நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 21.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, மாநகராட்சிகளில் 17.93%, நகராட்சிகளில் 24.53%, பேரூராட்சிகளில் 28.42% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அரியலூரில் 30.79 சதவிகித வாக்குகள் … Read more

இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா – இன்றைய பாதிப்பு முழு விபரம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 22,270 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஜனவரி மாதத்தில் 3-வது அலையின்போது உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மளமளவென குறைந்து வருகிறது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 25 … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்; முழு விவரம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு காலை 9 மணி நிலவரப்படி, சராசரியாக 8.21 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, மாநகராட்சிகளில் 5.78%, நகராட்சிகளில் 10.32%, பேரூராட்சிகளில்  11.74% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 3.96 … Read more

பெரம்பலூர் வாக்குச்சாவடியில் அதிமுக, தேமுதிகவினர் வாக்குவாதம்

பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் பிற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் இருப்பதாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 12,838 உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களிலும் காலை 7 மணி … Read more

காதல் திருமணம் செய்து தலைமறைவான கணவன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்

திருவள்ளூர் அருகே காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்து தலைமறைவான கணவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டித்து காதலன் வீட்டு முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் லட்சுமி (23). டிப்ளமோ நர்சிங் முடித்துள்ள இவரும், வீட்டுக்கு அருகில் உள்ள சின்னராசு என்ற இளைஞரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் போளிவாக்கத்தில் உள்ள அமேசான் விநியோக பிரிவில் வேலை … Read more

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் புதிய அப்டேட் – இயக்குநர் தியாகராஜன் தகவல்

பிரசாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ‘அந்தகன்’ திரைப்படத்தின், புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றப் படம் ‘அந்தாதுன்’. இந்தப் படம் தமிழில், ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை தியாகராஜன் இயக்க, பிரசாந்த் நடிக்கிறார். ‘அந்தகன்’ படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வனிதா, கார்த்திக், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலர் நடித்து … Read more

பிறந்தநாளில் வெளியாகும் ஷங்கரின் ‘ராம் சரண் 15’ டைட்டில் லுக்

‘ராம் சரண் 15’ படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குநர் ஷங்கரின் ‘ராம் சரண் 15’ படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில், நாயகியாக கியாரா அத்வானி நடிக்க தமன் இசையமைக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்திற்கு, இயக்குநர் கார்த்திக் … Read more

''ஒரு தயாரிப்பாளராக நான் தோற்றுவிட்டேன்'' – விஷ்ணுவிஷால் வேதனை

FIR திரைப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளையும் ஒரே மேடையில் சேர்க்க முடியவில்லை என விஷ்ணு விஷால் வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விஷயத்தில் தான் தயாரிப்பாளராக தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்த எஃப்.ஐ.ஆர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றியடைந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை விஷ்ணு விஷால், இயக்குநர் ஆனந்த், நடிகை ரைசா வில்சன் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். அதில் பேசிய நடிகர் விஷ்ணு, விஷால் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை … Read more

எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சை பொய்யர் – ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

“தான் ஒரு பச்சை பொய்யர் என்பதை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் நிரூபித்திருக்கிறார்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான், 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல் எப்படி நேர்மையாக நடத்தப்பட்டதோ, அதேபோல நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும். கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி … Read more

'புதிய அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது' – கேரள ஆளுநரின் உரைக்கு தமிழக அரசு கண்டனம்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டப்படும் என கேரள ஆளுநர் உரையில் தெரிவித்ததற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள சட்டப் பேரவையின் நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உரையாற்றினார். அப்போது, “கேரள மக்களின் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம் என்பது மாநில அரசின் பெரும் கவலையாகும். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து, அண்டை மாநிலமான தமிழகத்திற்கு தேவையான … Read more