்டுவிழாவில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களும் பங்கேற்பது வாடிக்கை என்றும், வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ஆண்டுக்கான விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை விதித்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக … Read more

ராஜஸ்தான்: பட்டியலின ஐபிஎஸ் அதிகாரி குதிரை ஊர்வலம் செல்ல போலீஸ் பாதுகாப்பு

ராஜஸ்தானில் பட்டியலினத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி, குதிரையில் திருமண ஊர்வலம் செல்ல பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. பண்டி மாவட்டத்தில் திருமணத்தன்று பட்டியலினத்தவர்கள் குதிரை ஊர்வலம் செல்ல குறிப்பிட்ட சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின ஐ.பி.எஸ். அதிகாரி தன்வந்தா, திருமணத்தன்று குதிரையில் செல்ல பாதுகாப்பு கோரினார். தாம் ஐ.பி.எஸ். அதிகாரி என்றாலும், சொந்த கிராமத்தில் சாதி ரீதியான அச்சுறுத்தல் இருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் முழு பாதுகாப்புடன் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் – 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள செர்மார்க் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில், சந்தோஷ் யாதவ், சவான் ரோமித் தனாஜி என்ற வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளில் ஒருவர் ராணுவத்தினாரால் கொல்லப்பட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM