அதிகரிக்கும் ஆன்லைன் புத்தக வாசிப்பு – மாற்றம் கொண்டுவருமா சென்னை புத்தகக் காட்சி?

கடந்த ஐந்து வருடங்களாக ஆன்லைன் புத்தக விற்பனை அதிகரித்து வரும் நிலையில், குறைவான சலுகை விலையில், நிறைவான புத்தகங்கள் சென்னை புத்தக காட்சியில் இடம் பெற்றுள்ளது. தமிழ் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனை துறையை இந்த புத்தக கண்காட்சி மீட்டுருவாக்கம் செய்யும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் 25 நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றாலும் புத்தகங்களின் தலைப்புகள், அரங்கங்களின் அமைப்புகள் போன்றவற்றில் சென்னை புத்தக கண்காட்சியே வாசகர்களுக்கு நல் விருந்தாக அமைகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா … Read more

போக்சோ குழந்தைகளை காக்கவே தவிர, காதலிக்கும் இளைஞர்களுக்கு அல்ல! – அலகாபாத் உயர்நீதிமன்றம்

போக்சோ சட்டம் என்பது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டதே தவிர, ஒருவரைக்கொருவர் காதலிக்கும் இளைஞர்களுக்கானது அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், 14 வயது சிறுமியை, சிறுவன் ஒருவன் காதலித்துள்ளான். இவர்களில் சிறுவன் உயர் வகுப்பைச் சேர்ந்தவராகவும், சிறுமி பட்டியலினத்தை சேர்ந்தவராகவும் இருந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெற்றோரிடம் இருந்து எதிர்ப்பு வரவே, இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி, கோயிலில் திருமணம் செய்து கொண்டு, 2 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளனர். இந்த சமயத்தில் இவர்களுக்கு, … Read more

தீபாவளிக்கு ’அஜித் 61’ : 2023 பொங்கலுக்கு ‘அஜித் 62’ ரிலீஸ் – அடுத்தடுத்த அப்டேட்

கொரோனா சூழலால் ‘வலிமை’ படப்பிடிப்புத் தாமதமானதால் அஜித்தின் அடுத்தடுத்தப் படங்களை உடனுக்குடன் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு இரண்டரை ஆண்டுகள் கழித்து ‘வலிமை’ வெளியாகிறது. இரண்டரை ஆண்டு காத்திருப்பு என்பதால் அஜித் ரசிகர்கள் கொதித்தெழுந்த விஷயங்கள் தமிழகமே அறிந்தவை. அதனால், ’அஜித் 61’, ‘அஜித் 62’ படக்குழுவினர் வரும் தீபாவளிக்கும், 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கும் அடுத்தடுத்தப் படங்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் … Read more

பரிசுப்பொருளுக்கு அடகு வைத்துவிடாதீர்கள் – வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 17-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…  வாக்காளர்கள் எதன் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. … Read more

இன்று முதல் அமலுக்கு வந்தது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம்

மத்திய அரசு அமைத்துள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்கான சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு மாநில அளவில் அணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உரிமையாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு குறித்த புள்ளிவிவரங்களை வகுக்க சட்டம் வகை செய்கிறது. அதன்படி அமைக்கப்பட்ட ஆணையம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக மத்திய ஜல் சக்தி … Read more

உடல்நலம் சரியில்லாத நிலையில் 'இரை' வெப்சீரிஸில் நடித்தார் சரத்குமார் – ராதிகா பேச்சு

”’இரை’ வெப் சீரிஸில் உடல்நலம் சரியில்லாதபோது சரத்குமார் நடித்தார்” என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். தூங்காவனம், கடாரம்கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, தற்போது ‘இரை’ என்ற இணையத்தொடரை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கும் இந்த இணையத் தொடரில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ’இரை’ இணைய தொடருக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசி கலை இயக்கம் செய்ய. சில்வா மாஸ்டர் சண்டைப்பயிற்சிகளையும், ஷான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர். … Read more

வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த சாரைப்பாம்பு: அச்சத்துடன் பணியாற்றும் ஊழியர்கள்

கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் நகராட்சி வாக்கு எண்ணும் மைய பணியின்போது பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம், வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தை கடந்த 10 நாட்களாக தயார் செய்து வரும் நிலையில், இன்று இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரி கார்டுகளையும், மர பலகைகளையும் தொழிலாளர்கள் எடுத்தனர். அப்போது … Read more

2-வது முறையாக இணையும் சுசீந்திரன்-ஜெய் கூட்டணி

‘வீரபாண்டியபுரம்’ படத்திற்குப் பிறகு, சுசீந்திரன் – ஜெய் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இந்தப் படத்திற்குப் பின் சுசீந்திரன் இயக்கி, திரையரங்குகளில் நேற்று வெளியாகியுள்ளப் படம் ‘வீரபாண்டியபுரம்’. இந்தப் படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஜெய்யின் 30-வது படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில், இசையமைப்பாளராகவும் அவர் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் மீனாக்ஷி கோவிந்தராஜன், அகான்ஷா சிங், பால சரவணன், காளி … Read more

சென்னை: 2021-ல் சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

இலங்கை கடற்படையால் 2021 ஆண்டு சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட் நிலையில், இன்று அதிகாலை விமானம் மூலம் தமிழகம் திரும்பினர். கடந்த டிச.19, 2021ல் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 56 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், 27 பேர் ராமநாதபுரத்தையும், 20 பேர் புதுக்கோட்டையையும் சேர்ந்தவர்கள். மீனவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ராமேஸ்வரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் … Read more

அந்தமான்: போர்ட் பிளையர் விமான நிலையம் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அந்தமான் போர்ட் பிளையர் விமான நிலையம், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு செவ்வாய் தொடங்கி வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் நான்கு நாட்கள் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு சுற்றுலாப் பயணிகள் பயணத் திட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என அந்தமான் சுற்றுலா துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: காவி கொடி குறித்து சர்ச்சை பேச்சு: சட்டப்பேரவைக்குள் உறங்கி … Read more