’வேலைவாய்ப்பு எங்கே?’ ராஜ்நாத் சிங்கை பேசவிடாமல் கோஷமிட்ட இளைஞர்கள் – உ.பி.யில் பரபரப்பு

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச தொடங்கிய போது, அவரை பேசவிடாமல் அங்கிருந்த இளைஞர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அங்கு ஆளுங்கட்சியான பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக சார்பிலான பொதுக்கூட்டம் பிஜ்னோரில் இன்று … Read more

'மிஸ் யூ அப்பா!..லவ் யூ' – தந்தையின் திருமண நாளில் பிரியங்கா சோப்ரா உருக்கம்

தனது பெற்றோரின் திருமண நாளையொட்டி பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை கடந்த 2013ம் ஆண்டு உயிரிழந்தார். அப்போது பிரியங்காவுக்கு 20வயது. தனது தந்தையின் இறப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தந்தையின் வெற்றிடத்தை நிரப்ப அவர் ஏங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில், தனது பெற்றோரின் திருமண நாளையொட்டி, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அத்தோடு நாஸ்டாலஜி புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், அவரது தந்தை, தாய் மது அகோரி … Read more

திருமங்கலம் நகராட்சியின் 17வது வார்டில் மறு வாக்குப்பதிவு – தேர்தல் அலுவலர் பரிந்துரை

மதுரை திருமங்கலம் நகராட்சியின் 17-வது வார்டில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் அலுவலர் பரிந்துரைத்துள்ளார். 27 வார்டுகளை உள்ளடக்கிய திருமங்கலம் நகராட்சியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 17 வது வார்டுக்குட்பட்ட பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் கள்ள வாக்கு பதிவாகி உள்ளதாக வேட்பாளர்கள் புகார் எழுப்பப்பட்டது. புகாரை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் டெரன்ஸ் லியோன் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளார். மறு வாக்குப்பதிவிற்கான தேதி குறிப்பிடப்படாத நிலையில் மாநில தேர்தல் ஆணையம் மறு … Read more

இந்திய கோடீஸ்வரர்களின் குழந்தைகள் கல்வி கற்க விரும்பும் நாடுகள் எவை? – ஆய்வறிக்கை

இந்தியாவின் 70% மில்லியனர்கள் தங்கள் குழந்தைகளை கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப விரும்புகின்றனர் என ஹுருன் இந்தியா வெல்த் 2021 ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது ஹுருன் இந்தியா வெல்த் 2021 ஆய்வறிக்கையின்படி (Hurun India Wealth Report 2021) இந்தியாவின் 70% மில்லியனர்கள் தங்கள் குழந்தைகளை கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப விரும்புகின்றனர் எனவும், இதில், 29% பேர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக அமெரிக்காவை விரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குழந்தைகளின் கல்விக்காக 19% பேர் இங்கிலாந்தை விரும்புகிறார்கள் எனவும், 12% பேர் நியூசிலாந்தை … Read more

”அஜித் தேர்தலில் வாக்களிக்காததற்கு இதுதான் காரணம்” – டி.ராஜேந்தர் பேட்டி

“அஜித் தேர்தலில் வாக்களிக்காததற்கு கொரோனா பரவலே காரணம்” என்று கூறியுள்ளார் டி.ராஜேந்தர். கோடம்பாக்கம் மண்டலம் தி.நகர் பகுதியில் 117 வது வார்டில் இந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் வாக்களித்தார்.  ’நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திரைப் பிரபலங்கள் பலர் வாக்களிக்காதது ஏன்?’ என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசினார். ”சிம்பு ’வெந்து தணிந்தது காடு’ மற்றும் தனியார் விளம்பர படபிடிப்பின் காரணமாக மும்பையில் உள்ளதால் வாக்கு செலுத்த இயலவில்லை. இருந்தபோதிலும் தொடர்பு கொண்டு ஜனநாயக கடமையை … Read more

க்யூஆர்கோடு டோக்கன் வழங்கிய விவகாரம் – அதிமுக வட்டச்செயலாளரிடம் விசாரணை

சென்னை மயிலாப்பூரில் க்யூ ஆர் கோடு டோக்கன் வழங்கிய அதிமுக வட்டச் செயலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவில் வீடு வீடாக டோக்கன் கொடுக்கப்படுவதாக 9-வது மண்டல பறக்கும்படை தேர்தல் அதிகாரி தேவகுமாரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் மயிலாப்பூர் போலீசார் மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவிற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அதிமுகவைச் சேர்ந்த 124-வது வட்ட செயலாளர் தங்கதுரை என்பவர் … Read more

ஆசியாவிலேயே பெரிய சாண எரிவாயு ஆலை – இந்தூரில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆசியாவிலேயே பெரிய சாண எரிவாயு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்தியாவில் குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதற்காக ‘தூய்மை இந்தியா 2.0’ திட்டம் மத்திய அரசால் அண்மயைில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரூ.150 கோடி செலவில் சாண எரிவாயு ஆலை கட்டப்பட்டு வந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய இந்த ஆலை கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, அதனை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து … Read more

வழக்கறிஞராக கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ்: ‘வாஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

டொவினோ தாமஸ் – கீர்த்தி சுரேஷின் ‘வாஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் ‘சாணிக்காயிதம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, மலையாளத்தில் ‘வாஷி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ’வாஷி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தினை கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழனான விஷ்ணு ராகவ் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் மேனன் தயாரித்துள்ளர்.நாயகனாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். சமீபத்தில், டொவினோ தாமஸ் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘காணே … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிந்துவரும் நிலையில், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என தெரியவந்துள்ளன. தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, தற்போது விறுவிறுபபடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைத்து … Read more

’அண்ணன தாலாட்டும்’: தனுஷின் ‘மாறன்’ இரண்டாவது பாடல் வெளியீடு

தனுஷின் ‘மாறன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின், முதல் பாடலான ‘பொல்லாத உலகம்’ குடியரசு தினத்தையொட்டி வெளியான நிலையில், இன்று ’அண்ணன தாலாட்டும்’ பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. அண்ணன் தங்கை பாசத்தை உருக்கமுடன் வெளிப்படுத்தும் இப்பாடலை கவிஞர் … Read more