கேஜ்ரிவால் குறித்த சர்ச்சை பேச்சு – ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகிக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை தீவிரவாத அமைப்புடன் தொடர்புப்படுத்தி பேசிய ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகிக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தவர் குமார் விஷ்வாஸ். அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மியில் இருந்து விலகினார். கேஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியில் இருந்து விலகியதாக … Read more

கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த திமுகவினர்! சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு

சென்னையின் 179வது வார்டில் திமுகவினர் கத்தியை கொண்டு வந்து வாக்குசாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. சென்னை ஓடைக்குப்பம் பகுதியில் 179வது வார்டில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசனும், திமுக சார்பில் கயல்விழி போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் 179வது வார்டில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வந்த நிலையில், திடீரென திமுகவினர் சிலர் கத்தியுடன் வாக்குசாவடிக்குள் புகுந்து ஈவி.எம் … Read more

நிதீஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு – தேசிய அரசியலில் பரபரப்பு

டெல்லியில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை திடீரென சந்தித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் நிதிஷ் குமார் தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நம்பர் 2 ஆக இருந்த பிரசாந்த் கிஷோரை பதவி நீக்கம் செய்த பின்னர் முதல் முறையாக இருவரும் தற்போது சந்தித்துள்ளனர், டெல்லியில் பிரசாந்த் கிஷோருடன் நடந்த இரவு உணவு சந்திப்பை நிதிஷ் குமாரும் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள … Read more

பெண்கள் வாக்குச்சாவடிக்குள் திடீரென நுழைந்து ஓட்டுப்போட்ட மர்ம நபர் -தென்காசியில் பரபரப்பு

பெண்கள் வாக்குச் சாவடிக்குள் கர்ப்பிணி பெண் ஒருவர் ஓட்டுப் போட சென்றபோது மர்ம நபர் ஒருவர் அந்த வாக்கை செலுத்தி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் அதே பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வார்டு எண் 17 க்கான 17 ஆவது பெண் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க சென்றபோது அவருடன் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிடுவது போன்று மர்ம … Read more

நகர்ப்புற தேர்தல்: ஈவிஎம் வைக்கப்படும் "ஸ்ட்ராங் அறைகளுக்கு" 3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆய்வு செய்தார். அடையாறு மண்டலத்திற்குட்பட்ட 173வது வார்டில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு மையங்களிலும் துணை ஆணையர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கர் … Read more

வட இந்தியாவில் களைகட்டும் ‘புஷ்பா புடவை’ – குவியும் ஆர்டர்கள்

குஜராத்தில்  அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட புடவை விற்பனை களைகட்டி வருகிறது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்து, கடந்த டிசம்பர் 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்தது. குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் படம் மாபெரும் … Read more

‘ஹோட்டலில் அறை; வாடகைக்கு கார், வீடு’ – பணிசெய்த இடங்களில் தொடர்திருட்டு -கோவை இளைஞர் கைது

கோவையில் தனியார் மருத்துவமனையிலிருந்து ரூ.85 லட்சம் திருடிய இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கோசவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (29). இவர் கடந்த 6 மாதங்களாக கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, கடந்த 13-ம் தேதி மருத்துவமனையின் 3 நாட்கள் வருமானமான ரூபாய் 85 லட்சத்தை லாக்கரிலிருந்து திருடி விட்டு, யுவராஜ் தலைமறைவானார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் துணைத் தலைவர் … Read more

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை உடனடியாகத் திரும்பப்பெறுக: சீமான்

கூடங்குளத்தில் புதிய அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க “இந்திய அணுமின் கழகம்” ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. அணு உலையையே முற்று முழுதாக அகற்றவேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அணுக்கழிவுகளைக் சேமித்து வைக்கும் அணுக்கழிவு மையங்களை கூடங்குளத்தில் அமைக்க இந்திய … Read more

“Pondicherry” : ‘லட்சுமி’ யானை, கடற்கரை சாலை .. புதுவையை கண்முன் கொண்டு வரும் மராத்தி படம்

கைபேசி செல்லுலார் போனை உருவாக்கிய அமெரிக்க பொறியாளர் மார்ட்டின் கூப்பர் கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டார். அன்றைய தேதிக்கு அது தொலைபேசி அழைப்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் அது பல்வேறு பரிணாம வளர்ச்சியை பெற்று ஸ்மார்ட் போனாக தற்போது உருவெடுத்துள்ளது.  இந்த நிலையில், முழுக்க முழுக்க ஸ்மார்ட் போனை பயன்படுத்தி ‘பாண்டிச்சேரி’ என்ற முழுநீள திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயருக்கு ஏற்ப குட்டி பிரான்ஸ் என போற்றப்படும் புதுச்சேரி நகரில் இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் … Read more

பெரியகுளம்: சக்கர நாற்காலி வழங்காததால் தவழ்ந்துசென்று வாக்களித்த மாற்றுத்திறனாளிப் பெண்

பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சக்கர நாற்காலி வழங்காததால் தவழ்ந்து சென்று வாக்களித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக தனியாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை பகுதியில் உள்ள 18வது வார்டு சுப்பிரமணிய சாவடியை தெருவில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வேல்மணி என்ற பெண் மாற்றுத்திறனாளி வந்தபோது சக்கர … Read more